Pages

Thursday, 10 March 2016

அதிக செலவில் அமைக்கப்பட்ட ரயில் நிலையம்

உலகின் அதிகச் செலவில் அமைக்கப்பட்ட ரயில் நிலையம் அமெரிக்காவில் திறக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டிருக்கும் உலக வர்த்தக நிலையப் போக்குவரத்து மையம், 2001-ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 தாக்குதல் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரத்துக்கு அருகில் உள்ளது.


நாள்தோறும் 200 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அந்த நிலையத்தைப் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலையத்தை அமைப்பதற்கு 2 பில்லியன் டாலர் செலவாகும் என ஆரம்பத்தில் முன்னுரைக்கப்பட்டது. இறுதியில் அது 3.85 பில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. திட்டமிட்டதைத் காட்டிலும், ஏழாண்டுக்குப் பிறகு அந்த நிலையம் தயாராகியுள்ளது.

உயிருள்ள எலியை சாப்பிடும் மனிதன்

ஆஸ்திரேலியாவில் உள்ள பாரிஸ்பேன் நகரை சேர்ந்தவர் மாத்யூ மலோனி (24). இவர் உயிருள்ள எலியின் தலையை கடித்து கொன்று தின்கிறார். அக்காட்சியை வீடியோ ஆக எடுத்து ‘பேஸ்புக்’ சமூக வலைதளத்தில் ஒளிபரப்பி வருகிறார். அந்த வீடியோவில் அவர் தனது அறைக்குள் நுழைகிறார். உயிருடன் தயாராக இருக்கும் எலியை பிடித்து ‘ஒட்கா’ மதுவால் கழுவுகிறார். பின்னர் அதன் தலையை ‘நறுக்’ என கடித்து மென்று சாப்பிடுகிறார்.


இதற்கு ‘மேட் மாத்’ என பெயரிட்டுள்ளார். அந்த வீடியோவை 2 லட்சத்து 30 ஆயிரம் பேருக்கு மேல் பார்த்துள்ளனர். இவரது இந்த நடவடிக்கைக்கு ஆதரவாகவும், எதிர்ப்பாகவும் கருத்து தெரிவித்துள்ளனர். இதற்கிடையே மிருக நலஆர்வலர்கள் இவர் மீது போலீசில் புகார் செய்தனர். அதை தொடர்ந்து அவர் மீது மிருகவதை சட்டத்தின் கீழ் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டது. அதை தொடர்ந்து மாத்யூ மலோனி கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டார். இந்த வழக்கு ஏப்ரல் 6–ந் தேதிக்கு தள்ளி வைக்கப்பட்டது.

Sunday, 6 March 2016

கூகுளின் புதிய கண்டுபிடிப்பு

புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகிறது கூகுள் நிறுவனம். அதன் தொடர்ச்சியாக மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கிடில் என்ற இணைய தளம் தான் அது. மிகவும் வண்ணமயமாக வேற்றுகிரகத்தின் பகுதியை போல், குழந்தைகள் ரசிக்குபடி அதன் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி அறிய விரும்பும் தளங்களைப் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பெற முடியும்.


மேலும், இணையதளத்தில் தேடுகையில், சிறுவர்கள் பார்க்கக் கூடாத தளங்கள் மறைக்கப்படும். குழந்தைகளும், சிறுவர்களும் பார்க்கக் கூடிய, தேடப்படும் பொருள் சார்ந்த தளங்கள் மட்டுமே காட்டப்படும். பொருத்தமில்லாத வார்த்தைகளை டைப் செய்தால், ‘நீங்கள் தேடுவது மோசமான வார்த்தைகள் போன்று தெரிகிறது. மீண்டும் முயற்சிக்கவும்’ என்ற செய்தி திரையில் தோன்றி எச்சரிக்கும். இந்த கிடில் தேடு எந்திரத்தை பயன்படுத்த தனியாக பதிவு செய்ய வேண்டியதில்லை. தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் சேகரிக்கப்படமாட்டாது. சர்வரில் உள்ள பதிவுகள் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை அழிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது கிடில்.

84 வயதில் மாடல் அழகியை திருமணம் செய்த ரூபர்ட் முர்டோக்

லண்டன்:சர்வதேச ஊடக தொழிலின் ஜாம்பவான் என புகழப்படும், ரூபர்ட் முர்டோக், மாடல் அழகி ஜெர்ரி ஹாலை, திருமணம் செய்து கொண்டார். 'டிவி' சேனல்கள், செய்தி தாள்கள் என, பல நாடுகளில் ஏராளமான ஊடகங்களை நடத்தி வருபவர், ரூபர்ட் முர்டோக், 84. ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த இவர், அமெரிக்க குடியுரிமை பெற்றவர். ஏற்கனவே, மூன்று முறை திருமணம் செய்து விவாகரத்து பெற்றவர். முர்டோக்கின் முதல் மனைவி பாட்ரிகா புக்கர், இரண்டாவது மனைவி அன்னா போர்ல், மூன்றாவது மனைவி வெண்டி டெங். மூன்று மனைவியர் மூலம் அவருக்கு, ஆறு குழந்தைகளும் உள்ளனர்.


