Pages

Wednesday 30 March 2016

கிழக்கு வாசல் படத்தின் மாபெரும் வெற்றி

தயாரிப்பாளர் ஜி.தியாகராஜனின் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இசைஞானி இளையராஜாவை வைத்துப் பண்ணிய வெற்றிப்படங்களில் "கிழக்கு வாசல்" பெரு வெற்றி கண்ட படமாக அமைந்து சாதனை படைத்தது. கார்த்திக், ரேவதி ஆகியோரின் சினிமாப் பயணத்தில் தவிர்க்க முடியாத படமாக இது இன்றளவும் இருக்கின்றது. "தாங்கிடத்தத்த தரிகிட தத்த" என்று சந்தம் போட்டு நெஞ்சின் கதவுகளைத் தட்டி உள்ளே சென்று உட்காரும் "அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" பாடலாகட்டும் சித்ராவின் தேன் குரலில் "வந்ததேஏஏஏஏ குங்குமம்" என்ற மெல்லிசையாகட்டும் படத்தில் மீதமுள்ள பாடிப் பறந்த கிளி உள்ளிட்ட எல்லாப் பாடல்களையும் சேர்த்து கிழக்கு வாசல் படத்தின் பாடல்கள் தங்கக் கிரீடம் சூட்டவேண்டிய தராதரம்.


"வந்ததே குங்குமம்" பாடலை இன்னொரு ஸ்பெஷல் பதிவுக்காக மனதில் ஒதுக்கி வைத்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக "பச்சமலப்பூவு நீ உச்சி மலைத் தேரு" பாடலை பாடல் ஒலி நாடாவில் இரண்டு பக்கமும் ஒலிப்பதிவு செய்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கேட்டு ரசித்ததாக அன்றைய காலகட்டத்தில் அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் ஒரு மேடை நிகழ்ச்சியில் சொல்லியிருந்தது ஞாபகத்து வருகின்றது. கிழக்கு வாசல் பாடல்களில் எதை இங்கே கொடுப்பது என்று வரும் போது ஓரவஞ்சனையுடன் "பச்சமலைப் பூவு" தான் வந்து விழுகிறது. 

இளையராஜா - ஆர்.வி. உதய குமார் கூட்டணியின் வெற்றி படங்கள்

எண்பதுகளின் தமிழ் சினிமாவின் அறிமுக இயக்குனர்களின் பெருங்கனவாக இருந்தது இசைஞானி இளையராஜாவோடு சேர்ந்து படம் பண்ணவேண்டும் என்பது தான். தமிழ் சினிமாவின் முன்னணி ஏழு நட்சத்திரங்களில் இருவர் பிரபு, கார்த்திக் ஆகியோரை வைத்து ஆர்.வி.உதயகுமார் கொடுத்த படம் "உரிமை கீதம்" அந்தப் படத்துக்கு ஆபாவாணன் வழியில் இசையமைப்பாளர்கள் மனோஜ் கியானை இசைக்க வைத்தார். தொடர்ந்து "புதிய வானம்" படத்தில் சிவாஜி,சத்யராஜை இயக்கிய போதும் அவர் தேர்ந்தெடுத்தது இசையமைப்பாளர் ஹம்சலேகாவை. ஒரு படம் இடைவேளைக்குப் பின் மீண்டும் தன் வழக்கமான இரட்டை நாயகர்கள் செண்டிமெண்டில் வந்த படம் "உறுதிமொழி"


இதில் சிவகுமார், பிரபு முக்கிய நாயகர்கள். ஆர்.வி.உதயகுமாரோடு திரைப்படக் கல்லூரி மாணவராக இருந்து வெளியே வந்து ஒளிப்பதிவாளராக இயங்கிய ரவி யாதவ், இவரின் தயாரிப்பில் வந்த படமே உறுதிமொழி. இப்போது ரவி யாதவ் முழுமையாகத் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி மும்பை சென்று விட்டார். கிழக்கு வாசல் கொடுத்த பெருங்கவனிப்போடு ஒப்பிடுகையில் உறுதிமொழி திரைப்படம் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் இந்தப் படத்தில் வந்த "அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா" பாடல் அந்த நாளில் சென்னை வானொலியில் திரைகானத்திலும், நேயர் விருப்பத்திலும் ஒலித்துத் தன் இருப்பைக் காட்டியது இன்னும் இந்த ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி கொடுத்த இந்த ஜோடிப்பாட்டை நேசிப்பவர்கள் நெஞ்சாங்கூட்டில் வைத்திருப்பர். 

Friday 11 March 2016

சமாதான தூதுவன் - பிரெட்ரிக் பாஸி

உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் 1901-ஆம் ஆண்டு அமைதிக்கான முதல் நோபல் பரிசை வென்ற பிரெஞ்சு நாட்டவரான பிரெட்ரிக் பாஸி. அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தைத் தோற்றுவித்ததற்காக அதே ஆண்டில் ஹென்றி டுனான்டிற்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


உலக நாடுகளிடையே போர் ஏற்படுவது தவிர்க்க முடியாதது அத்தகைய போர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்ற அடிப்படையில்தான் செஞ்சிலுவை சங்கத்தைத் தொடங்கினார் ஹென்றி டுனாண்ட். ஆனால் பிரெட்ரிக் பாஸி ஒருபடி மேலே சென்று நாடுகளிடையே போர் ஏற்படுவதற்கான அடிப்படைகளை அடையாளம் கண்டு போர்களை அறவே ஒழித்து நாடுகளிடையே சமாதானம் நிலவ வழிவகை செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதனால பெரும் முயற்சி மேற்கொண்டு போரை விரும்பாத நாடுகளை ஒன்றாக அணி சேர்த்து நடுநிலை சமாதான நாடுகள் எனும் அனைத்துலக அமைப்பை உருவாக்கினார்.


பாஸியின் பெரும் முயற்சியால் 1889-ஆம் ஆண்டு பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், ஹங்கேரி, பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி Inter-Parliamentary Union என்ற அனைத்துலக பாராளுமன்றத்தை உருவாக்கினர். அதன் மூன்று தலைவர்களில் ஒருவராக பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சங்கம் நாடுகளுக்கிடையே உருவாகும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நடுநிலை சங்கமாக இன்றும் செயல்பட்டு வருகிறது.

நான்கு கன்றுகளை ஈன்ற மாடு

கனடாவில் சஸ்கற்சுவானின் தென்கிழக்கு பாகத்தில் அமைந்துள்ள பண்ணை ஒன்றில் ஐந்து வயது பசு ஒன்று ஆரோக்கியமான நான்கு கன்று குட்டிகளை ஈன்றுள்ளது. இரண்டு பெண்களும் இரண்டு ஆண்களும் ஒவ்வொன்றும் 23கிலோகிராம் எடையுடன் பிறந்துள்ளன. முதல் மூன்று கன்றுகளும் பிறந்து 30நிமிடங்களின் பின்னர் நான்காவது கன்று பிறந்துள்ளது. தாயும் குழந்தைகளும் ஆரோக்கியமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


சோப்பின் வரலாறு தெரியுமா?

சுமார் 2500 ஆண்டுகளுக்கும் மேலாக மனிதர்கள் பயன்படுத்தி வருகிறார்கள் என்பது தான் உண்மை.பண்டைய பாபிலோனியர்கள் என்னும் தற்போதைய ஈராக்கியர்கள் தான் உலகிலேயே முதன் முதலில் சோப்புகளை தயாரித்து பயன்படுத்தியவர்கள் ஆவர். மெசபடோமியப் பிரதேசத்தின் புகழ் பெற்ற பேரரசுகளில் ஒன்றான பாபிலோனிய பேரரசின் (தற்போதைய ஈராக்கின் அல்ஹில்லாஹ் மற்றும் பாபில் புரோவின்ஸ்) கடைசி அரசரான நபோனிதஸ் (கி.மு.556 – கி.மு.539) ஆட்சிக்காலத்தில் அரண்மனையில் பணிப்பெண்களாக வேலை பார்த்து வந்த பெண்கள், எரிந்த மரங்களின் சாம்பலை பயன்படுத்தி சலவைக்கற்களின் (Marble) மீது படிந்திருந்த கறைகளை சுத்தம் செய்தனர். இதனை ஒரு நாள் தற்செயலாக பார்வையிட்ட நபோனிதஸ் இது குறித்து தன்னுடைய அரண்மனை ரசவாதிகளிடம் (வேதியியலாளர்கள்) விவாதம் செய்தார். இந்த நிகழ்வுதான் சோப்பு தயாரிப்பிற்கு வித்திட்டது.


