பி.டி.செல்வகுமார் தயாரிப்பில், ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள ‘போக்கிரிராஜா’படத்தில், ஜீவா–ஹன்சிகா ஜோடியாக நடித்து இருக்கிறார்கள். படத்தில், கவிஞர் விவேக் எழுதிய ‘‘பப்ளி...பப்ளி...’’ என்ற பாடல் இடம்பெறுகிறது.
இந்த பாடல் காட்சியை படமாக்கியதில் இருந்து ஹன்சிகாவை படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ‘‘பப்ளி...பப்ளி...’’ என்று செல்லமாக அழைக்கிறார்களாம்!
ஒரு பிக்சல் என்பது கணினி மானிட்டர் அல்லது (டிஜிட்டல் ஸ்க்ரீனில்) காட்சித்திரையில் தெரியும் காட்சியில் ஒரு சிறிய சதுர புள்ளி ஆகும். இவ்வகை திரைகளை ஒரு உருப்பெருக்கி கண்ணாடி மூலம் நோக்கினால் அப்புள்ளிகளை நாம் எளிதாக காணலாம். ஸ்க்ரீனில் புள்ளிகள் அதிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தால் காட்சி அல்லது படம் மிக தெளிவாக தெரியும்.
இதை நாம் உபயோகிக்கும் செல் போன்களில் தெளிவாக பார்க்கலாம். அதாவது விலை குறைந்த செல்போன் ஸ்க்ரீனில் இந்த கட்டங்கள் சாதாரண கண்களுக்கே தெளிவாக தெரியும். அதே வேளையில் மிக விலை உயர்ந்த போன்களின் டிஸ்ப்ளேக்களில் இந்த புள்ளிகள் சாதாரண் கண்களுக்கு புலப்படாது. ஆனால் ஒரு உருப்பெருக்கி கண்ணாடியை வைத்து பார்த்தீர்களானால் பிக்சல் எனப்படும் புள்ளிகளை காணலாம். அதாவது ஃபிக்ஸில் எனப்படும் அப்புள்ளிகள் அதிகரிக்க அதிகரிக்க காட்சி அல்லது படம் பளிச்சென்றும் அதிக கவர்ச்சியுடனும் தெரிய ஆரம்பிக்கிறது.
எனவே நாம் வாங்கும் டிஜிட்டல் கேமராக்களில் ஃபிக்ஸில்கள் அதிகமாக இருப்பின் படங்கள் தெளிவாக இருக்கும். ஒரு மில்லியன் ஃபிக்ஸில்கள் ஒரு மெகா ஃபிக்ஸில் என்று அழைக்கப்படுகிறது. உதாரணத்திற்கு 3.1 மெகா ஃபிக்ஸில் கேமராவில் 2048 x 1536 புள்ளிகள் கொண்ட போட்டோவை எடுக்கலாம். அதன் மொத்த புள்ளிகள் 3,145,728 ஃபிக்ஸில் ஆகும். இந்த அளவே 3.1 மெகா ஃபிக்ஸில் என்று அழைக்கபடுகிறது.
தொழில் நுட்பம் வளர வளர அதிக மெகா ஃபிக்ஸில்கள் கொண்ட கேமரா உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. தற்போதைய நிலவரப்படி சாதாரண பயன்பாட்டிற்க்காக அதிகபட்சமாக 120 MP கேமரா மார்க்கட்டில் கிடைக்கிறது. இதன் விலை சுமார் 37,000 அமெரிக்க டாலர்களாகும். ஆனால் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட 570 மெகா ஃபிக்ஸில் கொண்ட Fermilab’s digital camera தான் உலகின் மிக அதிக அளவு மெகா ஃபிக்ஸில் கேமராவாகும்.
