Pages

Sunday 6 March 2016

கூகுளின் புதிய கண்டுபிடிப்பு

புதுமையான வசதிகளைத் தன் வாடிக்கையாளர்களுக்குத் தந்து வருகிறது கூகுள் நிறுவனம். அதன் தொடர்ச்சியாக மிகவும் எதிர்ப்பார்க்கப்பட்ட குழந்தைகளுக்கான கிடில் எனப்படும் புதிய இணையதள சேவையை கூகுள் நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. கிடில் என்ற இணைய தளம் தான் அது. மிகவும் வண்ணமயமாக வேற்றுகிரகத்தின் பகுதியை போல், குழந்தைகள் ரசிக்குபடி அதன் முகப்பு பகுதி வடிவமைக்கப்பட்டுள்ளது. குழந்தைகள் மற்றும் சிறுவர்களை இலக்காகக் கொண்டு இந்த சேவை வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூகுள் அறிவித்துள்ளது. இதன் மூலம், சிறுவர்கள், தாங்கள் தேடி அறிய விரும்பும் தளங்களைப் பாதுகாப்பாகவும், எளிதாகவும் பெற முடியும்.


மேலும், இணையதளத்தில் தேடுகையில், சிறுவர்கள் பார்க்கக் கூடாத தளங்கள் மறைக்கப்படும். குழந்தைகளும், சிறுவர்களும் பார்க்கக் கூடிய, தேடப்படும் பொருள் சார்ந்த தளங்கள் மட்டுமே காட்டப்படும். பொருத்தமில்லாத வார்த்தைகளை டைப் செய்தால், ‘நீங்கள் தேடுவது மோசமான வார்த்தைகள் போன்று தெரிகிறது. மீண்டும் முயற்சிக்கவும்’ என்ற செய்தி திரையில் தோன்றி எச்சரிக்கும். இந்த கிடில் தேடு எந்திரத்தை பயன்படுத்த தனியாக பதிவு செய்ய வேண்டியதில்லை. தனிப்பட்ட முறையில் அடையாளம் காணக்கூடிய தகவல்கள் சேகரிக்கப்படமாட்டாது. சர்வரில் உள்ள பதிவுகள் 24 மணி நேரத்திற்கு ஒருமுறை அழிக்கப்படும் என்றும் அறிவித்துள்ளது கிடில்.

No comments:

Post a Comment

Want to Share This News With Friends?

Quick Search