இந்நிலையில், ஹாலிவுட் நடிகையும், முன்னாள் மாடல் அழகியுமான ஜெர்ரி ஹாலுடன், அவருக்கு காதல் ஏற்பட்டது. அமெரிக்காவைச் சேர்ந்த நடிகை ஜெர்ரி ஹாலும் ஏற்கனவே திருமணமாகி விவாகரத்து பெற்றவர். கடந்த ஆண்டு காதலிக்க துவங்கிய இந்த ஜோடி, திருமணம் செய்ய உள்ளதை, கடந்த மாதம் அறிவித்தனர். லண்டனில் அவர்களது திருமணம் நடைபெற்றது. எளிய திருமண நிகழ்ச்சியில், முர்டோகின், நான்கு மகள்களும், ஜெர்ரி ஹாலின், இரண்டு மகள்களும் பங்கேற்றனர்.

Saturday, 5 March 2016

அதிக அபராதம் கட்டிய ஸ்டீவ் ஜாப்ஸ்

ஆப்பிள் நிறுவனர் ஸ்டீவ் ஜாப்ஸ் ஆப்பிள் தயாரிப்புகளை உருவாக்கும் போது அதன் தரத்தில் எவ்வித சமரசமும் செய்துக்கொண்டது இல்லை. தான் விரும்பியதை சாதிக்க எந்த எல்லைக்கும் போக தயாராக இருந்தார். அவரின் இந்த பிடிவாத குணம் தனிப்பட்ட வாழ்க்கையிலும் பிரதிபலித்தது. தனது காரை பொது இடத்தில் பார்க் செய்யும் போது போக்குவரத்து விதிகளை பின்பற்றக் கூடாது என்பதில் ஸ்டீவ் ஜாப்ஸ் பிடிவாதமாக உள்ளார் என்று கிண்டல் செய்யும் அளவிற்கு, தனது காரை கண்ட இடங்களில் நிறுத்துவது அல்லது மாற்று திறனாளிகளுக்கான இடங்களில் காரை நிறுத்துவது என்று அட்டகாசம் செய்துள்ளார் ஸ்டீவ் ஜாப்ஸ்.


இந்நிலையில் சான் பிரான்சிஸ்கோ நகராட்சி வெளியிட்டு இருக்கும் அறிவிப்பு அனைவர் முகத்திலும் புன்னகையை வரவழைத்துள்ளது. சான் பிரான்சிஸ்கோ நகராட்சி நிர்வாகம், அதிகமாக வாகன நிறுத்த அபராதம் செலுத்தியவர்களிடம் அந்த தொகையை திருப்பி அளிக்க முடிவு செய்து ஒரு பட்டியலை வெளியிட்டுள்ளது.


இந்த பட்டியலில் மறைந்த ஸ்டீவ் ஜாப்ஸ் பெயர் இடம்பெற்றுள்ளது.  ஸ்டீவ் ஜாப்ஸ் 176 டாலர் கூடுதலாக அபராதம் கட்டியுள்ளார். இந்த தொகையை ஸ்டீவ் குடும்பத்திடம் ஒப்படைக்க முடிவு செய்யப்பட்டுள்ளது. போக்குவரத்து விதிகளை பின்பற்றாத ஸ்டீவ் ஜாப்ஸ், விதிக்கப்பட்டதை விட அதிக அபராதம் கட்டியுள்ளது பலருக்கு ஆச்சிரியம் அளித்துள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

மோசமான விமான சேவை நிறுவனங்களின் பட்டியல்

உலகிலேயே மிக மோசமான, தரமற்ற சேவைகளை வழங்கும் விமான நிறுவனமாக வட கொரியா அரசாங்கத்திற்கு சொந்தமான ஏர் கொர்யோ விமான நிறுவனம் தொடர்ந்து 4-வது முறையாக பயணிகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் என்ற விமான போக்குவரத்து ஆலோசனை நிறுவனம் உலகளவில் உள்ள 600 விமான நிறுவனங்களின் தரம் மற்றும் பயணிகள் சேவை குறித்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.