அஜித் தற்போது ஆபரேஷன் செய்துவிட்டு முழு நேர ஓய்வில் இருக்கிறார். தனது குடும்பத்தினருடன் வெளிநாடு சென்று விடுமுறையை கழித்து வரும் அஜித், அடுத்தாவதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களுக்கு பிறகு சிறுத்தை சிவாவுடன் மீண்டும் அஜித் இணையவிருக்கிறார். இது அஜித் நடிக்கும் 57-வது படமாகும்.
இந்த படம் எப்போது தொடங்கும் என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், வருகிற மே மாதம் 1-ந் தேதி அஜித் பிறந்தநாளில் படத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 3 மாதங்களில் படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கும் சரித்திர பின்னணியில் உள்ள படத்தில் இணையவிருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்நிலையில், அஜித்தின் 57-வது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அறிவிப்பார்கள் என தெரிகிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.
ஆண்களிடையே மலட்டுத்தன்மையும் அதிகரித்துவருவது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கைபேசிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மற்றும் உஷ்ணசக்தியானது ஆண்களின் விந்தணுக்களை பாதித்து, அவற்றை செயலிழக்க செய்துவிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி புதிய வாரிசை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்கள் தங்களது பேண்ட் பாக்கெட்களில் கைபேசிகளை வைக்காமல் இருப்பதும், பேட்டரி ரீசார்ஜ் செய்யும் வேளைகளில் செல்போன்களை அணைத்து வைத்திருப்பதும் பாதுகாப்பானது என இந்த ஆராய்ச்சி தொடர்பான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.
அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் ஆன்ட்ராய்டு ஸ்மார்ட்போனில் நிலநடுக்கத்தை கண்டறியும் அப்பிளிகேஷனை உருவாக்கியுள்ளனர். "Myshake" எனப் பெயரிடப்பட்டுள்ள இந்த அப்ளிகேஷன், நிலநடுக்கத்தினை crowdsourcing phones மூலம் முன்கூட்டியே கணித்துவிடுகிறது. அதாவது, ஒரு இடத்தில் நிலநடுக்கம் நிகழப்போகிறது என்றால், அந்த இடம் மற்றும் நேரம் அதுமட்டுமின்றி அதன் அதிர்வீச்சு போன்றவற்றை துல்லியமாக ஸ்கேன் செய்து உடனடியாக அது சம்பந்தப்பட்ட தகவல்கள் அனைத்தையும் கைப்பேசிக்கு அனுப்பி வைக்கிறது.
60 சதவீதம் வரையிலான ஆன்ட்ராய்டு ஸ்மார்ட் கைப்பேசிகள் சுமார் 6 மைல் வரையிலான தூரத்தில் நிகழும் நிலநடுக்கத்தை தரவு(Data) அடிப்படையில், மிகத்துல்லியமாக கணிக்கும் என உறுதியாக கூற முடியும் என விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர். தற்போது, மக்கள் அந்த அப்பிளிகேசனை தரவிறக்கம் செய்து அதனை பயன்படுத்துவதற்கு முன்பாக, அது பற்றிய தகவல்களை முழுமையாக தெரிந்து கொள்ள வேண்டும். கலிபோர்னியாவில் 16 மில்லியன் ஸ்மார்ட் கைபேசி மற்றும் உலக அளவில் 1 பில்லியன் ஸ்மார்ட் போன்களில் இந்த அப்பிளிகேஷன் பொருத்தப்படுவதற்கு மதிப்பிட்டுள்ளதாக விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
‘சண்டை கோழி’ படத்தின் இரண்டாம் பாகம் கைவிடப்படுவதாக நடிகர் விஷால் அறிவித்துள்ளார்.
2006-ம் ஆண்டு லிங்குசாமியின் இயக்கத்தில் வெளிவந்த விஷாலின் இரண்டாவது படம் ‘சண்டை கோழி’. மீராஜாஸ்மின் விஷாலுக்கு ஜோடியாக நடித்திருந்தார். இந்தப் படத்தை விஷாலின் தந்தை ஜி.கே.ரெட்டியே தயாரித்திருந்தார்.
