Pages

Friday, 11 March 2016

சமாதான தூதுவன் - பிரெட்ரிக் பாஸி

உலகில் அமைதி செழிக்க வேண்டும் உலக நாடுகள் சமாதானமாக வாழ வேண்டும் என்பதற்காக தன் வாழ்நாளை அர்ப்பணித்துக் கொண்ட ஓர் உயர்ந்த மனிதரைப் பற்றி நாம் தெரிந்துகொள்ளவிருக்கிறோம். அவர்தான் 1901-ஆம் ஆண்டு அமைதிக்கான முதல் நோபல் பரிசை வென்ற பிரெஞ்சு நாட்டவரான பிரெட்ரிக் பாஸி. அனைத்துலக செஞ்சிலுவை சங்கத்தைத் தோற்றுவித்ததற்காக அதே ஆண்டில் ஹென்றி டுனான்டிற்கும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது.


உலக நாடுகளிடையே போர் ஏற்படுவது தவிர்க்க முடியாதது அத்தகைய போர்களில் பாதிக்கப்பட்டவர்களுக்கு மனிதாபிமான உதவிகள் தேவை என்ற அடிப்படையில்தான் செஞ்சிலுவை சங்கத்தைத் தொடங்கினார் ஹென்றி டுனாண்ட். ஆனால் பிரெட்ரிக் பாஸி ஒருபடி மேலே சென்று நாடுகளிடையே போர் ஏற்படுவதற்கான அடிப்படைகளை அடையாளம் கண்டு போர்களை அறவே ஒழித்து நாடுகளிடையே சமாதானம் நிலவ வழிவகை செய்ய வேண்டும் என்று விரும்பினார். அதனால பெரும் முயற்சி மேற்கொண்டு போரை விரும்பாத நாடுகளை ஒன்றாக அணி சேர்த்து நடுநிலை சமாதான நாடுகள் எனும் அனைத்துலக அமைப்பை உருவாக்கினார்.


பாஸியின் பெரும் முயற்சியால் 1889-ஆம் ஆண்டு பிரான்சு, இங்கிலாந்து, இத்தாலி, ஸ்பெயின், டென்மார்க், ஹங்கேரி, பெல்ஜியம், அமெரிக்கா ஆகிய நாடுகளின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவரும் ஒன்றுகூடி Inter-Parliamentary Union என்ற அனைத்துலக பாராளுமன்றத்தை உருவாக்கினர். அதன் மூன்று தலைவர்களில் ஒருவராக பாஸி தேர்ந்தெடுக்கப்பட்டார். அந்த சங்கம் நாடுகளுக்கிடையே உருவாகும் பிரச்சினைகளை தீர்த்து வைக்கும் நடுநிலை சங்கமாக இன்றும் செயல்பட்டு வருகிறது.

Thursday, 10 March 2016

ஜாக்கி சான் அளித்த பரிசு

அனேகன் படம் மூலம் தனுஷுக்கு ஜோடியாக தமிழில் நடிகையாக அறிமுகமானவர் அமைரா தஸ்தூர். இந்தி நடிகையான அமைரா தஸ்தூர் தற்போது இந்தியா-சீனா கூட்டு தயாரிப்பில் உருவாகி வரும் ‘குங்பூ யோகா’ என்ற படத்தில் நடித்து வருகிறார். இதில் ஜாக்கி சான் கதாநாயகனாக நடித்து வருகிறார். இவருக்கு ஜோடியாக அமைரா நடித்து வருகிறார். தற்போது இதன் படப்பிடிப்புகள் கடும் பனிப்பிரதேசத்தில் நடைபெற்று வருகிறது.