இந்த 600 விமான நிறுவனங்களில் வட கொரியா அரசாங்கத்திற்கு சொந்தமான ஏர் கொர்யோ(Air Koryo) விமான நிறுவனம் தான் தொடர்ந்து 4-வது முறையாக மிக மோசமான நிறுவனங்களில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. வட கொரியா என்றாலே முதலில் நினைவிற்கு வருவது 1995ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான உணவு பஞ்சமும், தற்போது அந்த நாட்டின் கொடுங்கோல் ஆட்சியாளரான கிம் யாங்-அன் தான். வறுமையில் இருந்து இன்றளவும் மீளாத உள்ள நிலையில், அடிப்படை வசதிகளை பெருக்காமல் தன்னுடைய ஆடம்பர வசதிகளில் அதிபர் கவனம் செலுத்தி வருவதும் இந்த பின்னடைவிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

தற்போது வரை ஏர் கொர்யோ நிறுவனத்தின் விமானங்கள் 6 நாடுகளில் உள்ள 14 விமான தளங்களுக்கு தனது சேவையை தொடர்ந்து வருகிறது. ஆனால், இந்த நிறுவனத்தில் பெரும்பாலான விமானங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. பல விமானங்கள் இன்னும் நவீனமயமாக்கப்படவில்லை. அதனால், விமானத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளின் திறன் மிக மிக குறைவு. இரண்டாவதாக, இந்த விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் மிகவும் மோசமானதாக உள்ளதாக பல பயணிகள் புகார்கள் தெரிவித்துள்ளதுடன் அதற்கான ஆதார புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.


சில பயணிகள் கூறுகையில், ஆசிய விமானங்கள் பலவற்றில் பயணம் செய்திருந்தாலும், வட கொரியாவின் விமானத்தில் வழங்கப்படும் உணவை போன்று ஒரு மோசமான சுவையில் வேறெங்கும் உணவு அருந்தியது இல்லை என கூறியுள்ளனர். மூன்றாவதாக, வட கொரியா விமானத்தில் பயணிகளுக்கு உதவும் பணிப்பெண்களின் சேவையும் முகம் சுழிக்கும் விதத்திலேயே உள்ளது என சில பயணிகள் வாக்களித்துள்ளனர். மேலும், விமானத்தில் அமர்ந்தவுடன் வட கொரிய தலைவர்களை பற்றி புகழ் பாடும் வீடியோக்கள் தான் விமானத்தில் காட்டப்படுவதால், அது பயணிகளை மிகவும் எரிச்சல் அடைய வைக்கிறது என கூறியுள்ளனர்.

Friday, 4 March 2016

நாசாவின் புதிய கண்டுபிடிப்பு

நட்சத்திரங்களை ஆய்வு செய்ய 17 டன் எடையுள்ள தொலைநோக்கியுடன் ஜெட் விமானத்தில் பறக்கும் ஆய்வு மையத்தை நாசா ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையம் நாசா. இது, நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்காக 17 டன் எடையுள்ள தொலைநோக்கியுடன் கூடிய போயிங் ஜெட் விமானத்தை பறக்கும் விண்வெளி ஆய்வு மையமாக மாற்றியுள்ளது. இதுகுறித்து அமெரிக்காவில் உள்ள இணையதளத்தில் வெளியான செய்தியில் கூறப்பட்டுள்ளதாவது:நட்சத்திரங்களை ஆய்வு செய்வதற்காக அமெரிக்காவின் விண்வெளி ஆய்வு மையமான நாசா, ஒரு போயிங் 747 ரக ஜெட் விமானத்தை பறக்கும் விண்வெளி ஆய்வு மையமாக மாற்றியுள்ளது.


இதில் 17 டன் எடை மற்றும் 8 அடி நீளமுள்ள தொலைநோக்கியையும் நிறுவியுள்ளது. நட்சத்திரங்களை இந்த தொலைநோக்கி வழியாக பார்ப்பதற்கு ஏற்ற வகையில் 16க்கு 23 அடி உள்ள தானாக திறக்கும் கதவும் அமைக்கப்பட்டுள்ளது. தொலைநோக்கியை தரையில் இருந்து பயன்படுத்தும் போது, காற்று மண்டலத்தில் காணப்படும் தூசி உள்ளிட்ட பல்வேறு காரணங்களால் நட்சத்திரங்களை தெளிவாக காணமுடியாது. காற்று மண்டலத்திற்கு மேலே பறக்கும் திறனுடைய இந்த விமானம் தொடர்ந்து 12 மணிநேரம் 6,625 கடல் மைல் தொலைவுக்கு தொடர்ந்து பறக்கும் திறனுடையதாகும்.