இப்போது லிங்குசாமி ‘ரஜினிமுருகன்’ படத்தை ரிலீஸ் செய்து பல பிரச்சினைகளில் இருந்து ரிலாக்ஸாகியிருக்கிறார். ஆறு மாதங்களுக்கு முன்பு ‘ரஜினி முருகன்’ படத்தின் இசை வெளியீட்டு விழாவிலேயே ‘சண்டை கோழி’ படத்தின் இரண்டாம் பாகத்தை தான் இயக்கப் போவதாக அறிவித்திருந்தார்.
இதனை ஏற்று விஷாலும் லிங்குவுக்கு கால்ஷீட் கொடுத்திருந்தார். இப்போது விஷால் ‘மருது’ படத்தில் நடித்து வருவதால் அது முடிந்தவுடன் நேரடியாக ‘சண்டை கோழி’க்கு வருவதாகவும் சொல்லியிருந்தார்.
இந்த நேரத்தில் இன்றைக்கு பிரபல சாமியாரான ரவிசங்கரை பெங்களூரில் தனது தந்தையுடன் சென்று சந்தித்து ஆசி வாங்கிய விஷால், அங்கிருந்தே டிவீட்டரில் போட்ட ஒரு செய்தி ‘சண்டை கோழி’ செய்தியை ஒரு கனவாக்கிவிட்டது.
விஷால் தன் ட்வீட்டில் “சினிமா படைப்பாளிகள் சிலர் தங்கள் பணியின் மீது முழு கவனம் இல்லாமல் இருப்பதைப் பார்க்கும்போது வருத்தமாக இருக்கிறது. நடிகர்கள் நடிப்பிலும், இயக்குநர்கள் இயக்கத்திலும் கவனம் செலுத்துவது நல்லது. எனவே சண்டைக்கோழி படம் கைவிடப்படுகிறது..” என்று குறிப்பிட்டுள்ளார்.
விஷால் இந்தச் செய்தியில் கண்டித்திருப்பது இயக்குநர் லிங்குசாமியைத்தான் என்பது தெள்ளத் தெளிவாகவே தெரிகிறது. ஏற்கெனவே பல பணச் சிக்கல்களில் சிக்கித் தவிக்கும் லிங்குசாமிக்கு இந்தப் படத்தையும் தானே தன் பேனரிலேயே தயாரிக்க வேண்டும் என்று நிரம்ப ஆசை.
இதற்கேற்றாற்போல் பைனான்ஸ், கடன் என்று விஷாலின் பெயரை முன் வைத்து லிங்குசாமி எடுத்த அனைத்துவித முயற்சிகளையும் விஷால் விரும்பவில்லையாம். ஏற்கெனவே ஜெமினி லேப் தயாரிப்பில் விஷால் நடித்த ‘மதகஜராஜா’ இன்னமும் ரீலீஸாக முடியாமல் தவியாய் தவிக்கிறது.
இந்த நேரத்தில் லிங்குவின் தொடர்ச்சியான இந்த கடன் வாங்கும் பிரச்சினையால் இந்தப் படமும் தொங்கலில் நின்றால், அது தனக்குத்தானே குழி வெட்டிக் கொள்வதற்கு சமம் என்பதை உணர்ந்துதான் விஷால் தைரியமாக இந்த முடிவை எடுத்திருப்பதாகத் தகவல். இயக்குநர் லிங்குசாமி இதற்கென்ன கவுண்ட்டர் அட்டாக் கொடுக்கப் போகிறாரோ தெரியவில்லை..
முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடல்நீர் மட்டம் 14 செ.மீ வரை உயர்ந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு எச்சரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள புவி மற்றும் கோள் அறிவியல் துறை சார்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக புவி வெப்பம் குறித்தும், கடல்நீர் மட்டம் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.