இப்படத்தில் நடிப்பதற்கு மூன்று மாதங்கள் முன் ஜாக்கி சான் குழுவில் அமைரா கராத்தே பயிற்சி எடுத்துக் கொண்டார். தன்னிடம் சிறந்த முறையில் பயிற்சி எடுத்துக் கொள்பவர்களுக்கு ஜாக்கி சான் விலை உயர்ந்த பொருளை பரிசளிப்பது வழக்கம். அந்த வகையில் தன் குழுவினருக்காக தானே வடிவமைத்த விலை உயர்ந்த, குளிருக்கு அணியும் ஜாக்கெட் ஒன்றை அமைராவிக்கு பரிசளித்திருக்கிறார். இதனை சந்தோஷமாக பெற்றுக் கொண்ட அமைரா அதை பெரிய பொக்கிஷமாக பாதுகாத்து வருவதாக தெரிவித்துள்ளார்.

மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Sunday, 6 March 2016

84 வயதில் மாடல் அழகியை திருமணம் செய்த ரூபர்ட் முர்டோக்

லண்டன்:சர்வதேச ஊடக தொழிலின் ஜாம்பவான் என புகழப்படும், ரூபர்ட் முர்டோக், மாடல் அழகி ஜெர்ரி ஹாலை, திருமணம் செய்து கொண்டார். 'டிவி' சேனல்கள், செய்தி தாள்கள் என, பல நாடுகளில் ஏராளமான ஊடகங்களை நடத்தி வருபவர், ரூபர்ட் முர்டோக், 84. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், அமெரிக்க குடியுரிமை பெற்றவர். ஏற்கனவே, மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். முர்டோக்கின் முதல் மனைவி பாட்ரிகா புக்கர், இரண்டாவது மனைவி அன்னா போர்ல், மூன்றாவது மனைவி வெண்டி டெங். மூன்று மனைவியர் மூலம் அவருக்கு, ஆறு குழந்தைகளும் உள்ளனர்.


இந்நிலையில், ஹாலிவுட் நடிகையும், முன்னாள் மாடல் அழகியுமான ஜெர்ரி ஹாலுடன், அவருக்கு காதல் ஏற்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை ஜெர்ரி ஹாலும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். கடந்த ஆண்டு காதலிக்க துவங்கிய இந்த ஜோடி, திருமணம் செய்ய உள்ளதை, கடந்த மாதம் அறிவித்தனர். லண்டனில் அவர்களது திருமணம் நடைபெற்றது. எளிய திருமண நிகழ்ச்சியில், முர்டோகின், நான்கு மகள்களும், ஜெர்ரி ஹாலின், இரண்டு மகள்களும் பங்கேற்றனர்.

Saturday, 5 March 2016

அதிக அபராதம் கட்டிய ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் தயாரிப்புகளை உருவாக்கும் போது அதன் தரத்தில் எவ்வித சமரசமும் செய்துக்கொண்டது இல்லை. தான் விரும்பியதை சாதிக்க எந்த எல்லைக்கும் போக தயாராக இருந்தார். அவரின் இந்த பிடிவாத குணம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. தனது காரை பொது இடத்தில் பார்க் செய்யும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றக் கூடாது என்பதில் ஸ்டீவ் ஜாப்ஸ் பிடிவாதமாக உள்ளார் என்று கிண்டல் செய்யும் அளவிற்கு, தனது காரை கண்ட இடங்களில் நிறுத்துவது அல்லது மாற்று திறனாளிகளுக்கான இடங்களில் காரை நிறுத்துவது என்று அட்டகாசம் செய்துள்ளார் ஸ்டீவ் ஜாப்ஸ்.


இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோ நகராட்சி வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு அனைவர் முகத்திலும் புன்னகையை வரவழைத்துள்ளது. சான் பிரான்சிஸ்கோ நகராட்சி நிர்வாகம், அதிகமாக வாகன நிறுத்த அபராதம் செலுத்தியவர்களிடம் அந்த தொகையை திருப்பி அளிக்க முடிவு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.