இது குறித்து ஆராய்ந்த அன்றைய பாபிலோனிய வேதியியலாளர்கள், கறைகளை அகற்றி சுத்தம் செய்வதற்க்காக ஒரு பொருளை உருவாக்கிட வேண்டும் என்று ஆவல் கொண்டனர். அந்த பொருள் தண்ணீரில் கரையக் கூடியதாக இருக்க வேண்டும் அதே நேரம் இலகுவாக கரைந்துவிடாமலும் இருக்க வேண்டும், மிக முக்கியமாக அது கறைகளையும் அகற்றவேண்டும் என்பது அவர்களின் முன்னின்ற சவாலாக இருந்தது. அதனை தொடர்ந்து, சாம்பலுடன், விலங்குகளின் கொழுப்புகளில் இருந்து பெறப்பட்ட கொழுப்பு எண்ணெய், மெழுகு, மற்றும் உப்பு இவற்றுடன் தண்ணீரையும் சேர்த்து ஒரு காரகரைசல் தயாரிக்கப்பட்டது.


தயாரிக்கப்பட்ட இந்தக் காரகரைசலை சூடுபடுத்தி கொதிக்க வைத்து வற்றச் செய்தனர். காரகரைசல் வற்றி தின்ம நிலையை அடைந்ததும் அவை சிறுசிறு துண்டுகளாக வெட்டப்பட்டது. இதுதான் மனிதன் முதலில் தயாரித்த சவர்க்காரம் (soap) ஆகும். தயாரித்த சோப்புகள் முதலில் தரையை சுத்தம் செய்யவும் பின்பு ஆடைகளை சுத்தம் செய்யவும் இறுதியாக குளிக்கவும் பயன்படுத்தினார்கள். பின்னர் இத்தொழில்நுட்பம் சில வணிகர்களின் வாயிலாக சிரியா, ரோம், எகிப்த்து மற்றும் மொரோக்கோ வரை சென்றடைந்தது.

Thursday 10 March 2016

ஜாக்கி சான் அளித்த பரிசு

அனேகன் படம் மூலம் தனுஷுக்கு ஜோடியாக தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். இந்தி நடிகையான அமைரா தஸ்தூர் தற்போது இந்தியா-சீனா கூட்டு தயாரிப்பில் உருவாகி வரும் ‘குங்பூ யோகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜாக்கி சான் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக அமைரா நடித்து வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் கடும் பனிப்பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது.


இப்படத்தில் நடிப்பதற்கு மூன்று மாதங்கள் முன் ஜாக்கி சான் குழுவில் அமைரா கராத்தே பயிற்சி எடுத்துக் கொண்டார். தன்னிடம் சிறந்த முறையில் பயிற்சி எடுத்துக் கொள்பவர்களுக்கு ஜாக்கி சான் விலை உயர்ந்த பொருளை பரிசளிப்பது வழக்கம். அந்த வகையில் தன் குழுவினருக்காக தானே வடிவமைத்த விலை உயர்ந்த, குளிருக்கு அணியும் ஜாக்கெட் ஒன்றை அமைராவிக்கு பரிசளித்திருக்கிறார். இதனை சந்தோஷமாக பெற்றுக் கொண்ட அமைரா அதை பெரிய பொக்கிஷமாக பாதுகாத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

அதிக செலவில் அமைக்கப்பட்ட ரயில் நிலையம்

உலகின் அதிகச் செலவில் அமைக்கப்பட்ட ரயில் நிலையம் அமெரிக்காவில் திறக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டிருக்கும் உலக வர்த்தக நிலையப் போக்குவரத்து மையம், 2001-ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 தாக்குதல் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரத்துக்கு அருகில் உள்ளது.


நாள்தோறும் 200 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அந்த நிலையத்தைப் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலையத்தை அமைப்பதற்கு 2 பில்லியன் டாலர் செலவாகும் என ஆரம்பத்தில் முன்னுரைக்கப்பட்டது. இறுதியில் அது 3.85 பில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. திட்டமிட்டதைத் காட்டிலும், ஏழாண்டுக்குப் பிறகு அந்த நிலையம் தயாராகியுள்ளது.

உயிருள்ள எலியை சாப்பிடும் மனிதன்

ஆஸ்திரேலியாவில் உள்ள பாரிஸ்பேன் நகரை சேர்ந்தவர் மாத்யூ மலோனி (24). இவர் உயிருள்ள எலியின் தலையை கடித்து கொன்று தின்கிறார். அக்காட்சியை வீடியோ ஆக எடுத்து ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் ஒளிபரப்பி வருகிறார். அந்த வீடியோவில் அவர் தனது அறைக்குள் நுழைகிறார். உயிருடன் தயாராக இருக்கும் எலியை பிடித்து ‘ஒட்கா’ மதுவால் கழுவுகிறார். பின்னர் அதன் தலையை ‘நறுக்’ என கடித்து மென்று சாப்பிடுகிறார்.


இதற்கு ‘மேட் மாத்’ என பெயரிட்டுள்ளார். அந்த வீடியோவை 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். இவரது இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மிருக நலஆர்வலர்கள் இவர் மீது போலீசில் புகார் செய்தனர். அதை தொடர்ந்து அவர் மீது மிருகவதை சட்டத்தின் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை தொடர்ந்து மாத்யூ மலோனி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கு ஏப்ரல் 6–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Monday 7 March 2016

2000 ஆண்டுகள் பழமையான மாணிக்கம் கண்டுபிடிப்பு

கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்ஸி மாகாணத்தில் 2000 ஆண்டு பழமையான பச்சை மாணிக்கக் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லை மார்க்குயிஸ் ஹைஹன் என்ற பேரரசர் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இவர் தன்னுடைய வாழ்நாளில் 29 நாட்கள் மட்டுமே பேரரசராக பதவி வகித்துள்ளார். சீனாவில் நடைபெற்ற தொல்பொருள் கண்காட்சியில் மக்களிடையே அதிக வரவேற்பை இது பெற்றுள்ளது.


வியக்க வைக்கும் 3டி ஓவியக் கண்காட்சி

துபாயில் கேன்வாஸ் திருவிழா தொடங்கியுள்ளது. மார்ச் 14ந்தேதி வரை இவ்விழா நடைபெற உள்ளது ஜெபிஆர் எனப்படும் ஜீமைரா பீச் ரெசிடென்ஸ் பகுதியில் நடைபெற்று வரும் இவ்விழாவில் அப்பகுதி  சாலை மற்றும் சுவர்களில் கண்கவர் ஓவியங்கள் 3டி தொழில் நுட்பத்தில் வரையப்பட்டு பொதுமக்களின் பார்வைக்கு வைக்கப்பட்டுள்ளது.


ஒரு ஆழ்ந்த பள்ளத்தில் குதித்து குதிரைகள் மீது சவாரி, பாண்டாக்கள், குரங்குகள், விளையாடி பறக்கும் டால்பின்கள் துரத்துவதை, மாபெரும் அன்னம் சவாரி ,சிறுத்தை பாவனை, நீர்வீழ்ச்சிகள் என பல்வேறு ஓவியங்கள் நேரில் தோன்றுவது போது மிக சிறப்பாக தத்ரூபமாக வரையபட்டுள்ளது.  உலகம் முழுவதுமிருந்து 3டி தொழில் நுட்ப ஓவியர்கள் இதில் பங்கேற்றுள்ளனர்.

மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

1 கோடி மக்கள் ரசித்த அஜித் பாடல்

சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜீத், ஸ்ருதி ஹாசன், லட்சுமி மேனன், சூரி, அஸ்வின் ஆகியோர் நடிப்பில் வெளியாகி ஹிட்டடித்த படம் வேதாளம். 2 வது முறையாக சிவா இயக்கத்தில் அஜீத் நடித்த இப்படம் கடந்த ஆண்டின் ஹிட் படங்களில் ஒன்றாக மாறியது. வேதாளம் படத்தில் இடம்பெற்ற ஆலுமா டோலுமா பாடலின் வரிகள் அடங்கிய வீடியோ, இணையத்தில் ஒருகோடி பார்வைகளைத் தாண்டி சாதனை படைத்துள்ளது. கடந்த தீபாவளி தினத்தில் வெளியாகி ஹிட்டடித்த வேதாளம் படத்தில் பாடல்களும் சூப்பர் ஹிட்டடித்தன. குறிப்பாக ஆலுமா டோலுமா பாடல் பெரியளவில் பேசப்பட்டது. இந்தப்பாடல் திரையரங்கில் பார்த்தவர்களை எழுந்து நடனமாடச் செய்தது. அந்தளவு துள்ளலான இசையைக் கொடுத்து அனிருத் அசத்தியிருந்தார்.