தரையில் அமைக்கப்பட்டிருக்கும் தொலைநோக்கிகளை விட விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த தொலைநோக்கி இன்னும் தெளிவான காட்சிகளை காட்டும். இந்த திட்டம் வெற்றி யடைந்தால், 2015ம் ஆண்டிற்குள் இது போல் 100  முறை வானத்தில் பறந்து ஆய்வு செய்ய நாசா திட்டமிட்டுள்ளது. இவ்வாறு அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

உலக வர்த்தக மையத்தில் பேய் நடமாட்டம்

கடந்த 2001ம் ஆண்டு செப்டம்பர் மாதம் அமெரிக்காவின் உலக வர்த்தக மையம் தீவிரவாதிகளால் தாக்கப்பட்டது. இதன் இடிபாடுகளில் சிக்கி பலர் உயிரிழந்தனர். இந்த நிலையில் அந்த கட்டிடம் தகர்க்கப்பட்ட இடங்களிலிருந்து ஆவிகள் வெளியேறியதாக போலீஸ் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார். அது தொடர்பான வீடியோ பதிவு  ஒன்று வெளியாகி புதிய சர்ச்சையை கிளப்பியுள்ளது.


குவிந்து கிடக்கும் இடிபாடுகளுக்கு இடையே வெள்ளை நிறத்தில் ஒரு உருவம் பறந்து செல்வதும், மீட்பு பணியில் ஈடுபட்டவர்களின் முகமும் இதில் பதிவாகியுள்ளது. அந்த  வீடியோவில் தெரிந்த ஆவி மர்மமாக இருந்து வருகிறது.

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும் 

Thursday, 3 March 2016

பிரதமரை விட அதிகம் சம்பாதிக்கும் பிச்சைகாரர்

பிரிட்டிஷ் பிரதமருக்கு சமமாக சம்பாதித்து வரி கட்டாமல் தலைமறைவாக வாழும் பிச்சைக்காரர் ஒருவரைப் பற்றிய செய்தி தற்போது பிரபலமாக பேசப்பட்டு வருகிறது. இவ்வாறு வரி கட்டாமல் வாழும் மக்களின் வருமானத்தை கணக்கிட்டால் 12 மாதங்களில் 1 லட்சத்து 30 ஆயிரம் பவுண்ட்ஸ் அதாவது 20 கோடியே 47 லட்சத்து 13 ஆயிரத்து 446 ரூபாய் வருமானம் ஈட்டுகிறார்கள்.


இந்த பிச்சைகாரர் ஒருநாளில் 500 பவுண்ட்ஸ் அதாவது 78 ஆயிரத்து 735 ரூபாய். ஒருவாரத்தில் அவர் சம்பாதிக்கக் கூடியது 2 ஆயிரத்து 500 பவுண்ட்ஸ் அதாவது 3 லட்சத்து 93 ஆயிரத்து 683 ரூபாய். இங்கிலாந்தில் ஹாம்டன் நகரில் வசிக்கும் பிச்சைக்காரர் ஒருவரின் வருமானத்தை கவுன்சிலர் மூலம் தெரிந்திருக்கிறார்கள். அந்த பிச்சைக்காரர் பிச்சை எடுக்கும்போது தனக்கு வீடு, வாசல், மனைவி, சொந்தம் என யாரும் இல்லை என்று எழுதிய அட்டையை தனக்கு முன்பாக வைத்திருப்பார். ஆனால் பல லட்சம் மதிப்புள்ள வீட்டில் இரகசியமாக வாழ்ந்திருக்கிறார். வசதி படைத்த இவர் இளகிய மனம் படைத்தவர்களையே குறி வைத்து பிச்சையெடுத்து வந்துள்ளார். இதுபோன்ற பெருந்தன்மையான மக்களை  வைத்து அதிக அளவில் வருமானம் ஈட்டியுள்ளார்.


இவரைப் போன்றவர்களை நீதிமன்றத்தில் வைத்து கட்டுப்பாடான தண்டனை அளிக்கப்பட வேண்டும் என்னும் குற்றச்சாட்டுகளும் எழுந்துள்ளன. ஒரு பிச்சைக்காரர் நாட்டின் சராசரி குடிமகனைவிட ஆண்டு வருமானம் அதிகம் இருக்கும் என்றால் கண்டிப்பாக பிச்சையெடுக்கும் தொழிலை ஒழிக்க முடியாது. மேலும் பிச்சை எடுப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து நாட்டிற்கு பொருளாதார இழப்பை ஏற்படுத்தும் என்பது அனைவரது கருத்தாகும்.

