Pages

Friday, 4 March 2016

நாசாவின் புதிய கண்டுபிடிப்பு

நட்சத்திரங்களை ஆய்வு செய்ய 17 டன் எடையுள்ள தொலைநோக்கியுடன் ஜெட் விமானத்தில் பறக்கும் ஆய்வு மையத்தை நாசா ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் நாசா. இது, நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்காக 17 டன் எடையுள்ள தொலைநோக்கியுடன் கூடிய போயிங் ஜெட் விமானத்தை பறக்கும் விண்வெளி ஆய்வு மையமாக மாற்றியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இணையதளத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஒரு போயிங் 747 ரக ஜெட் விமானத்தை பறக்கும் விண்வெளி ஆய்வு மையமாக மாற்றியுள்ளது.


இதில் 17 டன் எடை மற்றும் 8 அடி நீளமுள்ள தொலைநோக்கியையும் நிறுவியுள்ளது. நட்சத்திரங்களை இந்த தொலைநோக்கி வழியாக பார்ப்பதற்கு ஏற்ற வகையில் 16க்கு 23 அடி உள்ள தானாக திறக்கும் கதவும் அமைக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கியை தரையில் இருந்து பயன்படுத்தும் போது, காற்று மண்டலத்தில் காணப்படும் தூசி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நட்சத்திரங்களை தெளிவாக காணமுடியாது. காற்று மண்டலத்திற்கு மேலே பறக்கும் திறனுடைய இந்த விமானம் தொடர்ந்து 12 மணிநேரம் 6,625 கடல் மைல் தொலைவுக்கு தொடர்ந்து பறக்கும் திறனுடையதாகும்.


தரையில் அமைக்கப்பட்டிருக்கும் தொலைநோக்கிகளை விட விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி இன்னும் தெளிவான காட்சிகளை காட்டும். இந்த திட்டம் வெற்றி யடைந்தால், 2015ம் ஆண்டிற்குள் இது போல் 100  முறை வானத்தில் பறந்து ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Wednesday, 2 March 2016

நீல் ஆம்ஸ்ட்ராங் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், அப்பல்லோ-11 விண்கலம் மூலம் கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி (நியூயார்க் நேரப்படி) இரவு 10.50 மணிக்கு சந்திரனில் இறங்கினார். இதன் மூலம் சந்திரனில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அப்போது இவரது சாதனையை உலகம் முழுவதிலும் இருந்து 5 கோடியே 28 லட்சம் மக்கள் கண்டுகளித்து பரவசம் அடைந்தனர்.


சிறு வயதில் இவருக்கு விமானம் என்றால் கொள்ளை பிரியம். எனவே, அது குறித்த படிப்பை படித்தார். பின்னர் அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார். இவருடன் விமானி எட்வின்புஷ் அல்டிரின், மற்றொரு விண்வெளி வீரர் மைக்கேல் கொலினல் ஆகியோரும் சந்திரனுக்கு சென்று இருந்தனர். நீல் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய 20 நிமிடங்கள் கழித்து ஆல்டிரின் சந்திரனில் இறங்கினார். மைக்கேல் கொலினஸ் அப்பல்லோ-11 விண்கலத்தில் இருந்து அதை இயக்கி கொண்டிருந்தார். சந்திரனில் இறங்கிய நீல்ஆம்ஸ்ட்ராங்குடன் அல் டிரினும் சேர்ந்து சோதனை யில் ஈடுபட்டார். அங்குள்ள பாறைகளை இருவரும் சேகரித்தனர். அமெரிக்க தேசிய கொடியையும் சந்திரனில் பறக்க விட்டு சாதனை படைத்தனர். சந்திரனில் காலடி எடுத்து வைத்து நீல் ஆம்ஸ்ட்ராங் சாதனை செய்த விவகாரம் 20-ம் நூற்றாண்டின் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

சந்திரனில் இருந்து பூமி திரும்பிய நீல்ஆம்ஸ்ட்ராங் நாசாவின் விண்வெளி மையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காற்று மண்டலம் அல்லாத சந்திரனில் தான் எடுத்து வைத்த முதல் காலடி, குழந்தை தவழ்வது போன்று மகிழ்ச்சியாக இருந்தது என வர்ணித்தார். நீல்ஆம்ஸ்ட்ராங் “நாசா” விண்வெளி மையத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார். சின்சினாட்டி பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராக இருந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் பல தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்

Wednesday, 24 February 2016

உயரும் கடல்நீர் மட்டத்தால் உலகம் அழிய போகிறதா?

