Pages

Tuesday 1 March 2016

12 ஆண்டுகள் பாதுகாத்த கருமுட்டை

பொருளாதாரம் மற்றும் உடலலகின் காரணமாக மகப்பேற்றை தள்ளிப்போடும் நிலை வாடிக்கையாகிவிட்டது. எனினும் பெண்களுக்கு 30 வயதுக்குள் மட்டுமே அவர்களுக்குள் வீரியமான கருமுட்டைகள் உருவாகும் என மருத்துவ ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. ஆனால் இந்த வயதுக்குள் மகப்பேற்றை விரும்பாத பெண்களின் கருமுட்டையை எடுத்து , பதப்படுத்தி பாதுகாக்கும் முறை மேற்கத்திய நாடுகளில் பரவி வருகின்றன. கருப்பைக்கு செல்லும் பாதைகளில் அடைப்பு அல்லது பிற உபாதைகளால் பாதிக்கப்பட்ட பெண்களின் கருமுட்டைகளை அகற்றி ஆணின் விந்தணுவுடன் இணைத்து செயற்கை முறையில் கருத்தரிக்கும் முறையும் தற்போது பிரபலமடைந்து வருகிறது.

அவ்வகையில் சீனாவின் ஷாங்காய் மாகாணத்திலுள்ள ஒரு மருத்துவமனையில் சுமார் 1 லட்சம் கருமுட்டைகள்  பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. அவற்றில் 25000 கருமுட்டைகளில் விந்தணுக்களை சேர்த்து 41000 கருத்தரிப்புகள் உருவாக்கப்பட்டு வெற்றிகரமாக குழந்தைகளும் பிறந்துள்ளன. இந்த நிலையில் 12 ஆண்டுகளுக்கு முன்பு, லீ என்ற பெண்ணுக்கு செயற்கை கருத்தரிப்பை உருவாக்க 12 கருமுட்டைகளை சேகரித்த டாக்டர்கள் அதனை லீயின் கணவரது விந்தணுவுடன் இணைத்து 12 கருக்களை உருவாக்கினர்.


அவற்றை லீயின் கருப்பைக்குள் செலுத்தியதால் அவர் 2 அழகான ஆண் குழந்தைகளை பிரசவித்தார். சீனாவில் ஒரு குழந்தைக்கு மேல் பெற்று கொள்ளக்கூ டாது என்ற சட்டம் இருந்ததால், அந்த சட்டம் விளக்கிக்கொள்ளும்போது  அடுத்த  குழந்தை பெற்றுக்கொள்ளலாம் என அவர்கள் தீர்மானித்தனர். இதுவரை நாள் ஒன்றுக்கு 30000 கட்டணம் செலுத்தி மீதமுள்ள கருமுட்டைகளை பாதுகாத்து வந்தனர். இப்போது சீனாவில் சட்டம் விளக்கிக்கொள்ளப்பட்டதால் சேகரித்த கருமுட்டைகளின் மூலம் மீண்டுமொரு குழந்தையைப் பெற்றுக்கொள்ள லீ தம்பதியினர் தீர்மானித்தனர்.


இதனால் 12 ஆண்டுகளுக்குப் பிறகு, சேகரித்து வைக்கப்பட்ட கருமுட்டைகளின் மூலம் மற்றொரு ஆண்  குழந்தையை லீ  ஈன்றெடுத்தார். கடந்த வாரம் பிறந்த இக்குழந்தை 3 கிலோ 400 கிராம் எடையில் நல்ல ஆரோக்கியமாக இருப்பதாக மருத்துவர்கள் தெரிவித்துள்ளனர். சீனாவில் மிக நீண்ட நாட்கள் சேகரிக்கப்பட்ட கருமுட்டையில் குழந்தையை பிரசவித்த பெண் என்ற பெருமையை 43 வயதான லீ பெற்றுள்ளார்.

மேலும் பல தகவல்களுக்கு இங்கி கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Want to Share This News With Friends?

Quick Search