Sunday 6 March 2016

கூகுளின் புதிய கண்டுபிடிப்பு

புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகிறது கூகுள் நிறுவனம். அதன் தொடர்ச்சியாக மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கிடில் என்ற இணைய தளம் தான் அது. மிகவும் வண்ணமயமாக வேற்றுகிரகத்தின் பகுதியை போல், குழந்தைகள் ரசிக்குபடி அதன் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி அறிய விரும்பும் தளங்களைப் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பெற முடியும்.


மேலும், இணையதளத்தில் தேடுகையில், சிறுவர்கள் பார்க்கக் கூடாத தளங்கள் மறைக்கப்படும். குழந்தைகளும், சிறுவர்களும் பார்க்கக் கூடிய, தேடப்படும் பொருள் சார்ந்த தளங்கள் மட்டுமே காட்டப்படும். பொருத்தமில்லாத வார்த்தைகளை டைப் செய்தால், ‘நீங்கள் தேடுவது மோசமான வார்த்தைகள் போன்று தெரிகிறது. மீண்டும் முயற்சிக்கவும்’ என்ற செய்தி திரையில் தோன்றி எச்சரிக்கும். இந்த கிடில் தேடு எந்திரத்தை பயன்படுத்த தனியாக பதிவு செய்ய வேண்டியதில்லை. தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் சேகரிக்கப்படமாட்டாது. சர்வரில் உள்ள பதிவுகள் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை அழிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது கிடில்.

84 வயதில் மாடல் அழகியை திருமணம் செய்த ரூபர்ட் முர்டோக்

லண்டன்:சர்வதேச ஊடக தொழிலின் ஜாம்பவான் என புகழப்படும், ரூபர்ட் முர்டோக், மாடல் அழகி ஜெர்ரி ஹாலை, திருமணம் செய்து கொண்டார். 'டிவி' சேனல்கள், செய்தி தாள்கள் என, பல நாடுகளில் ஏராளமான ஊடகங்களை நடத்தி வருபவர், ரூபர்ட் முர்டோக், 84. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், அமெரிக்க குடியுரிமை பெற்றவர். ஏற்கனவே, மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். முர்டோக்கின் முதல் மனைவி பாட்ரிகா புக்கர், இரண்டாவது மனைவி அன்னா போர்ல், மூன்றாவது மனைவி வெண்டி டெங். மூன்று மனைவியர் மூலம் அவருக்கு, ஆறு குழந்தைகளும் உள்ளனர்.


இந்நிலையில், ஹாலிவுட் நடிகையும், முன்னாள் மாடல் அழகியுமான ஜெர்ரி ஹாலுடன், அவருக்கு காதல் ஏற்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை ஜெர்ரி ஹாலும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். கடந்த ஆண்டு காதலிக்க துவங்கிய இந்த ஜோடி, திருமணம் செய்ய உள்ளதை, கடந்த மாதம் அறிவித்தனர். லண்டனில் அவர்களது திருமணம் நடைபெற்றது. எளிய திருமண நிகழ்ச்சியில், முர்டோகின், நான்கு மகள்களும், ஜெர்ரி ஹாலின், இரண்டு மகள்களும் பங்கேற்றனர்.

Saturday 5 March 2016

அதிக அபராதம் கட்டிய ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் தயாரிப்புகளை உருவாக்கும் போது அதன் தரத்தில் எவ்வித சமரசமும் செய்துக்கொண்டது இல்லை. தான் விரும்பியதை சாதிக்க எந்த எல்லைக்கும் போக தயாராக இருந்தார். அவரின் இந்த பிடிவாத குணம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. தனது காரை பொது இடத்தில் பார்க் செய்யும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றக் கூடாது என்பதில் ஸ்டீவ் ஜாப்ஸ் பிடிவாதமாக உள்ளார் என்று கிண்டல் செய்யும் அளவிற்கு, தனது காரை கண்ட இடங்களில் நிறுத்துவது அல்லது மாற்று திறனாளிகளுக்கான இடங்களில் காரை நிறுத்துவது என்று அட்டகாசம் செய்துள்ளார் ஸ்டீவ் ஜாப்ஸ்.


இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோ நகராட்சி வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு அனைவர் முகத்திலும் புன்னகையை வரவழைத்துள்ளது. சான் பிரான்சிஸ்கோ நகராட்சி நிர்வாகம், அதிகமாக வாகன நிறுத்த அபராதம் செலுத்தியவர்களிடம் அந்த தொகையை திருப்பி அளிக்க முடிவு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.


இந்த பட்டியலில் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் பெயர் இடம்பெற்றுள்ளது.  ஸ்டீவ் ஜாப்ஸ் 176 டாலர் கூடுதலாக அபராதம் கட்டியுள்ளார். இந்த தொகையை ஸ்டீவ் குடும்பத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை பின்பற்றாத ஸ்டீவ் ஜாப்ஸ், விதிக்கப்பட்டதை விட அதிக அபராதம் கட்டியுள்ளது பலருக்கு ஆச்சிரியம் அளித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மோசமான விமான சேவை நிறுவனங்களின் பட்டியல்

உலகிலேயே மிக மோசமான, தரமற்ற சேவைகளை வழங்கும் விமான நிறுவனமாக வட கொரியா அரசாங்கத்திற்கு சொந்தமான ஏர் கொர்யோ விமான நிறுவனம் தொடர்ந்து 4-வது முறையாக பயணிகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் என்ற விமான போக்குவரத்து ஆலோசனை நிறுவனம் உலகளவில் உள்ள 600 விமான நிறுவனங்களின் தரம் மற்றும் பயணிகள் சேவை குறித்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.


இந்த 600 விமான நிறுவனங்களில் வட கொரியா அரசாங்கத்திற்கு சொந்தமான ஏர் கொர்யோ(Air Koryo) விமான நிறுவனம் தான் தொடர்ந்து 4-வது முறையாக மிக மோசமான நிறுவனங்களில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. வட கொரியா என்றாலே முதலில் நினைவிற்கு வருவது 1995ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான உணவு பஞ்சமும், தற்போது அந்த நாட்டின் கொடுங்கோல் ஆட்சியாளரான கிம் யாங்-அன் தான். வறுமையில் இருந்து இன்றளவும் மீளாத உள்ள நிலையில், அடிப்படை வசதிகளை பெருக்காமல் தன்னுடைய ஆடம்பர வசதிகளில் அதிபர் கவனம் செலுத்தி வருவதும் இந்த பின்னடைவிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

தற்போது வரை ஏர் கொர்யோ நிறுவனத்தின் விமானங்கள் 6 நாடுகளில் உள்ள 14 விமான தளங்களுக்கு தனது சேவையை தொடர்ந்து வருகிறது. ஆனால், இந்த நிறுவனத்தில் பெரும்பாலான விமானங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. பல விமானங்கள் இன்னும் நவீனமயமாக்கப்படவில்லை. அதனால், விமானத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளின் திறன் மிக மிக குறைவு. இரண்டாவதாக, இந்த விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் மிகவும் மோசமானதாக உள்ளதாக பல பயணிகள் புகார்கள் தெரிவித்துள்ளதுடன் அதற்கான ஆதார புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.


சில பயணிகள் கூறுகையில், ஆசிய விமானங்கள் பலவற்றில் பயணம் செய்திருந்தாலும், வட கொரியாவின் விமானத்தில் வழங்கப்படும் உணவை போன்று ஒரு மோசமான சுவையில் வேறெங்கும் உணவு அருந்தியது இல்லை என கூறியுள்ளனர். மூன்றாவதாக, வட கொரியா விமானத்தில் பயணிகளுக்கு உதவும் பணிப்பெண்களின் சேவையும் முகம் சுழிக்கும் விதத்திலேயே உள்ளது என சில பயணிகள் வாக்களித்துள்ளனர். மேலும், விமானத்தில் அமர்ந்தவுடன் வட கொரிய தலைவர்களை பற்றி புகழ் பாடும் வீடியோக்கள் தான் விமானத்தில் காட்டப்படுவதால், அது பயணிகளை மிகவும் எரிச்சல் அடைய வைக்கிறது என கூறியுள்ளனர்.