ஆய்வு தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், கடந்த 35 ஆயிரம் ஆண்டுகளின் கடல் நீர் மட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கடந்த 6,000 ஆண்டுகளாக கடல் நீர் மட்டத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை, ஸ்திரமாகவே இருந்தது. ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன், கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்படத் துவங்கியது.
இத்தகைய மாற்றத்தை 150 ஆண்டுக்கு முந்தைய பதிவுகளில் காண முடியவில்லை. கடல் அலைகளின் உயரமும், முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து உள்ளது. கடல் மட்டம் உயர்வதற்கும், வெப்பநிலை உயர்வதற்கும் தொடர்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.
பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான விண்வெளிப் பயணத்தின்போது இனம்புரியாத, மனதை மயக்கும் புதுவித இசையை சில விண்வெளி வீரர்கள் கேட்க நேர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
1969ம் ஆண்டு பூமியில் இருந்து சந்திரனுக்கு அப்போலோ- 10 விண்கலத்தின் மூலம் பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்களான ஜான் யங், தாமஸ் ஸ்டாப்போர்ட் மற்றும் யூகேன் கெர்னன் ஆகியோர் அந்த அபூர்வ இசையை கேட்டு, அதுதொடர்பாக பேசிக் கொண்ட தகவல்களை நாசா பதிவுசெய்து வைத்துள்ளது.
இரு தொலைத்தொடர்பு இயந்திரங்களுக்கு இடையில் ஏற்படும் ஒலிகாந்த ஈர்ப்புகூட இதைப்போன்ற இசைவடிவில் கேட்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும், சனி கிரகத்தில் உள்ளதைப்போல் சந்திரனில் புவிஈர்ப்பு மற்றும் மின்காந்த அலைகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
1969-ம் ஆண்டு சந்திரனில் முதன்முதலில் காலடி பதித்த அமெரிக்க விண்வெளி வீரரான நீல் ஆர்ம்ஸ்டிராங், மசூதிகளில் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்கொலியைப் போன்ற சப்தத்தை தனது விண்வெளிப் பயணத்தின்போது சந்திரனில் கேட்க நேர்ந்ததாக பல ஆண்டுகளுக்கு பின்னர் தெரிவித்திருந்தார்.
அப்போது, அது என்ன சப்தம்? என்பதை அறியாமல் இருந்த ஆர்ம்ஸ்டிராங், பூமிக்கு திரும்பிய பின்னர் எகிப்துக்கு சென்றிருந்தபோது அதே சப்தத்தை அங்கு கேட்க நேரிட்டது. அது என்ன சப்தம்? என்று தனது அருகில் இருந்த நண்பரை ஆர்ம்ஸ்டிராங் கேட்டதாகவும், தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் பாங்கொலியின் சப்தம் என அந்த நண்பர் தெரிவித்ததாகவும், இதையடுத்து, ஆர்ம்ஸ்டிராங் இஸ்லாமிய மதத்தை தழுவியதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.
இளையராஜா ஆயிரம் என்ற பெயரில் பிப்ரவரி 27 ஆம் தேதி இளையராஜாவுக்கு நடக்கும் பாராட்டு விழா மற்றும் இசை நிகழ்ச்சியில் ரஜினிகாந்த், அமிதாப் பச்சன் ஆகியோர் பங்கேற்கப் போவதாக தகவல் வெளியாகியுள்ளது. இளையராஜா மியூசிக்மேனேஜ்மெண்ட் நிறுவனமும் விஜய் தொலைக்காட்சியும் இணைந்து நடத்தும் இந்த நிகழ்ச்சியை நடத்துகிறது. தென்னிந்திய திரையுலகமே இதில் பங்கேற்கிறது. இந்நிகழ்ச்சியில் கலந்துகொள்ள கமல், ரஜினி உள்ளிட்ட முன்னணி நடிகர்கள் பலருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அமிதாப்பச்சனையும் விழாவில் கலந்துகொள்ள அழைத்துள்ளனர். ஏற்கெனவே மும்பையில் இயக்குநர் பால்கி நடத்திய பாராட்டு விழாவில் பங்கேற்று இளையராஜாவை பாராட்டியவர் அமிதாப்.
