Pages

Friday 4 March 2016

நாசாவின் புதிய கண்டுபிடிப்பு

நட்சத்திரங்களை ஆய்வு செய்ய 17 டன் எடையுள்ள தொலைநோக்கியுடன் ஜெட் விமானத்தில் பறக்கும் ஆய்வு மையத்தை நாசா ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் நாசா. இது, நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்காக 17 டன் எடையுள்ள தொலைநோக்கியுடன் கூடிய போயிங் ஜெட் விமானத்தை பறக்கும் விண்வெளி ஆய்வு மையமாக மாற்றியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இணையதளத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஒரு போயிங் 747 ரக ஜெட் விமானத்தை பறக்கும் விண்வெளி ஆய்வு மையமாக மாற்றியுள்ளது.


இதில் 17 டன் எடை மற்றும் 8 அடி நீளமுள்ள தொலைநோக்கியையும் நிறுவியுள்ளது. நட்சத்திரங்களை இந்த தொலைநோக்கி வழியாக பார்ப்பதற்கு ஏற்ற வகையில் 16க்கு 23 அடி உள்ள தானாக திறக்கும் கதவும் அமைக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கியை தரையில் இருந்து பயன்படுத்தும் போது, காற்று மண்டலத்தில் காணப்படும் தூசி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நட்சத்திரங்களை தெளிவாக காணமுடியாது. காற்று மண்டலத்திற்கு மேலே பறக்கும் திறனுடைய இந்த விமானம் தொடர்ந்து 12 மணிநேரம் 6,625 கடல் மைல் தொலைவுக்கு தொடர்ந்து பறக்கும் திறனுடையதாகும்.


தரையில் அமைக்கப்பட்டிருக்கும் தொலைநோக்கிகளை விட விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி இன்னும் தெளிவான காட்சிகளை காட்டும். இந்த திட்டம் வெற்றி யடைந்தால், 2015ம் ஆண்டிற்குள் இது போல் 100  முறை வானத்தில் பறந்து ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Want to Share This News With Friends?

Quick Search