Pages

Friday 4 March 2016

வேலைக்கார பெண்ணை மாடலாக்கிய ஆடை வடிவமைப்பாளர்

பிரபல இந்திய ஆடை வடிவமைப்பாளர் மன்தீப் நாகி தன்னுடைய புது ஆடைகளை பிரபலப்படுத்த வீட்டு வேலை செய்யும் பணிப் பெண் ஒருவரை மாடலாக தேர்ந்து எடுத்து உள்ளார். டெல்லியில் மன்தீப் நாகி தனது தோழியை பார்க்க சென்ற போது, கமலா-வை (பெயர் மாற்றப்பட்டுள்ளது), பார்த்துள்ளார். இதையடுத்து அவரை தனது புதிய ஆடைகளை பிரபலப்படுத்த மாடலாக பயன்படுத்தலாம் என்ற யோசனை அவருக்கு தோன்றியுள்ளது.


2 குழந்தைகளுக்கு தாயான கமலா, தன்னை மாடலாக அழைப்பதை கேட்டு ஆச்சர்யமடைந்துள்ளார். வடிவமைப்பாளர் மன்தீப் நாகி கூறுகையில், எங்களுடைய புதிய ஆடைக்கு நான் ஒரு புதிய மாடலை எதிர்பார்த்தேன். என் எதிர்பார்ப்புக்களை பூர்த்தி செய்யும் வகையில் கமலா இருந்தார். நான் முதலில் என் ஆசையை கமலாவிடம் கூறினேன். அவர் இதுபற்றி யோசிக்க ஒரு நாள் அவகாசம் கேட்டார். பின்னர் அவர் மொடலாக பணியாற்ற சம்மதம் தெரிவித்தார்.

தான் அணிய போகும் ஆடைகள் மற்றும் எடுக்கப்படும் புகைப்படங்கள் எப்படி இருக்கும் என்பது பற்றி கேள்வி எழுப்பினார்.அதைப் பற்றிய முழுதான விளக்கத்தை அளித்த பின்னர் அவர் முழுமனதுடன் மாடலிங்கிற்கு தயாரானார். இதையடுத்து நாங்கள் புகைப்படம் பிடிக்கும் வேலைகளை தொடங்கினோம்.அவருக்கு சிகை அலங்காரம் மற்றும் முக அலங்காரம் செய்து புகைப்படம் எடுத்தோம்.


முதலில் கேமராவை பார்த்து தயங்கிய அவர், சிறிது நேரத்தில் தயக்கமின்றி போஸ் கொடுத்து உதவினார்.எனவே புகைப்படங்கள் அருமையாக வந்துள்ளது. மாடலிங் படப்பிடிப்பு வெற்றிகரமாக முடிந்தது. இந்த மாடலிங் சூட்டிங் மூலம் கமலா வாழ்க்கையில் என்ன மாற்றங்கள் நிகழும் என்பதை என்னால் முழுவதுமாக கூற இயலாது. ஆனால் அவர் இந்த மாடலிங் அனுபவத்தை எளிதில் மறக்கமாட்டார் என கூறுவேன் என குறிப்பிட்டுள்ளார்.

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Want to Share This News With Friends?

Quick Search