Pages

Friday 4 March 2016

மிதக்கும் கப்பல் துறை

சீனா தனது கடற்படையை நவீனப்படுத்தும் முயற்சியாக மிதக்கும் கப்பல்துறை ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. இதனால் கடற்கரையில் இருந்து அதிக தொலைவில் கடலுக்குள் இருக்கும் சேதமடைந்த போர்க்கப்பல்களை சீர் செய்திட முடியும் என அந்நாட்டின் மக்கள் விடுதலை ராணுவ செய்தி நிறுவனம் இன்று தகவல் தெரிவித்துள்ளது.
வெளிப்புற உதவியின்றி சுயசார்புடன் இயங்கும் திறன் கொண்ட இந்த கப்பல்துறை குறித்த தகவலில், ஹுவாசுவான் நகரின் நம்பர் ஒன்னான இந்த கப்பல்துறையானது, பழுதடைந்த கப்பல்களை மிக குறைந்த காலத்தில் விரைவில் சீர் செய்து போர்த்திறனுடன் கப்பற்படைக்கு திருப்பி அனுப்பும் பணியை திறம்பட செய்யும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


மேலும், போர் நடைபெறும் இடங்களுக்கு செல்லும் வகையில் இந்த துறைமுகம் வடிவமைக்கப்பட்டு உள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த மிதக்கும் துறைமுகத்தின் உள்ளே போர் கப்பல் ஒன்று இருப்பது போன்ற புகைப்படம் ஒன்றை வெளியிட்டுள்ள செய்தி நிறுவனம், எங்களது கப்பற்படையின் சேதமடைந்த மிகப்பெரிய கப்பல்களை கடற்கரையில் இருந்து கடலுக்குள் அதிக தொலைவில் கொண்டு செல்லும் திருப்புமுனையான பணியை மேற்கொள்ளும் அடையாளமாக இந்த கப்பல் தொடக்க திட்டம் உள்ளது என்றும் தெரிவித்துள்ளது.


இந்த கப்பலின் பயன் என்னவெனில், சிறிய அளவில் சேதமுற்ற கப்பல்களை பணியில் இருந்து விடுவிக்க வேண்டியதுமில்லை.  அதேவேளையில், அதிக சேதமடைந்த கப்பல்களை ஷிப்யார்டிற்கு (கப்பல் கட்டும் தளம்) திருப்பி அனுப்ப வேண்டியதுமில்லை என தகவலில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த கப்பல் துறையானது போர் கப்பல்கள், எதிரி கப்பல்களை தாக்கி அழிக்கும் கப்பல்கள் மற்றும் நீர்மூழ்கி கப்பல்கள் ஆகியவற்றை கையாளும் திறன் படைத்தது. அதனுடன் 2 மீட்டர் உயரம் கொண்ட கடல் அலைகளை எதிர்கொள்ளும் திறனும் கொண்டது. ஆனால் விமானந்தாங்கி கப்பல்களை இது சரி செய்வதில்லை.

No comments:

Post a Comment

Want to Share This News With Friends?

Quick Search