Pages

Tuesday 1 March 2016

கேரளாவில் மிகப் பெரிய விமான நிலையம்

கேரளாவில் கர்நாடக மாநில எல்லையையொட்டி உள்ள கண்ணூரில் புதிய விமான நிலையம் அமைக்கப்பட்டு வந்தது. மாநிலத்திலேயே மிக நீளமான விமான நிலையம் என்ற பெயருடன் உருவான இந்த விமான நிலையம் இன்று திறக்கப்பட்டது. முதல்–மந்திரி உம்மன்சாண்டி, மந்திரி பாபு மற்றும் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.


பெங்களூருவில் இருந்து 10 பயணிகளுடன் வந்த விமானம் இன்று காலை புதிய விமான நிலையத்தில் தரையிறங்கியது. இந்த விமான நிலையம் 2200 ஏக்கர் பரப்பளவில் அமைந்துள்ளது. இதன் ஓடுதளம் 4 ஆயிரம் மீட்டர் நீளம் கொண்டது. முதற்கட்டமாக 3050 மீட்டர் ஓடுதளம் உருவாக்கப்பட்டுள்ளது. மீதி உள்ள ஓடுதளம் தயாராகி வருகிறது.


இந்த பணியும் முடிந்து விட்டால் இங்கு வர்த்தக விமானங்கள் தரை இறங்கும். இதன் மூலம் கேரள மாநிலத்தின் ஏற்றுமதி, இறக்குமதி வர்த்தகம் கணிசமாக உயரும். வேலை வாய்ப்பும் அதிகரிக்கும். குறிப்பாக கைத்தறி துணி ஏற்றுமதியுடன் கேரளாவின் சுற்றுலா மற்றும் வர்த்தக விரிவாக்கத்திற்கு இந்த விமான நிலையம் பயன்படும் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Want to Share This News With Friends?

Quick Search