Friday 4 March 2016

குயின் பட ரீமேக்கில் நயன்தாரா-பிரசாந்த்

குயின் படத்தின் ரீமேக்கில் பிரசாந்தும் இந்தி நடிகை நயன்தாராவும் நடிக்கிறார்கள். பாலிவுட்டில் வெளியாகி பெரும் வெற்றி பெற்ற திரைப்படம் குயின். ஹீரோயினுக்கு முக்கியத்துவம் வாய்ந்த கதையம்சம் கொண்ட இந்த படத்தில் கங்கனா ரனாவத் நடித்திருந்தார். கடந்த மார்ச் மாதம் 7-ஆம் தேதி ரிலீஸான இந்த திரைப்படம் கிட்டத்தட்ட ரூ 100 கோடி வசூலித்து கலக்கியது.




நாசாவின் புதிய கண்டுபிடிப்பு

நட்சத்திரங்களை ஆய்வு செய்ய 17 டன் எடையுள்ள தொலைநோக்கியுடன் ஜெட் விமானத்தில் பறக்கும் ஆய்வு மையத்தை நாசா ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் நாசா. இது, நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்காக 17 டன் எடையுள்ள தொலைநோக்கியுடன் கூடிய போயிங் ஜெட் விமானத்தை பறக்கும் விண்வெளி ஆய்வு மையமாக மாற்றியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இணையதளத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஒரு போயிங் 747 ரக ஜெட் விமானத்தை பறக்கும் விண்வெளி ஆய்வு மையமாக மாற்றியுள்ளது.


இதில் 17 டன் எடை மற்றும் 8 அடி நீளமுள்ள தொலைநோக்கியையும் நிறுவியுள்ளது. நட்சத்திரங்களை இந்த தொலைநோக்கி வழியாக பார்ப்பதற்கு ஏற்ற வகையில் 16க்கு 23 அடி உள்ள தானாக திறக்கும் கதவும் அமைக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கியை தரையில் இருந்து பயன்படுத்தும் போது, காற்று மண்டலத்தில் காணப்படும் தூசி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நட்சத்திரங்களை தெளிவாக காணமுடியாது. காற்று மண்டலத்திற்கு மேலே பறக்கும் திறனுடைய இந்த விமானம் தொடர்ந்து 12 மணிநேரம் 6,625 கடல் மைல் தொலைவுக்கு தொடர்ந்து பறக்கும் திறனுடையதாகும்.


தரையில் அமைக்கப்பட்டிருக்கும் தொலைநோக்கிகளை விட விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி இன்னும் தெளிவான காட்சிகளை காட்டும். இந்த திட்டம் வெற்றி யடைந்தால், 2015ம் ஆண்டிற்குள் இது போல் 100  முறை வானத்தில் பறந்து ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

உலக வர்த்தக மையத்தில் பேய் நடமாட்டம்

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. இதன் இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அந்த கட்டிடம் தகர்க்கப்பட்ட இடங்களிலிருந்து ஆவிகள் வெளியேறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பான வீடியோ பதிவு  ஒன்று வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.


குவிந்து கிடக்கும் இடிபாடுகளுக்கு இடையே வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் பறந்து செல்வதும், மீட்பு பணியில் ஈடுபட்டவர்களின் முகமும் இதில் பதிவாகியுள்ளது. அந்த  வீடியோவில் தெரிந்த ஆவி மர்மமாக இருந்து வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் 

வேலைக்கார பெண்ணை மாடலாக்கிய ஆடை வடிவமைப்பாளர்

பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் மன்தீப் நாகி தன்னுடைய புது ஆடைகளை பிரபலப்படுத்த வீட்டு வேலை செய்யும் பணிப் பெண் ஒருவரை மாடலாக தேர்ந்து எடுத்து உள்ளார். டெல்லியில் மன்தீப் நாகி தனது தோழியை பார்க்க சென்ற போது, கமலா-வை (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பார்த்துள்ளார். இதையடுத்து அவரை தனது புதிய ஆடைகளை பிரபலப்படுத்த மாடலாக பயன்படுத்தலாம் என்ற யோசனை அவருக்கு தோன்றியுள்ளது.


2 குழந்தைகளுக்கு தாயான கமலா, தன்னை மாடலாக அழைப்பதை கேட்டு ஆச்சர்யமடைந்துள்ளார். வடிவமைப்பாளர் மன்தீப் நாகி கூறுகையில், எங்களுடைய புதிய ஆடைக்கு நான் ஒரு புதிய மாடலை எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் கமலா இருந்தார். நான் முதலில் என் ஆசையை கமலாவிடம் கூறினேன். அவர் இதுபற்றி யோசிக்க ஒரு நாள் அவகாசம் கேட்டார். பின்னர் அவர் மொடலாக பணியாற்ற சம்மதம் தெரிவித்தார்.

தான் அணிய போகும் ஆடைகள் மற்றும் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றி கேள்வி எழுப்பினார்.அதைப் பற்றிய முழுதான விளக்கத்தை அளித்த பின்னர் அவர் முழுமனதுடன் மாடலிங்கிற்கு தயாரானார். இதையடுத்து நாங்கள் புகைப்படம் பிடிக்கும் வேலைகளை தொடங்கினோம்.அவருக்கு சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரம் செய்து புகைப்படம் எடுத்தோம்.


முதலில் கேமராவை பார்த்து தயங்கிய அவர், சிறிது நேரத்தில் தயக்கமின்றி போஸ் கொடுத்து உதவினார்.எனவே புகைப்படங்கள் அருமையாக வந்துள்ளது. மாடலிங் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. இந்த மாடலிங் சூட்டிங் மூலம் கமலா வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை என்னால் முழுவதுமாக கூற இயலாது. ஆனால் அவர் இந்த மாடலிங் அனுபவத்தை எளிதில் மறக்கமாட்டார் என கூறுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

உலக பணக்காரர்களின் பட்டியல்

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 16-வது முறையாக மீண்டும் முதல் இடத்தை தக்க வைத்தார் பில் கேட்ஸ். இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி 39-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

உலக அளவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலை பிரபல அமெரிக்க வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டது. உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துவந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இம்முறையும் அதே இடத்தில் நீடிக்கிறார். கடந்த 21 ஆண்டுகளாக பணக்காரர்களை பட்டியலிடும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் 16-வது முறையாக முதல் இடத்தை பில் கேட்ஸ் தக்கவைத்துள்ளார்.


பிப்ரவரி 13-ஆம் தேதி கணக்கின்படி, பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஓர் ஆண்டில் 3 பில்லியன் டாலர் உயர்ந்து 79 பில்லியன் டாலாராக உள்ளது. பில் கேட்ஸை தொடர்ந்து 2-வது இடத்தில் மெக்ஸிகோ தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் உள்ளார். 3-வது இடத்தில் அமெரிக்காவின் பெரும் முதலீட்டாலர் வாரண் பஃபெட் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 72.7 பில்லியன் டாலராகும்.

ஃபோர்ப்ஸின் நிலவரப்படி உலக அளவில் மொத்தம் 1,826 பணக்காரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையில் கடந்த ஓர் ஆண்டிலிருந்து 181 புதியவர்கள் இடம்பெற்றுள்ளனர்.


மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மிதக்கும் கப்பல் துறை

சீனா தனது கடற்படையை நவீனப்படுத்தும் முயற்சியாக மிதக்கும் கப்பல்துறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் கடற்கரையில் இருந்து அதிக தொலைவில் கடலுக்குள் இருக்கும் சேதமடைந்த போர்க்கப்பல்களை சீர் செய்திட முடியும் என அந்நாட்டின் மக்கள் விடுதலை ராணுவ செய்தி நிறுவனம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.
வெளிப்புற உதவியின்றி சுயசார்புடன் இயங்கும் திறன் கொண்ட இந்த கப்பல்துறை குறித்த தகவலில், ஹுவாசுவான் நகரின் நம்பர் ஒன்னான இந்த கப்பல்துறையானது, பழுதடைந்த கப்பல்களை மிக குறைந்த காலத்தில் விரைவில் சீர் செய்து போர்த்திறனுடன் கப்பற்படைக்கு திருப்பி அனுப்பும் பணியை திறம்பட செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், போர் நடைபெறும் இடங்களுக்கு செல்லும் வகையில் இந்த துறைமுகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மிதக்கும் துறைமுகத்தின் உள்ளே போர் கப்பல் ஒன்று இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள செய்தி நிறுவனம், எங்களது கப்பற்படையின் சேதமடைந்த மிகப்பெரிய கப்பல்களை கடற்கரையில் இருந்து கடலுக்குள் அதிக தொலைவில் கொண்டு செல்லும் திருப்புமுனையான பணியை மேற்கொள்ளும் அடையாளமாக இந்த கப்பல் தொடக்க திட்டம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.