இந்த பட்டியலில் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் பெயர் இடம்பெற்றுள்ளது.  ஸ்டீவ் ஜாப்ஸ் 176 டாலர் கூடுதலாக அபராதம் கட்டியுள்ளார். இந்த தொகையை ஸ்டீவ் குடும்பத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை பின்பற்றாத ஸ்டீவ் ஜாப்ஸ், விதிக்கப்பட்டதை விட அதிக அபராதம் கட்டியுள்ளது பலருக்கு ஆச்சிரியம் அளித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Friday, 4 March 2016

வேலைக்கார பெண்ணை மாடலாக்கிய ஆடை வடிவமைப்பாளர்

பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் மன்தீப் நாகி தன்னுடைய புது ஆடைகளை பிரபலப்படுத்த வீட்டு வேலை செய்யும் பணிப் பெண் ஒருவரை மாடலாக தேர்ந்து எடுத்து உள்ளார். டெல்லியில் மன்தீப் நாகி தனது தோழியை பார்க்க சென்ற போது, கமலா-வை (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பார்த்துள்ளார். இதையடுத்து அவரை தனது புதிய ஆடைகளை பிரபலப்படுத்த மாடலாக பயன்படுத்தலாம் என்ற யோசனை அவருக்கு தோன்றியுள்ளது.


2 குழந்தைகளுக்கு தாயான கமலா, தன்னை மாடலாக அழைப்பதை கேட்டு ஆச்சர்யமடைந்துள்ளார். வடிவமைப்பாளர் மன்தீப் நாகி கூறுகையில், எங்களுடைய புதிய ஆடைக்கு நான் ஒரு புதிய மாடலை எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் கமலா இருந்தார். நான் முதலில் என் ஆசையை கமலாவிடம் கூறினேன். அவர் இதுபற்றி யோசிக்க ஒரு நாள் அவகாசம் கேட்டார். பின்னர் அவர் மொடலாக பணியாற்ற சம்மதம் தெரிவித்தார்.

தான் அணிய போகும் ஆடைகள் மற்றும் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றி கேள்வி எழுப்பினார்.அதைப் பற்றிய முழுதான விளக்கத்தை அளித்த பின்னர் அவர் முழுமனதுடன் மாடலிங்கிற்கு தயாரானார். இதையடுத்து நாங்கள் புகைப்படம் பிடிக்கும் வேலைகளை தொடங்கினோம்.அவருக்கு சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரம் செய்து புகைப்படம் எடுத்தோம்.


முதலில் கேமராவை பார்த்து தயங்கிய அவர், சிறிது நேரத்தில் தயக்கமின்றி போஸ் கொடுத்து உதவினார்.எனவே புகைப்படங்கள் அருமையாக வந்துள்ளது. மாடலிங் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. இந்த மாடலிங் சூட்டிங் மூலம் கமலா வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை என்னால் முழுவதுமாக கூற இயலாது. ஆனால் அவர் இந்த மாடலிங் அனுபவத்தை எளிதில் மறக்கமாட்டார் என கூறுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

உலக பணக்காரர்களின் பட்டியல்

ஃபோர்ப்ஸ் பத்திரிகை வெளியிடும் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் 16-வது முறையாக மீண்டும் முதல் இடத்தை தக்க வைத்தார் பில் கேட்ஸ். இந்திய தொழிலதிபரான முகேஷ் அம்பானி 39-வது இடத்தைப் பிடித்துள்ளார்.

உலக அளவில் உள்ள பணக்காரர்கள் பட்டியலை பிரபல அமெரிக்க வர்த்தக பத்திரிகையான ஃபோர்ப்ஸ் வெளியிட்டது. உலக பணக்காரர்கள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்துவந்த மைக்ரோசாஃப்ட் நிறுவனர் பில் கேட்ஸ் இம்முறையும் அதே இடத்தில் நீடிக்கிறார். கடந்த 21 ஆண்டுகளாக பணக்காரர்களை பட்டியலிடும் ஃபோர்ப்ஸ் பத்திரிகையில் 16-வது முறையாக முதல் இடத்தை பில் கேட்ஸ் தக்கவைத்துள்ளார்.