முன் எப்போதும் இல்லாத அளவுக்கு கடல்நீர் மட்டம் 14 செ.மீ வரை உயர்ந்திருப்பதாக சமீபத்திய ஆய்வு முடிவு எச்சரித்துள்ளது. அமெரிக்காவில் உள்ள புவி மற்றும் கோள் அறிவியல் துறை சார்பில் கடந்த இரண்டரை ஆண்டுகளாக புவி வெப்பம் குறித்தும், கடல்நீர் மட்டம் குறித்தும் ஆய்வு நடத்தப்பட்டது.


ஆய்வு தொடர்பில் அவர் கருத்து வெளியிடுகையில், கடந்த 35 ஆயிரம் ஆண்டுகளின் கடல் நீர் மட்டங்கள் ஆய்வுக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. கடந்த 6,000 ஆண்டுகளாக கடல் நீர் மட்டத்தில் பெரிய அளவில் எந்த மாற்றமும் இல்லை, ஸ்திரமாகவே இருந்தது. ஆனால் 150 ஆண்டுகளுக்கு முன், கடல் நீர் மட்டத்தில் மாற்றம் ஏற்படத் துவங்கியது.

இத்தகைய மாற்றத்தை 150 ஆண்டுக்கு முந்தைய பதிவுகளில் காண முடியவில்லை. கடல் அலைகளின் உயரமும், முந்தைய ஆண்டுகளை விட அதிகரித்து உள்ளது. கடல் மட்டம் உயர்வதற்கும், வெப்பநிலை உயர்வதற்கும் தொடர்பு உள்ளதாக அவர் மேலும் தெரிவித்தார்.

மேலும் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

விண்வெளியில் ஒலித்த அபூர்வ இசை !


பூமிக்கும் சந்திரனுக்கும் இடையிலான விண்வெளிப் பயணத்தின்போது இனம்புரியாத, மனதை மயக்கும் புதுவித இசையை சில விண்வெளி வீரர்கள் கேட்க நேர்ந்ததாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

1969ம் ஆண்டு பூமியில் இருந்து சந்திரனுக்கு அப்போலோ- 10 விண்கலத்தின் மூலம் பயணித்த அமெரிக்க விண்வெளி ஆய்வாளர்களான ஜான் யங், தாமஸ் ஸ்டாப்போர்ட் மற்றும் யூகேன் கெர்னன் ஆகியோர் அந்த அபூர்வ இசையை கேட்டு, அதுதொடர்பாக பேசிக் கொண்ட தகவல்களை நாசா பதிவுசெய்து வைத்துள்ளது.

இரு தொலைத்தொடர்பு இயந்திரங்களுக்கு இடையில் ஏற்படும் ஒலிகாந்த ஈர்ப்புகூட இதைப்போன்ற இசைவடிவில் கேட்பதற்கு வாய்ப்புள்ளதாக கூறப்பட்டாலும், சனி கிரகத்தில் உள்ளதைப்போல் சந்திரனில் புவிஈர்ப்பு மற்றும் மின்காந்த அலைகளின் தாக்கம் ஏற்பட வாய்ப்பில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


1969-ம் ஆண்டு சந்திரனில் முதன்முதலில் காலடி பதித்த அமெரிக்க விண்வெளி வீரரான நீல் ஆர்ம்ஸ்டிராங், மசூதிகளில் தொழுகைக்காக அழைக்கப்படும் பாங்கொலியைப் போன்ற சப்தத்தை தனது விண்வெளிப் பயணத்தின்போது சந்திரனில் கேட்க நேர்ந்ததாக பல ஆண்டுகளுக்கு பின்னர் தெரிவித்திருந்தார்.

அப்போது, அது என்ன சப்தம்? என்பதை அறியாமல் இருந்த ஆர்ம்ஸ்டிராங், பூமிக்கு திரும்பிய பின்னர் எகிப்துக்கு சென்றிருந்தபோது அதே சப்தத்தை அங்கு கேட்க நேரிட்டது. அது என்ன சப்தம்? என்று தனது அருகில் இருந்த நண்பரை ஆர்ம்ஸ்டிராங் கேட்டதாகவும், தொழுகைக்காக அழைப்பு விடுக்கும் பாங்கொலியின் சப்தம் என அந்த நண்பர் தெரிவித்ததாகவும், இதையடுத்து, ஆர்ம்ஸ்டிராங் இஸ்லாமிய மதத்தை தழுவியதாகவும் முன்னர் செய்திகள் வெளியாகின என்பது நினைவிருக்கலாம்.

மேலும் இது போன்ற பல சுவாரசியமான தகவல்களை தமிழில் கேட்பதற்கு முகில் ஆன்லைன் ரேடியோவை கேளுங்கள்

Want to Share This News With Friends?

Quick Search