சென்னையில் நடக்கும் பாராட்டு விழாவிலும் பங்கேற்க அமிதாப் ஒப்புதல் தெரிவித்துள்ளாராம். ரஜினியும் ஒப்புதல் தெரிவித்திருக்கிறார் என்கிறார்கள். கமல் இப்போது வெளிநாட்டில் இருக்கிறார். திட்டமிட்டபடி சென்னை வந்துவிட்டால் அவரும் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார். இவர்களோடு மலையாள முன்னணி நடிகர்கள் மோகன்லால் மற்றும் மம்முட்டி ஆகியோரையும் அழைத்திருக்கிறார்களாம். தெலுங்குத் திரையுலகம் மற்றும் கன்னடத் திரையுலகத்திலிருந்தும் முன்னணி நடிகர்கள் மற்றும் இயக்குநர்கள் பங்கேற்க உள்ளனர். திட்டமிட்டபடி இவர்கள் அனைவரும் பங்கேற்றால் இந்திய திரையுலகமே இளையராஜாவுக்கு பாராட்டு விழா எடுத்த மாதிரி ஆகிவிடும்.
உழைப்பினால் மனிதர்கள் உயருவர். நாடும் உயர முடியும் என்று காட்டிய உன்னத நகரம் டோக்கியோ. அது ஜப்பானின் தலைநகரம். ஹொன்ஷு,கொக்கைடோ, கியூஷு, ஷிக்கோக்கோ எனும் நான்கு பெருந்தீவு களின் சேர்க்கைதான் ஜப்பான். குட்டிநாடுதான் ஆனால், மின்னணுத் துறையில் உலகிற்கே வழிகாட்டிய நாடு அது இத்தனைக்கும் மன்னராட்சி உடைய நாடு. அரச குடும்பத்தினரைக் கடவுள் என ஜப்பானியர் போற்றுகின்றனர். அதனால் அரண்மனையை அவர்கள் கடந்து செல்கையில் சாலையில் சென்றாலும் வணங்குவர். அரண்மனைக்கு நிஷுபாஷி என்னும் இரட்டைப் பாலம் வழியே செல்ல வேண்டும்.
பாரிஸ் நகரின் ஈஃபிள் கோபுரத்தை முன் மாதிரியாக வைத்து கட்டப்பட்ட டோக்கியோ கோபுரம் 333 மீட்டர் உயரத்தில் 4000 டன் எடையில் நகரின் மய்யத்தில் உள்ளது. இரவு பதினொரு மணி வரை விளக்குகளால் ஜொலிக்கிறது. தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் தொடர்பு சாதனமாகவும் பயன்படுகிறது. ஹசிகோ என்பது ஒரு நாயின் பெயர். இந்நாய் தினமும் காலை முதல் மாலை வரை டோக்கியோ இரயில் நிலையங்களில் ஒன்றான ஷிடியா ரயில் நிலையத்தில் காத்திருக்குமாம். அந்த உரிமையாளர் இறந்த பிறகும் பல வருடங்கள் காத்திருந்ததாம். எனவே அந்நாயைப் போற்றும் வகையில் ஹசிகோவின் சிலை உள்ளது.
