Pages

Saturday 5 March 2016

மோசமான விமான சேவை நிறுவனங்களின் பட்டியல்

உலகிலேயே மிக மோசமான, தரமற்ற சேவைகளை வழங்கும் விமான நிறுவனமாக வட கொரியா அரசாங்கத்திற்கு சொந்தமான ஏர் கொர்யோ விமான நிறுவனம் தொடர்ந்து 4-வது முறையாக பயணிகளால் தெரிவு செய்யப்பட்டுள்ளது. பிரித்தானியாவை சேர்ந்த ஸ்கைட்ராக்ஸ் என்ற விமான போக்குவரத்து ஆலோசனை நிறுவனம் உலகளவில் உள்ள 600 விமான நிறுவனங்களின் தரம் மற்றும் பயணிகள் சேவை குறித்து வாக்கெடுப்பு ஒன்றை நடத்தியுள்ளது.


இந்த 600 விமான நிறுவனங்களில் வட கொரியா அரசாங்கத்திற்கு சொந்தமான ஏர் கொர்யோ(Air Koryo) விமான நிறுவனம் தான் தொடர்ந்து 4-வது முறையாக மிக மோசமான நிறுவனங்களில் கடைசி இடத்தை பிடித்துள்ளது. வட கொரியா என்றாலே முதலில் நினைவிற்கு வருவது 1995ம் ஆண்டுகளில் ஏற்பட்ட கடுமையான உணவு பஞ்சமும், தற்போது அந்த நாட்டின் கொடுங்கோல் ஆட்சியாளரான கிம் யாங்-அன் தான். வறுமையில் இருந்து இன்றளவும் மீளாத உள்ள நிலையில், அடிப்படை வசதிகளை பெருக்காமல் தன்னுடைய ஆடம்பர வசதிகளில் அதிபர் கவனம் செலுத்தி வருவதும் இந்த பின்னடைவிற்கு காரணமாக பார்க்கப்படுகிறது.

தற்போது வரை ஏர் கொர்யோ நிறுவனத்தின் விமானங்கள் 6 நாடுகளில் உள்ள 14 விமான தளங்களுக்கு தனது சேவையை தொடர்ந்து வருகிறது. ஆனால், இந்த நிறுவனத்தில் பெரும்பாலான விமானங்கள் 50 ஆண்டுகளுக்கும் மேல் பழமையானது. பல விமானங்கள் இன்னும் நவீனமயமாக்கப்படவில்லை. அதனால், விமானத்தின் அமைப்பு மற்றும் செயல்பாடுகளின் திறன் மிக மிக குறைவு. இரண்டாவதாக, இந்த விமானத்தில் பயணிகளுக்கு வழங்கப்படும் உணவு வகைகள் மிகவும் மோசமானதாக உள்ளதாக பல பயணிகள் புகார்கள் தெரிவித்துள்ளதுடன் அதற்கான ஆதார புகைப்படங்களையும் வெளியிட்டுள்ளனர்.


சில பயணிகள் கூறுகையில், ஆசிய விமானங்கள் பலவற்றில் பயணம் செய்திருந்தாலும், வட கொரியாவின் விமானத்தில் வழங்கப்படும் உணவை போன்று ஒரு மோசமான சுவையில் வேறெங்கும் உணவு அருந்தியது இல்லை என கூறியுள்ளனர். மூன்றாவதாக, வட கொரியா விமானத்தில் பயணிகளுக்கு உதவும் பணிப்பெண்களின் சேவையும் முகம் சுழிக்கும் விதத்திலேயே உள்ளது என சில பயணிகள் வாக்களித்துள்ளனர். மேலும், விமானத்தில் அமர்ந்தவுடன் வட கொரிய தலைவர்களை பற்றி புகழ் பாடும் வீடியோக்கள் தான் விமானத்தில் காட்டப்படுவதால், அது பயணிகளை மிகவும் எரிச்சல் அடைய வைக்கிறது என கூறியுள்ளனர்.

No comments:

Post a Comment

Want to Share This News With Friends?

Quick Search