இந்த கப்பலின் பயன் என்னவெனில், சிறிய அளவில் சேதமுற்ற கப்பல்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டியதுமில்லை.  அதேவேளையில், அதிக சேதமடைந்த கப்பல்களை ஷிப்யார்டிற்கு (கப்பல் கட்டும் தளம்) திருப்பி அனுப்ப வேண்டியதுமில்லை என தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் துறையானது போர் கப்பல்கள், எதிரி கப்பல்களை தாக்கி அழிக்கும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை கையாளும் திறன் படைத்தது. அதனுடன் 2 மீட்டர் உயரம் கொண்ட கடல் அலைகளை எதிர்கொள்ளும் திறனும் கொண்டது. ஆனால் விமானந்தாங்கி கப்பல்களை இது சரி செய்வதில்லை.

Thursday 3 March 2016

அரசியல்வாதியாக நடிக்கும் திரிஷா

தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வரும் ‘கொடி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகன் தனுஷ் அரசியல்வாதியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் நாயகி த்ரிஷாவும் அரசியல்வாதியாக நடித்து வருவதாகவும், இந்த படத்தில் அவருடைய கேரக்டர் பெயர் ‘ருத்ரா’ என்றும் தற்போது தெரியவந்துள்ளது. இப்படத்தில் தனுஷுடன் போட்டி போட்டுக்கொண்டு திரிஷா நடித்திருக்கிறார்.


மாயமான மலேசிய விமானத்தின் பாகம் கண்டுபிடிப்பு

மலேசியா விமானம் MH 370 பாகங்கள் கடலில் மிதப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. காணாமல் போயுள்ள மலேசிய விமானத்தின் பாகங்கள் கடல் பகுதியில் மிதப்பதாக திடுக்கிடும் தகவல் வெளியாகியுள்ளன.வியட்நாமில் விமானம் ஒன்றின் பாகம் கரை ஒதுங்கியுள்ளது.


அந்த பாகம் மாயமான மலேசிய விமானத்தினுடையதாக இருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. வியட்நாமில் உள்ள கான்ஹ் ஹோவா மாகாணம் வான் நின் மாவட்டத்தில் உள்ள தாய் லான்ஹ் கம்யூனில் விமான பாகம் ஒன்று கரை ஒதுங்கியதை லீ டான் பின்ஹ்(41) என்ற மீனவர் பார்த்துள்ளார். அலுமினியத்தால் ஆன அந்த பாகம் 3.1 மீட்டர் நீளமும் 100 கிலோ எடையும் கொண்டது.

பற்களை பாதுகாக்கும் முறைகள்

பல் வலி, வாய் துர்நாற்றம், மஞ்சள் நிற கறைகள்  போன்றவற்றில் இருந்து விடுபட எளிய வழிமுறை.
இதற்கு தேவையான பொருள்கள் : பேக்கிங் சோடா - 1/2 ஸ்பூன் , உப்பு - 1/2 ஸ்பூன், தண்ணீர், அலுமினிய தாள்
செய்முறை : பேக்கிங் சோடா, உப்பு, தண்ணீர் ஆகியவற்றை சேர்த்து பேஸ்ட் செய்து கறை உள்ள இடங்களில் தடவிக் கொள்ளவும். அதன்மேல் அலுமினிய தாள் வைத்து ஒரு மணி நேரம் ஊற வைக்கவும். பின்னர் ப்ரசால் பற்களைத் தேய்த்து குளிர்ந்த நீரில் கழுவினால் மஞ்சள் நிற கறைகள் நீங்கிவிடும். இந்த முறையை மாதம் இருமுறை மட்டுமே செய்ய வேண்டும்.


பிரதமரை விட அதிகம் சம்பாதிக்கும் பிச்சைகாரர்

பிரிட்டிஷ் பிரதமருக்கு சமமாக சம்பாதித்து வரி கட்டாமல் தலைமறைவாக வாழும் பிச்சைக்காரர் ஒருவரைப் பற்றிய செய்தி தற்போது பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு வரி கட்டாமல் வாழும் மக்களின் வருமானத்தை கணக்கிட்டால் 12 மாதங்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் பவுண்ட்ஸ் அதாவது 20 கோடியே 47 லட்சத்து 13 ஆயிரத்து 446 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்கள்.


இந்த பிச்சைகாரர் ஒருநாளில் 500 பவுண்ட்ஸ் அதாவது 78 ஆயிரத்து 735 ரூபாய். ஒருவாரத்தில் அவர் சம்பாதிக்கக் கூடியது 2 ஆயிரத்து 500 பவுண்ட்ஸ் அதாவது 3 லட்சத்து 93 ஆயிரத்து 683 ரூபாய். இங்கிலாந்தில் ஹாம்டன் நகரில் வசிக்கும் பிச்சைக்காரர் ஒருவரின் வருமானத்தை கவுன்சிலர் மூலம் தெரிந்திருக்கிறார்கள். அந்த பிச்சைக்காரர் பிச்சை எடுக்கும்போது தனக்கு வீடு, வாசல், மனைவி, சொந்தம் என யாரும் இல்லை என்று எழுதிய அட்டையை தனக்கு முன்பாக வைத்திருப்பார். ஆனால் பல லட்சம் மதிப்புள்ள வீட்டில் இரகசியமாக வாழ்ந்திருக்கிறார். வசதி படைத்த இவர் இளகிய மனம் படைத்தவர்களையே குறி வைத்து பிச்சையெடுத்து வந்துள்ளார். இதுபோன்ற பெருந்தன்மையான மக்களை  வைத்து அதிக அளவில் வருமானம் ஈட்டியுள்ளார்.


இவரைப் போன்றவர்களை நீதிமன்றத்தில் வைத்து கட்டுப்பாடான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்னும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஒரு பிச்சைக்காரர் நாட்டின் சராசரி குடிமகனைவிட ஆண்டு வருமானம் அதிகம் இருக்கும் என்றால் கண்டிப்பாக பிச்சையெடுக்கும் தொழிலை ஒழிக்க முடியாது. மேலும் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து நாட்டிற்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரது கருத்தாகும்.

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Wednesday 2 March 2016

வாசிங்டனில் உள்ள சுற்றுலா இடங்கள்

அமெரிக்காவின் தலைநகரமான வாசிங்டனில் அதிகமாக மக்கள் வந்துபோக கூடிய இடம்  பெண்டகன். இந்த  பெண்டகனில் காபிடல்  எனப்படும் சிறிய குன்று உள்ளது. அமெரிக்க நாடாளுமன்றம், நாடாளுமன்ற அலுவலகங்கள் போன்றவை இந்த குன்றின் மீதுதான் அமைந்திருக்கின்றன. மேலும் அமெரிக்காவின் விடுதலை சிலை, புகழ் பெற்ற மனிதர்களின் சிலைகளும் உள்ளன.


அமெரிக்க நாட்டின் பாதுகாப்பு அமைச்சகம் செயல்படக் கூடிய பகுதியும் பெண்டகனில் அமைந்துள்ளது. இந்த அலுவலகத்தில் சுமார் 23000 பேர் வேலை பார்த்து வந்துள்ளனர். 5 அடுக்குகள் கொண்ட உலகிலேயே மிகப்பெரிய அலுவலக வளாகம், அரசினுடைய முக்கிய இடமாகவும் இது கருதப்படுகிறது. 2001ம் ஆண்டு ஏற்பட்ட தீவிரவாத தாக்குதலால் மிகப்பெரிய பாதிப்புக்குள்ளானது. இதன் காரணமாக பொது மக்களின் பார்வைக்கு நிறுத்தி வைக்கப்பட்டது. இந்த பிரம்மாண்டமான கட்டிடத்தின் உயரம் 550 அடி. வாசிங்டன் நினைவு இல்லம் என்றும் அழைக்கப்படுகிறது. இதனுடைய பார்வைக்கூடத்திலிருந்து வாசிங்டன் நகர் முழுவதையும் பார்த்து ரசிக்கலாம்.

