Pages

Tuesday 1 March 2016

சமூக வலைதளத்தில் தவறான கருத்தை வெளியிட்ட டொனால்டு டிரம்ப்

அமெரிக்க அதிபர் வேட்பாளராக போட்டியிட ஆதரவு திரட்டிவரும் குடியரசு கட்சி வேட்பாளரான டொனால்டு டிரம்ப், இந்த நாட்டின் அதிபராக நான் பதவி ஏற்றால் வெளிநாட்டில் இருந்துவந்து அமெரிக்காவில் சட்டப்புறம்பாக குடியேறியுள்ளவர்களை அடித்து விரட்டுவேன் என பேசி வருகிறார். அமெரிக்கர்களின் வேலையை இந்தியர்கள் பறித்து சென்றுவிடுவதாகவும் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். பல இடங்களில் நடைபெற்ற பிரசார கூட்டங்களில் மக்களின் எதிர்ப்பை சந்தித்துவரும் டிரம்ப், யாரோ கூறிய ஒரு வாசகத்தை தனது பிரசாரத்துக்கு பயன்படுத்தும் நோக்கத்தில் தற்போது அதை காந்தியின் பொன்மொழி என்று குறிப்பிட்டுள்ளார்.


‘முதலில் உன்னை புறக்கணிப்பார்கள், பிறகு உன்னைப் பார்த்து சிரிப்பார்கள், பின்னர் உன்னோடு சண்டையிடுவார்கள், கடைசியாக நீதான் ஜெயிப்பாய்’ என்று தனது சமூக வலைதள பக்கத்தில் இன்று பதிவிட்டுள்ள டொனால்ட் டிரம்ப், இதை காந்தியின் பொன்மொழி என்றும் குறிப்பிட்டுள்ளார். அவரது இந்த அறியாமையை டிரம்பின் ஆதரவாளர்கள் தற்போது பிரசார ஆயுதமாக பயன்படுத்த தொடங்கியுள்ளனர். இத்தாலிய சர்வாதிகாரி ஹிட்லரின் தளபதியான முசோலியின் பொன்மொழிகளை பேசிப்பேசி அலுத்துப் போனதால் யாரோ சொன்னதை எல்லாம் மகாத்மா காந்தி சொன்னதாக டொனால்ட் டிரம்ப் உளறி வருகிறார் என அவர்கள் கிண்டலடித்து வருகின்றனர்.

மேலும் பல தகவல்களுக்கு தொடர்ந்து இணைந்திருங்கள்

No comments:

Post a Comment

Want to Share This News With Friends?

Quick Search