பிரெஞ்சு உணவு பழக்கவழக்கம், உணவு உண்ணுதல் என்பதையும் தாண்டி.... இது ஒரு பாரம்பரிய செயல்பாடு. இதனாலேயே பிரெஞ்சு உணவுகளும் சரி, அது பரிமாறப்படும் விதமும் சரி.. பிரான்ஸ் தாண்டியும் பிரபலம். இன்று பிரெஞ்சு உணவு பற்றி சில சுவையான செய்திகளை தெரிந்து கொள்வோம். பிரெஞ்சு உணவுகளில், நத்தை உணவு மிகவும் பிரபலம். வருடம்தோறும் 500 மில்லியன் நத்தைகள் இங்கு சாப்பிடுகின்றனர். உலகில் மிகப்பெரிய விவசாய உணவு ஏற்றுமதியில், இரண்டாவது இடம் பிரான்சுக்கு. அமெரிக்காவை விட, பிரான்சில் 'மக் டொனல்ட்' உணவகங்களின் விலை இரண்டு மடங்கு அதிகமாம்.
காரணம் இங்கே விவசாய உற்பத்தியில் தான் இதன் சுவை மேருகேற்றப்படுகிறதாம். பிரெஞ்சு நாடு, தன் மக்களுக்கு எல்லா நாட்டு வகை உணவுகளையும் ருசி பார்க்க சந்தோஷமாக அனுமதி வழங்கியிருக்கிறது. உலகின் அத்தனை ருசியான உணவு வகைகளையும் நீங்கள் பிரான்சில் இருந்தே ருசித்து சாப்பிடலாம். சீனாவின் பாம்பு நூடுல்ஸில் இருந்து, தமிழ்நாட்டு அடையார் ஆனந்தபவன் சைவ உணவு வரை இங்கு, பலவித உணவு விடுதிகள் உண்டு. மெக்ஸிகன் உணவு வகைகளை தேடிப்பிடித்து உண்ணுவது ஒரு கலையாம் பிரெஞ்சு மக்களுக்கு ......
இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு 90 வயதாகிறது. அவர் நாய்கள் மீது மிகவும் பிரியமானவர். தற்பொழுது உயர் ரக 30 நாய்களை ராஜ உபச்சாரத்துடன் பார்த்துக்கொள்கிறார். இதற்கு சத்தான உணவுகளை மட்டுமே கொடுக்கிறார். உணவாக முயல், கோழிகளை வெள்ளித்தட்டில் கொடுக்கிறார். ஹோமியோபதி, மூலிகையை உணவில் சேர்த்து கொடுக்கிறார். நோயின்றி ஆரோக்கியமாக வளர்க்கிறார். எலிசபெத்தின் 18ஆவது பிறந்த நாளுக்கு அவரது பெற்றோர் நாய் ஒன்றை பரிசாக அளித்தனராம். அதிலிருந்து நாய் மீது அதிக அன்பு காட்டியுள்ளார்.
கட்சத்தீவை மீண்டும் இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்று இலங்கை ராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார். இந்து இலங்கை உடன்படிக்கை படி கச்சத்தீவு இலங்கைக்கு உரியது என்றார். மேலும் மீனவர்களின் பிரச்சனையை இரு நாடுகளும் பேசி தீர்த்துக்கொள்ள வேண்டும் என்றார். எனவே கச்சத்தீவு இந்தியாவுக்கு வழங்குவது சாத்தியமற்றது என்று முடிவாக கூறி விட்டார்.
106 வயது பெண்மணியுடன் ஒபாமா வெள்ளை மாளிகையில் நடனமாடினார். விர்ஜினா என்ற 106 வயது பெண்மணி இரண்டு வருடங்களுக்கு முன்பு ஜனாதிபதியை பார்ப்பதுதான் தன் ஆசை என கூறி இருந்தார். அந்த விஷயம் ஊடகங்கள் வழியாக இப்போது தான் வெள்ளை மாளிகைக்கு வந்துள்ளது.
அதனால், ஒபாமா மற்றும் அவரது மனைவி இருவரும் அந்த பெண்மணியை வெள்ளை மாளிகைக்கு அழைத்து அவரை வரவேற்று அவருடன் இருவரும் நடனமாடி மகிழ்ந்தனர். அந்த பெண்மணி கருப்பின வரலாற்றை கொண்டாடுவோம் என சொல்லி நடனமாடினார்.