பிப்ரவரி 13-ஆம் தேதி கணக்கின்படி, பில் கேட்ஸின் மொத்த சொத்து மதிப்பு கடந்த ஓர் ஆண்டில் 3 பில்லியன் டாலர் உயர்ந்து 79 பில்லியன் டாலாராக உள்ளது. பில் கேட்ஸை தொடர்ந்து 2-வது இடத்தில் மெக்ஸிகோ தொழிலதிபர் கார்லோஸ் ஸ்லிம் உள்ளார். 3-வது இடத்தில் அமெரிக்காவின் பெரும் முதலீட்டாலர் வாரண் பஃபெட் உள்ளார். இவரது சொத்து மதிப்பு 72.7 பில்லியன் டாலராகும்.

ஃபோர்ப்ஸின் நிலவரப்படி உலக அளவில் மொத்தம் 1,826 பணக்காரர்கள் உள்ளனர். இந்த எண்ணிக்கையில் கடந்த ஓர் ஆண்டிலிருந்து 181 புதியவர்கள் இடம்பெற்றுள்ளனர்.


மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Wednesday, 2 March 2016

சாதனைக்கு வயது ஒரு தடை அல்ல

சர்வதேச அளவில் சினிமாவுக்கான மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை முதல் முறையாக வென்றுள்ளார் லியனார்டோ டிகாப்ரியோ. இதற்கு முன் 5 முறை அவர் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், விருது வென்றிருப்பது இதுதான் முதல் முறை. ஆனால் விருதினைப் பெற்றுக் கொண்டதும் மற்றவர்களைப் போல மேடையில் உணர்ச்சிவசப்பட்டு அழவோ, நன்றி மேலீட்டால் மிகையாகப் பேசவோ முயலவில்லை. அந்த ஏற்புரையைப் பார்த்து உலகமே லியானர்டோ டிகாப்ரியோவை புதிய மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்துள்ளது.


அவர் பேசியதாவது : "நன்றி... அகாடமிக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடன் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கும் எனது வாழ்த்துகள். நம்பமுடியாத நடிப்புத் திறனை அவர்கள் காட்டியிருந்தார்கள். அற்புதமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த பலனே 'தி ரெவனன்ட்'. முதலில் எனது சகோதரனைப் போன்ற டாம் ஹார்டியை (படத்தின் பிரதான வில்லன்) குறிப்பிட விரும்புகிறேன். டாம்... திரையில் உனது அசாத்தியமான ஆளுமையை மிஞ்சுவது, திரைக்கு அப்பால் நீ இனரிட்டுவிடம் பாராட்டும் நட்பே. இந்த இரண்டு வருடங்களில் நீ சினிமா வரலாற்றில் உனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டாய். நீ அபாரமான திறமைசாலி. அற்புதமான சினிமா அனுபவத்தைத் தந்த உனக்கும், படத்தின் ஒளிப்பதிவாளர் லுபெஸ்கிக்கும் நன்றி. ஃபாக்ஸ் நிறுவனத்துக்கும், ரீஜென்சி நிறுவனத்துக்கும் நன்றி. எனது மொத்த அணிக்கும் நன்றி. இந்தத் துறையில் எனது ஆரம்ப கால வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்த கேடன் ஜோன்ஸுக்கு நன்றி, சினிமா என்ற கலையைப் பற்றி எனக்கு நிறையக் கற்றுத் தந்த ஸ்கார்சிஸிக்கு நன்றி, இந்தத் துறையில் நான் நிலைத்திருக்க உதவிய ரிக் யோர்னுக்கு நன்றி, எனது பெற்றோருக்கு நன்றி, அவர்கள் இல்லையெனில் எதுவுமே சாத்தியப்பட்டிருக்காது. எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


இறுதியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்த இயற்கை உலகுடனான மனிதர்களின் உறவே ரெவனன்ட் திரைப்படம். அதிக வெப்பமயமான ஆண்டாக 2015-ல் பதிவான இந்த உலகத்தில், (ரெவனன்ட்) படப்பிடிப்புக்காக, பனியைத் தேடி, உலகின் தெற்கு மூலைக்குச் சென்றோம். காலநிலை மாற்றம் என்பது நிஜம். அது இப்போது நடந்து கொண்டிக்கிறது. மனித இனமே தற்போது எதிர்கொண்டிருக்கும் உடனடி அச்சுறுத்தல் அது. எந்த நடவடிக்கையையும் தள்ளிப் போடாமல் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அதற்காக உழைக்க வேண்டிய நேரம் இது. உலகில் பெரும் மாசுபாட்டை ஏற்படுத்துபவர்களுக்காகவும், கார்ப்பரேட்களுக்காகவும் பேசும் தலைவர்களை ஆதரிக்காமல் மனித இனத்துக்காக, உலகின் பூர்வகுடிகளுக்காக, காலநிலை மாற்றத்தால் நேரடியாக பாதிக்கப்படும் கோடிக்கணக்கான பின்தங்கிய மக்களுக்காக, நமது குழந்தைகளின் குழந்தைகளுக்காக, அரசியலாலும் பேராசையாலும் நசுக்கப்படும் குரல்களுக்காக பேசும் தலைவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். இந்த அற்புதமான விருதுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. நாம் நமக்குக் கிடைத்த இந்த உலகை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; நான் விருது பெற்ற இன்றைய இரவை அலட்சியமாக எடுத்துக் கொள்ளவில்லை."

மேலும் பல தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்

Tuesday, 1 March 2016

புதிய சர்ச்சையில் சிக்கிய டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்  எதையாவது கூறி அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருபவர். இப்பொழுது மட்டுமின்றி, கடந்த காலங்களில் கூட சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு புயலை கிளப்பியுள்ளார். உதாரணத்திற்கு, 1990ம் ஆண்டுகளில் புகழ்பெற்ற ரேடியோ நிகழ்ச்சிகளில் டொனால்ட் டிரம்ப் பங்கு பெற்று உள்ளார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால், புகழ்பெற்ற பெண்களின் அழகை வர்ணிப்பது தான்.


கடந்த 2000ம் ஆண்டு இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்றுள்ளார். அப்போது பேசும்போது, ‘இங்கிலாந்து  இளவரசியான டயானா அழகில் சிறந்தவர். உயரமாகவும், மென்மையான தேகத்தை உடைய டயானாவை அனைவரும் ரசிப்பார்கள். எனக்கு உண்மையில் வாய்ப்பு கிடைத்திருந்தால், அவருடன் உறவுக்கொள்ளவும் தயங்கி இருக்க மாட்டேன். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்’ என பேசியுள்ளார்.


டொனால்டு டிரம்ப் மட்டுமில்லாமல், இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று ‘இளவரசர் சார்லஸை விவாகரத்து பெற்ற பின்னர்கூட, டயானாவை நெருங்க டொனால்டு டிரம்ப் முயற்சி செய்ததாக தகவல் வெளியிட்டு பரபரப்பை கூட்டியது. இளவரசி டயானா மட்டுமின்றி பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி உள்ளிட்ட நடிகைகள் மீதும் தனக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதாக வெளிப்படையாக பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது அது பெரிதாக எடுத்து கொள்ளப்படவில்லை. தற்போது, அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடும்போது பழைய சங்கதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகிறது.