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Wednesday, 2 March 2016

நீல் ஆம்ஸ்ட்ராங் குறித்த சுவாரஸ்ய தகவல்கள்

அமெரிக்க விண்வெளி வீரர் நீல் ஆம்ஸ்ட்ராங், அப்பல்லோ-11 விண்கலம் மூலம் கடந்த 1969-ம் ஆண்டு ஜூலை 20-ந்தேதி (நியூயார்க் நேரப்படி) இரவு 10.50 மணிக்கு சந்திரனில் இறங்கினார். இதன் மூலம் சந்திரனில் முதன் முதலாக காலடி எடுத்து வைத்த முதல் வீரர் என்ற பெருமையை அவர் பெற்றார். அப்போது இவரது சாதனையை உலகம் முழுவதிலும் இருந்து 5 கோடியே 28 லட்சம் மக்கள் கண்டுகளித்து பரவசம் அடைந்தனர்.


சிறு வயதில் இவருக்கு விமானம் என்றால் கொள்ளை பிரியம். எனவே, அது குறித்த படிப்பை படித்தார். பின்னர் அமெரிக்காவின் “நாசா” விண்வெளி மையத்தில் பணியில் சேர்ந்தார். இவருடன் விமானி எட்வின்புஷ் அல்டிரின், மற்றொரு விண்வெளி வீரர் மைக்கேல் கொலினல் ஆகியோரும் சந்திரனுக்கு சென்று இருந்தனர். நீல் ஆம்ஸ்ட்ராங் இறங்கிய 20 நிமிடங்கள் கழித்து ஆல்டிரின் சந்திரனில் இறங்கினார். மைக்கேல் கொலினஸ் அப்பல்லோ-11 விண்கலத்தில் இருந்து அதை இயக்கி கொண்டிருந்தார். சந்திரனில் இறங்கிய நீல்ஆம்ஸ்ட்ராங்குடன் அல் டிரினும் சேர்ந்து சோதனை யில் ஈடுபட்டார். அங்குள்ள பாறைகளை இருவரும் சேகரித்தனர். அமெரிக்க தேசிய கொடியையும் சந்திரனில் பறக்க விட்டு சாதனை படைத்தனர். சந்திரனில் காலடி எடுத்து வைத்து நீல் ஆம்ஸ்ட்ராங் சாதனை செய்த விவகாரம் 20-ம் நூற்றாண்டின் மிகப் பெரும் சாதனையாக கருதப்படுகிறது.

சந்திரனில் இருந்து பூமி திரும்பிய நீல்ஆம்ஸ்ட்ராங் நாசாவின் விண்வெளி மையத்தில் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது காற்று மண்டலம் அல்லாத சந்திரனில் தான் எடுத்து வைத்த முதல் காலடி, குழந்தை தவழ்வது போன்று மகிழ்ச்சியாக இருந்தது என வர்ணித்தார். நீல்ஆம்ஸ்ட்ராங் “நாசா” விண்வெளி மையத்தில் அதிகாரியாக பணி புரிந்து வந்தார். சின்சினாட்டி பல்கலைக் கழகத்திலும் பேராசிரியராக இருந்தார். அவரது மறைவுக்கு அமெரிக்க அதிபர் ஒபாமா இரங்கல் செய்தி வெளியிட்டுள்ளார்.

மேலும் பல தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்

சாதனைக்கு வயது ஒரு தடை அல்ல

சர்வதேச அளவில் சினிமாவுக்கான மிக உயரிய கவுரவமாகக் கருதப்படும் ஆஸ்கர் விருதுகளில் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதினை முதல் முறையாக வென்றுள்ளார் லியனார்டோ டிகாப்ரியோ. இதற்கு முன் 5 முறை அவர் ஆஸ்கர் விருதுக்காக பரிந்துரைக்கப்பட்டிருந்தாலும், விருது வென்றிருப்பது இதுதான் முதல் முறை. ஆனால் விருதினைப் பெற்றுக் கொண்டதும் மற்றவர்களைப் போல மேடையில் உணர்ச்சிவசப்பட்டு அழவோ, நன்றி மேலீட்டால் மிகையாகப் பேசவோ முயலவில்லை. அந்த ஏற்புரையைப் பார்த்து உலகமே லியானர்டோ டிகாப்ரியோவை புதிய மரியாதையுடன் பார்க்க ஆரம்பித்துள்ளது.


