Pages

Thursday, 10 March 2016

அதிக செலவில் அமைக்கப்பட்ட ரயில் நிலையம்

உலகின் அதிகச் செலவில் அமைக்கப்பட்ட ரயில் நிலையம் அமெரிக்காவில் திறக்கப்பட்டுள்ளது. நியூயார்க் நகரில் அமைக்கப்பட்டிருக்கும் உலக வர்த்தக நிலையப் போக்குவரத்து மையம், 2001-ஆம் ஆண்டு செப்டெம்பர் 11 தாக்குதல் நடத்தப்பட்ட இரட்டைக் கோபுரத்துக்கு அருகில் உள்ளது.


நாள்தோறும் 200 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பயணிகள் அந்த நிலையத்தைப் பயன்படுத்துவர் என எதிர்பார்க்கப்படுகிறது. அந்த நிலையத்தை அமைப்பதற்கு 2 பில்லியன் டாலர் செலவாகும் என ஆரம்பத்தில் முன்னுரைக்கப்பட்டது. இறுதியில் அது 3.85 பில்லியன் டாலர் செலவில் கட்டி முடிக்கப்பட்டது. திட்டமிட்டதைத் காட்டிலும், ஏழாண்டுக்குப் பிறகு அந்த நிலையம் தயாராகியுள்ளது.

Tuesday, 23 February 2016

5G மொபைல் நெட்வொர்க்

செல்போனில் சினிமா படங்களும் வீடியோ காட்சிகளும் அதிகளவில் டவுன்லோட் செய்யப்படுகின்றன. 4G தொழில்நுட்பத்தில் படங்கள் டவுன்லோட் மற்றும் அப்லோட் செய்ய 8 நிமிடங்கள் ஆகும். ஆனால் ஒரு படத்தை 5 வினாடியில் டவுன்லோட் செய்ய முடியும். இதற்கான தொழில்நுட்பத்தை இங்கிலாந்தில் உள்ள SURREY பல்கலைகழக நிபுணர்கள் கண்டுபிடித்துள்ளனர்.


அதிவேக தொழில்நுட்பத்தில் மொபைல் இன்டர்நெட்டை உருவாக்கியுள்ளனர். இது தற்பொழுது உள்ள இன்டர்நெட்டின் வேகத்தை விட 100 மடங்கு அதிகமானது. இதனை 5G என்று அழைக்கிறார்கள். இதனுடனான wireless தொழில்நுட்பம் 2018ஆம் ஆண்டு தான் முற்றிலும் முடிவடையும். இதன்மூலம் நிறுவனங்கள் இந்த தொழில்நுட்பம் மூலமாக பல்வேறு வசதிகளை பெற முடியும் என நிபுணர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

Want to Share This News With Friends?

Quick Search