மேலும் பல தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்

Friday, 26 February 2016

ஸ்டீவ் ஜாப்ஸின் வெற்றி கதைகள்

ஆப்பிள் கம்ப்யூட்டர் நிறுவனத்தை தொடங்கியவர்களில் ஒருவரான ஸ்டீவ் ஜாப்ஸ் பிறந்த தினம் (பிப்.24). கம்ப்யூட்டர் வல்லுநர் என அறியப்பட்ட ஸ்டீவ் ஜாப்ஸ், சிறந்த பேச்சாளர். 2005-ம் ஆண்டு ஜூன் 12-ம் தேதி கலிஃபோர்னியா மாகாணத்தில் உள்ள ஸ்டான்போர்டு பல்கலைக்கழக பட்டமளிப்பு விழாவில் அவரது பேச்சு பலராலும் பாராட்டப்பட்டது. பட்டமளிப்பு விழாவில் பேசிய ஸ்டீவ் ஜாப்ஸ் "நான் கல்லூரியில் பட்டப்படிப்பை முழுமையாக முடிக்கவில்லை. நான் என் வாழ்வில் தொடர்புடைய மூன்று கதைகளை உங்களுடன் பகிர்ந்தளிக்க விரும்புகிறேன்" என்றார். அந்த மூன்று கதைகள் உங்களுக்காக...


முதல் கதை

நான் பிறக்கும் போது எனது தாய், தந்தை படித்துக் கொண்டிருந்தனர். என்னை மற்றொருவருக்கு தத்துக் கொடுத்தனர். அவர்கள் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவர்களாக இருந்தாலும், என்னை குறையின்றி வளர்த்தனர். அப்போது படிப்பை தொடர வேண்டாம் என முடிவெடுத்தேன். நண்பர்கள் உதவியுடன் அவர்கள் வீட்டின் தரையில் படுத்தேன். கோவில்களில் சாப்பிட்டேன். கஷ்டங்கள்தான் என்னுள் இருந்த உள்ளுணர்வையும் தன்னம்பிக்கையும் வளர்த்தன. பத்து ஆண்டு உழைப்பின் பயனாக, 'மெகின்டோஷ்' கம்ப்யூட்டரை வடிவமைத்தேன். எனது முதல் கம்ப்யூட்டர் 'டைப்போகிராபி' (அச்சுக் கலை) கொண்டது.  மேலும் இரண்டு கதைகளை கேட்க, இந்த வீடியோவை கேளுங்கள்...

Tuesday, 23 February 2016

நாய்களை வளர்க்க விரும்பும் இங்கிலாந்து ராணி

இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு 90 வயதாகிறது. அவர் நாய்கள் மீது மிகவும் பிரியமானவர். தற்பொழுது உயர் ரக 30 நாய்களை ராஜ உபச்சாரத்துடன் பார்த்துக்கொள்கிறார். இதற்கு சத்தான உணவுகளை மட்டுமே கொடுக்கிறார். உணவாக முயல், கோழிகளை வெள்ளித்தட்டில் கொடுக்கிறார். ஹோமியோபதி, மூலிகையை உணவில் சேர்த்து கொடுக்கிறார். நோயின்றி ஆரோக்கியமாக வளர்க்கிறார். எலிசபெத்தின் 18ஆவது பிறந்த நாளுக்கு அவரது பெற்றோர் நாய் ஒன்றை பரிசாக அளித்தனராம். அதிலிருந்து நாய் மீது அதிக அன்பு காட்டியுள்ளார்.

106 வயது பெண்மணியுடன் ஒபாமா நடனமாடினாரா??

106 வயது பெண்மணியுடன் ஒபாமா வெள்ளை மாளிகையில் நடனமாடினார். விர்ஜினா என்ற 106 வயது பெண்மணி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜனாதிபதியை பார்ப்பதுதான் தன் ஆசை என கூறி இருந்தார். அந்த விஷயம் ஊடகங்கள் வழியாக இப்போது தான் வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளது.


அதனால், ஒபாமா மற்றும் அவரது மனைவி இருவரும் அந்த பெண்மணியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து அவரை வரவேற்று அவருடன் இருவரும் நடனமாடி மகிழ்ந்தனர். அந்த பெண்மணி கருப்பின வரலாற்றை கொண்டாடுவோம் என சொல்லி நடனமாடினார்.

Want to Share This News With Friends?

Quick Search