அவர் பேசியதாவது : "நன்றி... அகாடமிக்கு நன்றி. உங்கள் அனைவருக்கும் நன்றி. என்னுடன் இந்த விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டவர்களுக்கும் எனது வாழ்த்துகள். நம்பமுடியாத நடிப்புத் திறனை அவர்கள் காட்டியிருந்தார்கள். அற்புதமான நடிகர்கள், தொழில்நுட்பக் கலைஞர்களின் அயராத முயற்சிக்கு கிடைத்த பலனே 'தி ரெவனன்ட்'. முதலில் எனது சகோதரனைப் போன்ற டாம் ஹார்டியை (படத்தின் பிரதான வில்லன்) குறிப்பிட விரும்புகிறேன். டாம்... திரையில் உனது அசாத்தியமான ஆளுமையை மிஞ்சுவது, திரைக்கு அப்பால் நீ இனரிட்டுவிடம் பாராட்டும் நட்பே. இந்த இரண்டு வருடங்களில் நீ சினிமா வரலாற்றில் உனக்கென ஒரு இடத்தை பிடித்து விட்டாய். நீ அபாரமான திறமைசாலி. அற்புதமான சினிமா அனுபவத்தைத் தந்த உனக்கும், படத்தின் ஒளிப்பதிவாளர் லுபெஸ்கிக்கும் நன்றி. ஃபாக்ஸ் நிறுவனத்துக்கும், ரீஜென்சி நிறுவனத்துக்கும் நன்றி. எனது மொத்த அணிக்கும் நன்றி. இந்தத் துறையில் எனது ஆரம்ப கால வளர்ச்சிக்கு உறுதுணையாய் இருந்த கேடன் ஜோன்ஸுக்கு நன்றி, சினிமா என்ற கலையைப் பற்றி எனக்கு நிறையக் கற்றுத் தந்த ஸ்கார்சிஸிக்கு நன்றி, இந்தத் துறையில் நான் நிலைத்திருக்க உதவிய ரிக் யோர்னுக்கு நன்றி, எனது பெற்றோருக்கு நன்றி, அவர்கள் இல்லையெனில் எதுவுமே சாத்தியப்பட்டிருக்காது. எனது நண்பர்கள் அனைவருக்கும் நன்றி.


இறுதியாக ஒன்றை சொல்ல விரும்புகிறேன். இந்த இயற்கை உலகுடனான மனிதர்களின் உறவே ரெவனன்ட் திரைப்படம். அதிக வெப்பமயமான ஆண்டாக 2015-ல் பதிவான இந்த உலகத்தில், (ரெவனன்ட்) படப்பிடிப்புக்காக, பனியைத் தேடி, உலகின் தெற்கு மூலைக்குச் சென்றோம். காலநிலை மாற்றம் என்பது நிஜம். அது இப்போது நடந்து கொண்டிக்கிறது. மனித இனமே தற்போது எதிர்கொண்டிருக்கும் உடனடி அச்சுறுத்தல் அது. எந்த நடவடிக்கையையும் தள்ளிப் போடாமல் நாம் அனைவரும் ஒன்றாக சேர்ந்து அதற்காக உழைக்க வேண்டிய நேரம் இது. உலகில் பெரும் மாசுபாட்டை ஏற்படுத்துபவர்களுக்காகவும், கார்ப்பரேட்களுக்காகவும் பேசும் தலைவர்களை ஆதரிக்காமல் மனித இனத்துக்காக, உலகின் பூர்வகுடிகளுக்காக, காலநிலை மாற்றத்தால் நேரடியாக பாதிக்கப்படும் கோடிக்கணக்கான பின்தங்கிய மக்களுக்காக, நமது குழந்தைகளின் குழந்தைகளுக்காக, அரசியலாலும் பேராசையாலும் நசுக்கப்படும் குரல்களுக்காக பேசும் தலைவர்களை நாம் ஆதரிக்க வேண்டும். இந்த அற்புதமான விருதுக்கு உங்கள் அனைவருக்கும் நன்றி. நாம் நமக்குக் கிடைத்த இந்த உலகை என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என அலட்சியமாக எடுத்துக்கொள்ள வேண்டாம்; நான் விருது பெற்ற இன்றைய இரவை அலட்சியமாக எடுத்துக் கொள்ளவில்லை."

மேலும் பல தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்

Tuesday, 1 March 2016

சமூக வலைதளத்தில் தவறான கருத்தை வெளியிட்ட டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப், இந்த நாட்டின் அதிபராக நான் பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டப்புறம்பாக குடியேறியுள்ளவர்களை அடித்து விரட்டுவேன் என பேசி வருகிறார். அமெரிக்கர்களின் வேலையை இந்தியர்கள் பறித்து சென்றுவிடுவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். பல இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் மக்களின் எதிர்ப்பை சந்தித்துவரும் டிரம்ப், யாரோ கூறிய ஒரு வாசகத்தை தனது பிரசாரத்துக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் தற்போது அதை காந்தியின் பொன்மொழி என்று குறிப்பிட்டுள்ளார்.