அமெரிக்காவின் மூன்றாவது குடியரசு தலைவராக இருந்தவர் தாமஸ் ஜெபர்சன். அவரை போற்றும் வகையில் கிரேக்க பாணியில் ஓர் நினைவிடம் இங்கு அமைந்துள்ளது. இதனை 1943ம் வருடம் கட்டி முடித்தனர். 19 அடி உள்ள  தாமஸ் ஜெபர்சனின் வெண்கல சிலை ஒன்றும் அமைந்துள்ளது. இதையும் இதனை சுற்றியுள்ள பகுதிகளையும் பார்ப்பதற்கு ஏராளமானோர் வருகிறார்கள். ஆனால் பல கட்டுப்பாடுகளும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் பலப்படுத்தப்பட்டுள்ளன.

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

சந்தானம் படத்தில் புதுமையான பாடல் காட்சிகள்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களைத் தொடர்ந்து தில்லுக்கு துட்டு, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் சந்தானம். தில்லுக்கு துட்டு படத்தில் நடிகை ஆஷனா சவேரியுடன் அவர் நடித்த பாடல் ஒன்று சென்னை மீனம்பாக்கம் தரமணியில் 40 லட்ச ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக செட் அமைத்து படமாக்கி உள்ளனர்.


இந்த பாசல் காட்சி முழுக்க  சந்தானம்-ஆஷனா சவேரி இருவரும் பறந்து கொண்டே பாடுவது போல படமாக்கப்பட்டுள்ளது. தான் நடித்த படத்தில் ஏதேனும் புதுமை இருக்க வேண்டும் என யோசித்ததன் காரணமாக இப்படியொரு பாடலை படமாக்கியுள்ளார் சந்தானம். அதோடு தனது உடற்கட்டை முன்னனி இளவட்ட நடிகர்களைப் போல மாற்றியதோடு அதிரடி நடனமும் ஆடியுள்ளார்.


மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

நீல் ஆம்ஸ்ட்ராங் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், அப்பல்லோ-11 விண்கலம் மூலம் கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி (நியூயார்க் நேரப்படி) இரவு 10.50 மணிக்கு சந்திரனில் இறங்கினார். இதன் மூலம் சந்திரனில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அப்போது இவரது சாதனையை உலகம் முழுவதிலும் இருந்து 5 கோடியே 28 லட்சம் மக்கள் கண்டுகளித்து பரவசம் அடைந்தனர்.


சிறு வயதில் இவருக்கு விமானம் என்றால் கொள்ளை பிரியம். எனவே, அது குறித்த படிப்பை படித்தார். பின்னர் அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார். இவருடன் விமானி எட்வின்புஷ் அல்டிரின், மற்றொரு விண்வெளி வீரர் மைக்கேல் கொலினல் ஆகியோரும் சந்திரனுக்கு சென்று இருந்தனர். நீல் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய 20 நிமிடங்கள் கழித்து ஆல்டிரின் சந்திரனில் இறங்கினார். மைக்கேல் கொலினஸ் அப்பல்லோ-11 விண்கலத்தில் இருந்து அதை இயக்கி கொண்டிருந்தார். சந்திரனில் இறங்கிய நீல்ஆம்ஸ்ட்ராங்குடன் அல் டிரினும் சேர்ந்து சோதனை யில் ஈடுபட்டார். அங்குள்ள பாறைகளை இருவரும் சேகரித்தனர். அமெரிக்க தேசிய கொடியையும் சந்திரனில் பறக்க விட்டு சாதனை படைத்தனர். சந்திரனில் காலடி எடுத்து வைத்து நீல் ஆம்ஸ்ட்ராங் சாதனை செய்த விவகாரம் 20-ம் நூற்றாண்டின் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

சந்திரனில் இருந்து பூமி திரும்பிய நீல்ஆம்ஸ்ட்ராங் நாசாவின் விண்வெளி மையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காற்று மண்டலம் அல்லாத சந்திரனில் தான் எடுத்து வைத்த முதல் காலடி, குழந்தை தவழ்வது போன்று மகிழ்ச்சியாக இருந்தது என வர்ணித்தார். நீல்ஆம்ஸ்ட்ராங் “நாசா” விண்வெளி மையத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார். சின்சினாட்டி பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராக இருந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் பல தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்

சாதனைக்கு வயது ஒரு தடை அல்ல

சர்வதேச அளவில் சினிமாவுக்கான மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை முதல் முறையாக வென்றுள்ளார் லியனார்டோ டிகாப்ரியோ. இதற்கு முன் 5 முறை அவர் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், விருது வென்றிருப்பது இதுதான் முதல் முறை. ஆனால் விருதினைப் பெற்றுக் கொண்டதும் மற்றவர்களைப் போல மேடையில் உணர்ச்சிவசப்பட்டு அழவோ, நன்றி மேலீட்டால் மிகையாகப் பேசவோ முயலவில்லை. அந்த ஏற்புரையைப் பார்த்து உலகமே லியானர்டோ டிகாப்ரியோவை புதிய மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்துள்ளது.


அவர் பேசியதாவது : "நன்றி... அகாடமிக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடன் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கும் எனது வாழ்த்துகள். நம்பமுடியாத நடிப்புத் திறனை அவர்கள் காட்டியிருந்தார்கள். அற்புதமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த பலனே 'தி ரெவனன்ட்'. முதலில் எனது சகோதரனைப் போன்ற டாம் ஹார்டியை (படத்தின் பிரதான வில்லன்) குறிப்பிட விரும்புகிறேன். டாம்... திரையில் உனது அசாத்தியமான ஆளுமையை மிஞ்சுவது, திரைக்கு அப்பால் நீ இனரிட்டுவிடம் பாராட்டும் நட்பே. இந்த இரண்டு வருடங்களில் நீ சினிமா வரலாற்றில் உனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டாய். நீ அபாரமான திறமைசாலி. அற்புதமான சினிமா அனுபவத்தைத் தந்த உனக்கும், படத்தின் ஒளிப்பதிவாளர் லுபெஸ்கிக்கும் நன்றி. ஃபாக்ஸ் நிறுவனத்துக்கும், ரீஜென்சி நிறுவனத்துக்கும் நன்றி. எனது மொத்த அணிக்கும் நன்றி. இந்தத் துறையில் எனது ஆரம்ப கால வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்த கேடன் ஜோன்ஸுக்கு நன்றி, சினிமா என்ற கலையைப் பற்றி எனக்கு நிறையக் கற்றுத் தந்த ஸ்கார்சிஸிக்கு நன்றி, இந்தத் துறையில் நான் நிலைத்திருக்க உதவிய ரிக் யோர்னுக்கு நன்றி, எனது பெற்றோருக்கு நன்றி, அவர்கள் இல்லையெனில் எதுவுமே சாத்தியப்பட்டிருக்காது. எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


இறுதியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்த இயற்கை உலகுடனான மனிதர்களின் உறவே ரெவனன்ட் திரைப்படம். அதிக வெப்பமயமான ஆண்டாக 2015-ல் பதிவான இந்த உலகத்தில், (ரெவனன்ட்) படப்பிடிப்புக்காக, பனியைத் தேடி, உலகின் தெற்கு மூலைக்குச் சென்றோம். காலநிலை மாற்றம் என்பது நிஜம். அது இப்போது நடந்து கொண்டிக்கிறது. மனித இனமே தற்போது எதிர்கொண்டிருக்கும் உடனடி அச்சுறுத்தல் அது. எந்த நடவடிக்கையையும் தள்ளிப் போடாமல் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அதற்காக உழைக்க வேண்டிய நேரம் இது. உலகில் பெரும் மாசுபாட்டை ஏற்படுத்துபவர்களுக்காகவும், கார்ப்பரேட்களுக்காகவும் பேசும் தலைவர்களை ஆதரிக்காமல் மனித இனத்துக்காக, உலகின் பூர்வகுடிகளுக்காக, காலநிலை மாற்றத்தால் நேரடியாக பாதிக்கப்படும் கோடிக்கணக்கான பின்தங்கிய மக்களுக்காக, நமது குழந்தைகளின் குழந்தைகளுக்காக, அரசியலாலும் பேராசையாலும் நசுக்கப்படும் குரல்களுக்காக பேசும் தலைவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். இந்த அற்புதமான விருதுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. நாம் நமக்குக் கிடைத்த இந்த உலகை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; நான் விருது பெற்ற இன்றைய இரவை அலட்சியமாக எடுத்துக் கொள்ளவில்லை."

