கிழக்கு சீனாவில் உள்ள ஜியாங்ஸி மாகாணத்தில் 2000 ஆண்டு பழமையான பச்சை மாணிக்கக் கல் ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இந்தக் கல்லை மார்க்குயிஸ் ஹைஹன் என்ற பேரரசர் அணிந்திருந்ததாக கூறப்படுகிறது. இவர் தன்னுடைய வாழ்நாளில் 29 நாட்கள் மட்டுமே பேரரசராக பதவி வகித்துள்ளார். சீனாவில் நடைபெற்ற தொல்பொருள் கண்காட்சியில் மக்களிடையே அதிக வரவேற்பை இது பெற்றுள்ளது.
Monday, 7 March 2016
Friday, 4 March 2016
மிதக்கும் கப்பல் துறை
சீனா தனது கடற்படையை நவீனப்படுத்தும் முயற்சியாக மிதக்கும் கப்பல்துறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் கடற்கரையில் இருந்து அதிக தொலைவில் கடலுக்குள் இருக்கும் சேதமடைந்த போர்க்கப்பல்களை சீர் செய்திட முடியும் என அந்நாட்டின் மக்கள் விடுதலை ராணுவ செய்தி நிறுவனம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.
வெளிப்புற உதவியின்றி சுயசார்புடன் இயங்கும் திறன் கொண்ட இந்த கப்பல்துறை குறித்த தகவலில், ஹுவாசுவான் நகரின் நம்பர் ஒன்னான இந்த கப்பல்துறையானது, பழுதடைந்த கப்பல்களை மிக குறைந்த காலத்தில் விரைவில் சீர் செய்து போர்த்திறனுடன் கப்பற்படைக்கு திருப்பி அனுப்பும் பணியை திறம்பட செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், போர் நடைபெறும் இடங்களுக்கு செல்லும் வகையில் இந்த துறைமுகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மிதக்கும் துறைமுகத்தின் உள்ளே போர் கப்பல் ஒன்று இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள செய்தி நிறுவனம், எங்களது கப்பற்படையின் சேதமடைந்த மிகப்பெரிய கப்பல்களை கடற்கரையில் இருந்து கடலுக்குள் அதிக தொலைவில் கொண்டு செல்லும் திருப்புமுனையான பணியை மேற்கொள்ளும் அடையாளமாக இந்த கப்பல் தொடக்க திட்டம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.
இந்த கப்பலின் பயன் என்னவெனில், சிறிய அளவில் சேதமுற்ற கப்பல்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டியதுமில்லை. அதேவேளையில், அதிக சேதமடைந்த கப்பல்களை ஷிப்யார்டிற்கு (கப்பல் கட்டும் தளம்) திருப்பி அனுப்ப வேண்டியதுமில்லை என தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் துறையானது போர் கப்பல்கள், எதிரி கப்பல்களை தாக்கி அழிக்கும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை கையாளும் திறன் படைத்தது. அதனுடன் 2 மீட்டர் உயரம் கொண்ட கடல் அலைகளை எதிர்கொள்ளும் திறனும் கொண்டது. ஆனால் விமானந்தாங்கி கப்பல்களை இது சரி செய்வதில்லை.

Tuesday, 1 March 2016
12 ஆண்டுகள் பாதுகாத்த கருமுட்டை
பொருளாதாரம் மற்றும் உடலலகின் காரணமாக மகப்பேற்றை தள்ளிப்போடும் நிலை வாடிக்கையாகிவிட்டது. எனினும் பெண்களுக்கு 30 வயதுக்குள் மட்டுமே அவர்களுக்குள் வீரியமான கருமுட்டைகள் உருவாகும் என மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இந்த வயதுக்குள் மகப்பேற்றை விரும்பாத பெண்களின் கருமுட்டையை எடுத்து , பதப்படுத்தி பாதுகாக்கும் முறை மேற்கத்திய நாடுகளில் பரவி வருகின்றன. கருப்பைக்கு செல்லும் பாதைகளில் அடைப்பு அல்லது பிற உபாதைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் கருமுட்டைகளை அகற்றி ஆணின் விந்தணுவுடன் இணைத்து செயற்கை முறையில் கருத்தரிக்கும் முறையும் தற்போது பிரபலமடைந்து வருகிறது.
அவ்வகையில் சீனாவின் ஷாங்காய் மாகாணத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சுமார் 1 லட்சம் கருமுட்டைகள் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 25000 கருமுட்டைகளில் விந்தணுக்களை சேர்த்து 41000 கருத்தரிப்புகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக குழந்தைகளும் பிறந்துள்ளன. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு, லீ என்ற பெண்ணுக்கு செயற்கை கருத்தரிப்பை உருவாக்க 12 கருமுட்டைகளை சேகரித்த டாக்டர்கள் அதனை லீயின் கணவரது விந்தணுவுடன் இணைத்து 12 கருக்களை உருவாக்கினர்.
அவற்றை லீயின் கருப்பைக்குள் செலுத்தியதால் அவர் 2 அழகான ஆண் குழந்தைகளை பிரசவித்தார். சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்று கொள்ளக்கூ டாது என்ற சட்டம் இருந்ததால், அந்த சட்டம் விளக்கிக்கொள்ளும்போது அடுத்த குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என அவர்கள் தீர்மானித்தனர். இதுவரை நாள் ஒன்றுக்கு 30000 கட்டணம் செலுத்தி மீதமுள்ள கருமுட்டைகளை பாதுகாத்து வந்தனர். இப்போது சீனாவில் சட்டம் விளக்கிக்கொள்ளப்பட்டதால் சேகரித்த கருமுட்டைகளின் மூலம் மீண்டுமொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள லீ தம்பதியினர் தீர்மானித்தனர்.
இதனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, சேகரித்து வைக்கப்பட்ட கருமுட்டைகளின் மூலம் மற்றொரு ஆண் குழந்தையை லீ ஈன்றெடுத்தார். கடந்த வாரம் பிறந்த இக்குழந்தை 3 கிலோ 400 கிராம் எடையில் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் மிக நீண்ட நாட்கள் சேகரிக்கப்பட்ட கருமுட்டையில் குழந்தையை பிரசவித்த பெண் என்ற பெருமையை 43 வயதான லீ பெற்றுள்ளார்.
மேலும் பல தகவல்களுக்கு இங்கி கிளிக் செய்யவும்

Subscribe to:
Posts (Atom)