‘முதலில் உன்னை புறக்கணிப்பார்கள், பிறகு உன்னைப் பார்த்து சிரிப்பார்கள், பின்னர் உன்னோடு சண்டையிடுவார்கள், கடைசியாக நீதான் ஜெயிப்பாய்’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இதை காந்தியின் பொன்மொழி என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அறியாமையை டிரம்பின் ஆதரவாளர்கள் தற்போது பிரசார ஆயுதமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இத்தாலிய சர்வாதிகாரி ஹிட்லரின் தளபதியான முசோலியின் பொன்மொழிகளை பேசிப்பேசி அலுத்துப் போனதால் யாரோ சொன்னதை எல்லாம் மகாத்மா காந்தி சொன்னதாக டொனால்ட் டிரம்ப் உளறி வருகிறார் என அவர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

மேலும் பல தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்

புதிய சர்ச்சையில் சிக்கிய டொனால்ட் டிரம்ப்

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களில் குடியரசு கட்சியை சேர்ந்த டொனால்ட் டிரம்ப்  எதையாவது கூறி அடிக்கடி சர்ச்சையை கிளப்பி வருபவர். இப்பொழுது மட்டுமின்றி, கடந்த காலங்களில் கூட சர்ச்சைக்குரிய கருத்துக்களை வெளியிட்டு புயலை கிளப்பியுள்ளார். உதாரணத்திற்கு, 1990ம் ஆண்டுகளில் புகழ்பெற்ற ரேடியோ நிகழ்ச்சிகளில் டொனால்ட் டிரம்ப் பங்கு பெற்று உள்ளார். இந்த நிகழ்ச்சியின் சிறப்பு என்னவென்றால், புகழ்பெற்ற பெண்களின் அழகை வர்ணிப்பது தான்.


கடந்த 2000ம் ஆண்டு இதுபோன்ற ஒரு நிகழ்ச்சியில் டிரம்ப் பங்கேற்றுள்ளார். அப்போது பேசும்போது, ‘இங்கிலாந்து  இளவரசியான டயானா அழகில் சிறந்தவர். உயரமாகவும், மென்மையான தேகத்தை உடைய டயானாவை அனைவரும் ரசிப்பார்கள். எனக்கு உண்மையில் வாய்ப்பு கிடைத்திருந்தால், அவருடன் உறவுக்கொள்ளவும் தயங்கி இருக்க மாட்டேன். ஆனால், துரதிஷ்டவசமாக அவர் விபத்தில் சிக்கி இறந்துவிட்டார்’ என பேசியுள்ளார்.


டொனால்டு டிரம்ப் மட்டுமில்லாமல், இங்கிலாந்து செய்தி நிறுவனம் ஒன்று ‘இளவரசர் சார்லஸை விவாகரத்து பெற்ற பின்னர்கூட, டயானாவை நெருங்க டொனால்டு டிரம்ப் முயற்சி செய்ததாக தகவல் வெளியிட்டு பரபரப்பை கூட்டியது. இளவரசி டயானா மட்டுமின்றி பிரபல ஹாலிவுட் நடிகை ஏஞ்சலினா ஜூலி உள்ளிட்ட நடிகைகள் மீதும் தனக்கு ஒரு ஈர்ப்பு இருப்பதாக வெளிப்படையாக பேட்டியளித்து பரபரப்பை ஏற்படுத்தினார் குறிப்பிடத்தக்கது. ஆனால் அப்போது அது பெரிதாக எடுத்து கொள்ளப்படவில்லை. தற்போது, அதிபர் தேர்தலில் அவர் போட்டியிடும்போது பழைய சங்கதிகள் அனைத்தும் ஒவ்வொன்றாக வெளிச்சத்துக்கு வருகிறது.

மேலும் பல தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்

12 ஆண்டுகள் பாதுகாத்த கருமுட்டை

பொருளாதாரம் மற்றும் உடலலகின் காரணமாக மகப்பேற்றை தள்ளிப்போடும் நிலை வாடிக்கையாகிவிட்டது. எனினும் பெண்களுக்கு 30 வயதுக்குள் மட்டுமே அவர்களுக்குள் வீரியமான கருமுட்டைகள் உருவாகும் என மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இந்த வயதுக்குள் மகப்பேற்றை விரும்பாத பெண்களின் கருமுட்டையை எடுத்து , பதப்படுத்தி பாதுகாக்கும் முறை மேற்கத்திய நாடுகளில் பரவி வருகின்றன. கருப்பைக்கு செல்லும் பாதைகளில் அடைப்பு அல்லது பிற உபாதைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் கருமுட்டைகளை அகற்றி ஆணின் விந்தணுவுடன் இணைத்து செயற்கை முறையில் கருத்தரிக்கும் முறையும் தற்போது பிரபலமடைந்து வருகிறது.