மேலும் பல தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்

Tuesday 1 March 2016

சமூக வலைதளத்தில் தவறான கருத்தை வெளியிட்ட டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப், இந்த நாட்டின் அதிபராக நான் பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டப்புறம்பாக குடியேறியுள்ளவர்களை அடித்து விரட்டுவேன் என பேசி வருகிறார். அமெரிக்கர்களின் வேலையை இந்தியர்கள் பறித்து சென்றுவிடுவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். பல இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் மக்களின் எதிர்ப்பை சந்தித்துவரும் டிரம்ப், யாரோ கூறிய ஒரு வாசகத்தை தனது பிரசாரத்துக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் தற்போது அதை காந்தியின் பொன்மொழி என்று குறிப்பிட்டுள்ளார்.


‘முதலில் உன்னை புறக்கணிப்பார்கள், பிறகு உன்னைப் பார்த்து சிரிப்பார்கள், பின்னர் உன்னோடு சண்டையிடுவார்கள், கடைசியாக நீதான் ஜெயிப்பாய்’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இதை காந்தியின் பொன்மொழி என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அறியாமையை டிரம்பின் ஆதரவாளர்கள் தற்போது பிரசார ஆயுதமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இத்தாலிய சர்வாதிகாரி ஹிட்லரின் தளபதியான முசோலியின் பொன்மொழிகளை பேசிப்பேசி அலுத்துப் போனதால் யாரோ சொன்னதை எல்லாம் மகாத்மா காந்தி சொன்னதாக டொனால்ட் டிரம்ப் உளறி வருகிறார் என அவர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

மேலும் பல தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்

ஜிகா வைரஸ் 40 லட்சம் பேரை தாக்கும் ஆபத்து

டெங்கு காய்ச்சல் போன்று ஜிகா வைரசும் ஏடிஸ் வகை கொசுக்களால்தான் பரவுவதாக கூறப்படுகிறது. 1947-ம் ஆண்டு ஆப்பிரிக்க நாடான உகாண்டாவில் ஜிகா காட்டில் காணப்பட்ட குரங்குகளை இந்த வைரஸ் தாக்கியதை தொடர்ந்து அதற்கு ஜிகா வைரஸ் என பெயரிடப்பட்டது. 23 நாடுகளில் பரவியதுபிரேசில் நாட்டில் இருந்து பரவத்தொடங்கிய இந்த ஜிகா வைரஸ், இப்போது தென் அமெரிக்கா, மத்திய அமெரிக்காவை சேர்ந்த 23 நாடுகளில் கால் பதித்துள்ளது. இந்த வைரஸ் தாக்கிய 80 சதவீதம் பேருக்கு அறிகுறியே தெரியவில்லை.


கர்ப்பிணிகளுக்கு இந்த வைரஸ் தாக்கி இருந்தால் அதை கண்டுபிடிப்பது கடினம் ஆகும். இவர்களுக்கு கர்ப்பம் தரித்த முதல் 3 மாதங்களில் ஜிகா வைரஸ் தாக்கினால், பிறக்கக்கூடிய குழந்தைகள் பிறவிக்குறைபாடுகளை கொண்டிருக்கும். குறிப்பாக தலை சிறியதாக இருக்கும், மூளை பகுதியில் பாதிப்பு இருக்கும். ஏறத்தாழ 4 ஆயிரம் குழந்தைகள் சிறிய தலைகளுடன் பிறந்துள்ளதால், அங்கு பெண்கள் கர்ப்பம் அடைய வேண்டாம் என இப்போது அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஜிகா வைரஸ் 40 லட்சம்பேரை தாக்குகிற ஆபத்து உள்ளதாக உலக சுகாதார நிறுவனம் எச்சரித்துள்ளது.

மேலும் பல தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்

புதிய சர்ச்சையில் சிக்கிய டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்  எதையாவது கூறி அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருபவர். இப்பொழுது மட்டுமின்றி, கடந்த காலங்களில் கூட சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு புயலை கிளப்பியுள்ளார். உதாரணத்திற்கு, 1990ம் ஆண்டுகளில் புகழ்பெற்ற ரேடியோ நிகழ்ச்சிகளில் டொனால்ட் டிரம்ப் பங்கு பெற்று உள்ளார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால், புகழ்பெற்ற பெண்களின் அழகை வர்ணிப்பது தான்.


கடந்த 2000ம் ஆண்டு இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்றுள்ளார். அப்போது பேசும்போது, ‘இங்கிலாந்து  இளவரசியான டயானா அழகில் சிறந்தவர். உயரமாகவும், மென்மையான தேகத்தை உடைய டயானாவை அனைவரும் ரசிப்பார்கள். எனக்கு உண்மையில் வாய்ப்பு கிடைத்திருந்தால், அவருடன் உறவுக்கொள்ளவும் தயங்கி இருக்க மாட்டேன். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்’ என பேசியுள்ளார்.


டொனால்டு டிரம்ப் மட்டுமில்லாமல், இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று ‘இளவரசர் சார்லஸை விவாகரத்து பெற்ற பின்னர்கூட, டயானாவை நெருங்க டொனால்டு டிரம்ப் முயற்சி செய்ததாக தகவல் வெளியிட்டு பரபரப்பை கூட்டியது. இளவரசி டயானா மட்டுமின்றி பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி உள்ளிட்ட நடிகைகள் மீதும் தனக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதாக வெளிப்படையாக பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது அது பெரிதாக எடுத்து கொள்ளப்படவில்லை. தற்போது, அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடும்போது பழைய சங்கதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகிறது.

மேலும் பல தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்

12 ஆண்டுகள் பாதுகாத்த கருமுட்டை

பொருளாதாரம் மற்றும் உடலலகின் காரணமாக மகப்பேற்றை தள்ளிப்போடும் நிலை வாடிக்கையாகிவிட்டது. எனினும் பெண்களுக்கு 30 வயதுக்குள் மட்டுமே அவர்களுக்குள் வீரியமான கருமுட்டைகள் உருவாகும் என மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இந்த வயதுக்குள் மகப்பேற்றை விரும்பாத பெண்களின் கருமுட்டையை எடுத்து , பதப்படுத்தி பாதுகாக்கும் முறை மேற்கத்திய நாடுகளில் பரவி வருகின்றன. கருப்பைக்கு செல்லும் பாதைகளில் அடைப்பு அல்லது பிற உபாதைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் கருமுட்டைகளை அகற்றி ஆணின் விந்தணுவுடன் இணைத்து செயற்கை முறையில் கருத்தரிக்கும் முறையும் தற்போது பிரபலமடைந்து வருகிறது.

அவ்வகையில் சீனாவின் ஷாங்காய் மாகாணத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சுமார் 1 லட்சம் கருமுட்டைகள்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 25000 கருமுட்டைகளில் விந்தணுக்களை சேர்த்து 41000 கருத்தரிப்புகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக குழந்தைகளும் பிறந்துள்ளன. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு, லீ என்ற பெண்ணுக்கு செயற்கை கருத்தரிப்பை உருவாக்க 12 கருமுட்டைகளை சேகரித்த டாக்டர்கள் அதனை லீயின் கணவரது விந்தணுவுடன் இணைத்து 12 கருக்களை உருவாக்கினர்.


அவற்றை லீயின் கருப்பைக்குள் செலுத்தியதால் அவர் 2 அழகான ஆண் குழந்தைகளை பிரசவித்தார். சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்று கொள்ளக்கூ டாது என்ற சட்டம் இருந்ததால், அந்த சட்டம் விளக்கிக்கொள்ளும்போது  அடுத்த  குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என அவர்கள் தீர்மானித்தனர். இதுவரை நாள் ஒன்றுக்கு 30000 கட்டணம் செலுத்தி மீதமுள்ள கருமுட்டைகளை பாதுகாத்து வந்தனர். இப்போது சீனாவில் சட்டம் விளக்கிக்கொள்ளப்பட்டதால் சேகரித்த கருமுட்டைகளின் மூலம் மீண்டுமொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள லீ தம்பதியினர் தீர்மானித்தனர்.


இதனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, சேகரித்து வைக்கப்பட்ட கருமுட்டைகளின் மூலம் மற்றொரு ஆண்  குழந்தையை லீ  ஈன்றெடுத்தார். கடந்த வாரம் பிறந்த இக்குழந்தை 3 கிலோ 400 கிராம் எடையில் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் மிக நீண்ட நாட்கள் சேகரிக்கப்பட்ட கருமுட்டையில் குழந்தையை பிரசவித்த பெண் என்ற பெருமையை 43 வயதான லீ பெற்றுள்ளார்.

