Pages

Wednesday 24 February 2016

ஜப்பானை சுற்றி பார்க்கலாம் வாங்க

உழைப்பினால் மனிதர்கள் உயருவர். நாடும் உயர முடியும் என்று காட்டிய உன்னத நகரம் டோக்கியோ. அது ஜப்பானின் தலைநகரம். ஹொன்ஷு,கொக்கைடோ, கியூஷு, ஷிக்கோக்கோ எனும் நான்கு பெருந்தீவு களின் சேர்க்கைதான் ஜப்பான். குட்டிநாடுதான் ஆனால், மின்னணுத் துறையில் உலகிற்கே வழிகாட்டிய நாடு அது இத்தனைக்கும் மன்னராட்சி உடைய நாடு.  அரச குடும்பத்தினரைக் கடவுள் என ஜப்பானியர் போற்றுகின்றனர். அதனால் அரண்மனையை அவர்கள் கடந்து செல்கையில் சாலையில் சென்றாலும் வணங்குவர். அரண்மனைக்கு நிஷுபாஷி என்னும் இரட்டைப் பாலம் வழியே செல்ல வேண்டும்.



பாரிஸ் நகரின் ஈஃபிள் கோபுரத்தை முன் மாதிரியாக வைத்து கட்டப்பட்ட டோக்கியோ கோபுரம் 333 மீட்டர் உயரத்தில் 4000 டன் எடையில் நகரின் மய்யத்தில் உள்ளது.  இரவு பதினொரு மணி வரை விளக்குகளால் ஜொலிக்கிறது. தொலைக்காட்சி, வானொலி ஆகியவற்றின் தொடர்பு சாதனமாகவும் பயன்படுகிறது. ஹசிகோ என்பது ஒரு நாயின் பெயர். இந்நாய் தினமும் காலை முதல் மாலை வரை டோக்கியோ இரயில் நிலையங்களில் ஒன்றான ஷிடியா ரயில் நிலையத்தில் காத்திருக்குமாம். அந்த உரிமையாளர் இறந்த பிறகும் பல வருடங்கள் காத்திருந்ததாம். எனவே அந்நாயைப் போற்றும் வகையில் ஹசிகோவின் சிலை உள்ளது.

No comments:

Post a Comment

Want to Share This News With Friends?

Quick Search