அவ்வகையில் சீனாவின் ஷாங்காய் மாகாணத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சுமார் 1 லட்சம் கருமுட்டைகள்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 25000 கருமுட்டைகளில் விந்தணுக்களை சேர்த்து 41000 கருத்தரிப்புகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக குழந்தைகளும் பிறந்துள்ளன. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு, லீ என்ற பெண்ணுக்கு செயற்கை கருத்தரிப்பை உருவாக்க 12 கருமுட்டைகளை சேகரித்த டாக்டர்கள் அதனை லீயின் கணவரது விந்தணுவுடன் இணைத்து 12 கருக்களை உருவாக்கினர்.


அவற்றை லீயின் கருப்பைக்குள் செலுத்தியதால் அவர் 2 அழகான ஆண் குழந்தைகளை பிரசவித்தார். சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்று கொள்ளக்கூ டாது என்ற சட்டம் இருந்ததால், அந்த சட்டம் விளக்கிக்கொள்ளும்போது  அடுத்த  குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என அவர்கள் தீர்மானித்தனர். இதுவரை நாள் ஒன்றுக்கு 30000 கட்டணம் செலுத்தி மீதமுள்ள கருமுட்டைகளை பாதுகாத்து வந்தனர். இப்போது சீனாவில் சட்டம் விளக்கிக்கொள்ளப்பட்டதால் சேகரித்த கருமுட்டைகளின் மூலம் மீண்டுமொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள லீ தம்பதியினர் தீர்மானித்தனர்.


இதனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, சேகரித்து வைக்கப்பட்ட கருமுட்டைகளின் மூலம் மற்றொரு ஆண்  குழந்தையை லீ  ஈன்றெடுத்தார். கடந்த வாரம் பிறந்த இக்குழந்தை 3 கிலோ 400 கிராம் எடையில் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் மிக நீண்ட நாட்கள் சேகரிக்கப்பட்ட கருமுட்டையில் குழந்தையை பிரசவித்த பெண் என்ற பெருமையை 43 வயதான லீ பெற்றுள்ளார்.

மேலும் பல தகவல்களுக்கு இங்கி கிளிக் செய்யவும்

கேத் மிடில்டன் போன்று தோற்றம் கொண்ட பெண்

இளவரசி கேட் மிடில்டன் போன்ற தோற்றத்தில் காட்சியளிக்கும் பெண் வாழ்ந்து வருகிறார். தற்போது 35 வயதாகும் அப்பெண்மணிக்கு 16 மற்றும் 6 வயதுகளில் 2 குழந்தைகள் உள்ளன. இது குறித்து அப்பெண் கூறி யதாவது : பிரிட்டானிய இளவரசர் வில்லியம்ஸ் - கேத் மிடில்டன் திருமணம் நிச்சயம் செய்யப்பட்ட போது நான் ஒரு ஹோட்டலில் உணவு பரிமாறும் பெண்ணாக வேலை பார்த்து வந்தேன். இளவரசி கேத் மிடில்டன் புகைப்படங்களை பார்த்த மக்கள் பலர் "நீங்கள் பார்ப்பதற்கு இளவரசி போன்று இருக்கிறீர்கள்" என கூறினர். இதை பயன்படுத்தி நன்கு சம்பாதிக்க திட்டமிட்டேன்.


இளவரசி கலந்து கொண்ட வீடியோக்களைப் பார்த்து இளவரசி போல் நடப்பது, சிரிப்பது, உடை உடுத்துவது போன்ற பாவனைகளைக் கற்றுக்கொண்டேன். இதனால் ஒரு பிரபல விமான நிலையம் என்னை விளம்பர மாடலாக நியமித்தனர். இதனால் பழைய வேலையை ராஜினாமா செய்துவிட்டு இளவரசி போல் பல்வேறு நாடுகளுக்கு பயணித்தேன். 2014ம் ஆண்டு ஆஸ்திரேலியாவில் இளவரசர் வில்லியம்ஸ் போன்று தோற்றம் அளிக்கும் மற்றொருவரை சந்தித்தது மறக்க முடியாதது. நிகழ்ச்சியில் கலந்துகொண்ட பலரும் எங்களை உண்மையான இளவரசர் - இளவரசியாக நினைத்தது சுவாரஸ்ய சம்பவம். இதுமட்டுமில்லாமல்  இளவரசி இரண்டாம் எலிசபெத் போன்று தோற்றமளிக்கும் மூதாட்டியுடன் பல நிகழ்ச்சிகளில் கலந்து கொள்கிறேன். இதனால் ஒரு கிழமைக்கு  9 ஆயிரம் பவுண்டு வரை கிடைப்பதால் வாழ்க்கை மகிழ்ச்சியாக செல்கிறது என அப்பெண்மணி கூறியுள்ளார்.

மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்  

Want to Share This News With Friends?

Quick Search