மேலும் பல தகவல்களுக்கு இங்கி கிளிக் செய்யவும்

சூர்யாவுக்கு பயப்படும் தெலுங்கு நடிகர்கள்

தொடர் வெற்றிகளால் தமிழ் சினிமாவின் வசூல் ஹீரோக்களில் ஒருவராக திகழும் சூர்யாவின் படங்கள் தமிழ் மட்டும் இன்றி, ஆந்திர மாநிலத்திலும், வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்று வருகிறது. இதனால் சூர்யா, நடிக்கும் அனைத்து படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில், சூர்யா படங்கள் ஆந்திராவில் வெளியாகிறது, என்றால், அங்குள்ள முன்னணி ஹீரோக்கள் கூட தங்களது படங்களை வெளியிட பயந்து தள்ளிவைப்பார்கள், என்று கூறியுள்ள நடிகர் நாகர்ஜுனா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இடங்களில் சூர்யா படங்களுக்கு தனி மார்கெட் இருக்கிறது, என்றும் தெரிவித்தார்.


இது குறித்து மேலும் பேசிய அவர், ”நான் சென்னையில் பிறந்தவன்.எனவே நானும் சென்னைக்காரன் தான். இந்தப் படத்தில் நடித்தது சிறப்பான அனுபவம். கார்த்தியும் நானும் மனதளவில் இந்தப் படத்துக்குப் பிறகு மிகவும் நெருங்கி விட்டோம். படத்தில் நான் முழுக்க சக்கர நாற்காலியிலேயே உட்கார்ந்து இருக்கும் கேரக்டர். என்னை உட்கார வைத்து விட்டு கார்த்தியும் தமன்னாவும் நிறைய டான்ஸ் ஆடி இருக்கிறார்கள். அப்போது எனக்கும்  எழுந்து ஆட வேண்டும் போல இருக்கும்.


இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா? சூர்யாவுக்கு ஆந்திராவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. குறிப்பாக தெலுங்கானாவில் இருக்கும் ரசிகர் படை அவரது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல. சூர்யாவின் படம் தெலுங்கில்  டப்பிங் ஆகி வருகிறது என்றால் தெலுங்கு ஹீரோக்கள் பயந்து போய் தங்கள் படத்தின் ரிலீசை தள்ளி வைப்பார்கள். அவ்வளவு பெரிய மாஸ் அவர். அவரது அடுத்த படம் 24- என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

கேரளாவில் மிகப் பெரிய விமான நிலையம்

கேரளாவில் கர்நாடக மாநில எல்லையையொட்டி உள்ள கண்ணூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டு வந்தது. மாநிலத்திலேயே மிக நீளமான விமான நிலையம் என்ற பெயருடன் உருவான இந்த விமான நிலையம் இன்று திறக்கப்பட்டது. முதல்–மந்திரி உம்மன்சாண்டி, மந்திரி பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


பெங்களூருவில் இருந்து 10 பயணிகளுடன் வந்த விமானம் இன்று காலை புதிய விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமான நிலையம் 2200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் ஓடுதளம் 4 ஆயிரம் மீட்டர் நீளம் கொண்டது. முதற்கட்டமாக 3050 மீட்டர் ஓடுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள ஓடுதளம் தயாராகி வருகிறது.


இந்த பணியும் முடிந்து விட்டால் இங்கு வர்த்தக விமானங்கள் தரை இறங்கும். இதன் மூலம் கேரள மாநிலத்தின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் கணிசமாக உயரும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். குறிப்பாக கைத்தறி துணி ஏற்றுமதியுடன் கேரளாவின் சுற்றுலா மற்றும் வர்த்தக விரிவாக்கத்திற்கு இந்த விமான நிலையம் பயன்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

கேத் மிடில்டன் போன்று தோற்றம் கொண்ட பெண்

இளவரசி கேட் மிடில்டன் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் பெண் வாழ்ந்து வருகிறார். தற்போது 35 வயதாகும் அப்பெண்மணிக்கு 16 மற்றும் 6 வயதுகளில் 2 குழந்தைகள் உள்ளன. இது குறித்து அப்பெண் கூறி யதாவது : பிரிட்டானிய இளவரசர் வில்லியம்ஸ் - கேத் மிடில்டன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட போது நான் ஒரு ஹோட்டலில் உணவு பரிமாறும் பெண்ணாக வேலை பார்த்து வந்தேன். இளவரசி கேத் மிடில்டன் புகைப்படங்களை பார்த்த மக்கள் பலர் "நீங்கள் பார்ப்பதற்கு இளவரசி போன்று இருக்கிறீர்கள்" என கூறினர். இதை பயன்படுத்தி நன்கு சம்பாதிக்க திட்டமிட்டேன்.


இளவரசி கலந்து கொண்ட வீடியோக்களைப் பார்த்து இளவரசி போல் நடப்பது, சிரிப்பது, உடை உடுத்துவது போன்ற பாவனைகளைக் கற்றுக்கொண்டேன். இதனால் ஒரு பிரபல விமான நிலையம் என்னை விளம்பர மாடலாக நியமித்தனர். இதனால் பழைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு இளவரசி போல் பல்வேறு நாடுகளுக்கு பயணித்தேன். 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இளவரசர் வில்லியம்ஸ் போன்று தோற்றம் அளிக்கும் மற்றொருவரை சந்தித்தது மறக்க முடியாதது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் எங்களை உண்மையான இளவரசர் - இளவரசியாக நினைத்தது சுவாரஸ்ய சம்பவம். இதுமட்டுமில்லாமல்  இளவரசி இரண்டாம் எலிசபெத் போன்று தோற்றமளிக்கும் மூதாட்டியுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். இதனால் ஒரு கிழமைக்கு  9 ஆயிரம் பவுண்டு வரை கிடைப்பதால் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது என அப்பெண்மணி கூறியுள்ளார்.

மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்  

கருப்பு - வெள்ளை நிற இரட்டைக் குழந்தைகள்

இங்கிலாந்தை சேர்ந்தவர் லிப்பி ஆப்பிள்பி (37). இவருக்கு கடந்த 2014–ம் ஆண்டு ஜூன் மாதம் துர்காம் பல்கலைக்கழக ஆஸ்பத்திரியில் இரட்டை பெண் குழந்தைகள் பிறந்தன. 2 குழந்தைகளும் பார்ப்பதற்கு ஒரே மாதிரியாக இருந்தன. ஆனால் பிறந்த இரட்டையரில் ஒரு குழந்தை கருப்பு நிறத்திலும், மற்றொரு குழந்தை வெள்ளை நிறத்திலும் இருந்தன. தோல் மட்டுமின்றி கண்களின் நிறமும் இருவருக்கும் மாறுபட்டு இருந்தது.


இதனால் டாக்டர்கள் மிகுந்த ஆச்சரியம் அடைந்தனர். இந்த இரட்டை குழந்தைகள் ஒரே கருமுட்டையில் பிறந்துள்ளன. இக்குழந்தைகளின் தாய் லிப்பியும், தந்தை தபாட்ஷ்வா மட்ஷிம் பமுடோவும் ஒரே இனத்தை சேர்ந்தவர்கள். அப்படி இருக்கும் போது ஒரே கரு முட்டையில் உருவான குழந்தைகள் வெவ்வேறு நிறத்தில் பிறந்து இருப்பது அறிவியலில் நடந்த அதிசயமாக கருதப்படுகிறது.


நச்சுக் கொடியை ஆய்வு செய்ததில் இந்த இரட்டை குழந்தைகள் ஒரே உயிரணுவில் பிறந்தவை அல்ல என்றும், 100 சதவீதம் அடையாளம் காணக் கூடிய இரட்டையர்கள் என்றும் தெரிய வந்தது. கரு முட்டை வளர்ச்சியின் போது ஏற்பட்ட மாற்றத்தின் காரணமாக உடல் மற்றும் கண்களின் நிறம் மாறுபட்டதாக கருதப்படுகிறது. இவர்கள் இங்கிலாந்தின் முதல் கருப்பு மற்றும் வெள்ளை நிற இரட்டையர்கள் என்ற பெருமையை பெற்றுள்ளனர். தற்போது இவர்களுக்கு ஒரு வயது ஆகிறது. அக்குழந்தைக்கு அமெலியா, ஜாஸ்மின் என பெயரிட்டுள்ளனர்.

மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Want to Share This News With Friends?

Quick Search