Pages

Saturday 27 February 2016

மெகா ஃபிக்ஸில்ஸ் என்றால் என்ன ?

ஒரு பிக்சல் என்பது  கணினி மானிட்டர் அல்லது  (டிஜிட்டல் ஸ்க்ரீனில்) காட்சித்திரையில் தெரியும்  காட்சியில்  ஒரு சிறிய சதுர  புள்ளி ஆகும். இவ்வகை திரைகளை ஒரு உருப்பெருக்கி கண்ணாடி மூலம் நோக்கினால் அப்புள்ளிகளை நாம் எளிதாக காணலாம். ஸ்க்ரீனில் புள்ளிகள் அதிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தால்  காட்சி அல்லது படம் மிக தெளிவாக தெரியும்.


இதை நாம் உபயோகிக்கும் செல் போன்களில் தெளிவாக பார்க்கலாம். அதாவது விலை குறைந்த செல்போன் ஸ்க்ரீனில் இந்த கட்டங்கள்  சாதாரண கண்களுக்கே தெளிவாக தெரியும். அதே வேளையில் மிக விலை உயர்ந்த போன்களின் டிஸ்ப்ளேக்களில் இந்த புள்ளிகள் சாதாரண் கண்களுக்கு புலப்படாது. ஆனால் ஒரு உருப்பெருக்கி கண்ணாடியை வைத்து பார்த்தீர்களானால் பிக்சல் எனப்படும் புள்ளிகளை காணலாம். அதாவது ஃபிக்ஸில் எனப்படும் அப்புள்ளிகள் அதிகரிக்க அதிகரிக்க காட்சி அல்லது படம் பளிச்சென்றும் அதிக கவர்ச்சியுடனும் தெரிய ஆரம்பிக்கிறது.

எனவே நாம் வாங்கும் டிஜிட்டல் கேமராக்களில் ஃபிக்ஸில்கள் அதிகமாக இருப்பின் படங்கள் தெளிவாக இருக்கும். ஒரு மில்லியன்  ஃபிக்ஸில்கள்  ஒரு மெகா ஃபிக்ஸில் என்று அழைக்கப்படுகிறது.  உதாரணத்திற்கு 3.1 மெகா ஃபிக்ஸில் கேமராவில்  2048 x 1536 புள்ளிகள் கொண்ட போட்டோவை எடுக்கலாம். அதன் மொத்த புள்ளிகள் 3,145,728 ஃபிக்ஸில் ஆகும். இந்த அளவே 3.1 மெகா ஃபிக்ஸில் என்று அழைக்கபடுகிறது.


தொழில் நுட்பம் வளர வளர அதிக மெகா ஃபிக்ஸில்கள் கொண்ட கேமரா உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. தற்போதைய நிலவரப்படி சாதாரண பயன்பாட்டிற்க்காக  அதிகபட்சமாக 120 MP கேமரா மார்க்கட்டில் கிடைக்கிறது.  இதன் விலை சுமார் 37,000 அமெரிக்க டாலர்களாகும். ஆனால் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட 570 மெகா ஃபிக்ஸில் கொண்ட   Fermilab’s digital camera தான் உலகின் மிக அதிக அளவு மெகா ஃபிக்ஸில் கேமராவாகும்.

மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Want to Share This News With Friends?

Quick Search