Pages

Wednesday, 30 March 2016

கிழக்கு வாசல் படத்தின் மாபெரும் வெற்றி

தயாரிப்பாளர் ஜி.தியாகராஜனின் சத்யஜோதி ஃபிலிம்ஸ் இசைஞானி இளையராஜாவை வைத்துப் பண்ணிய வெற்றிப்படங்களில் "கிழக்கு வாசல்" பெரு வெற்றி கண்ட படமாக அமைந்து சாதனை படைத்தது. கார்த்திக், ரேவதி ஆகியோரின் சினிமாப் பயணத்தில் தவிர்க்க முடியாத படமாக இது இன்றளவும் இருக்கின்றது. "தாங்கிடத்தத்த தரிகிட தத்த" என்று சந்தம் போட்டு நெஞ்சின் கதவுகளைத் தட்டி உள்ளே சென்று உட்காரும் "அட வீட்டுக்கு வீட்டுக்கு வாசப்படி வேணும்" பாடலாகட்டும் சித்ராவின் தேன் குரலில் "வந்ததேஏஏஏஏ குங்குமம்" என்ற மெல்லிசையாகட்டும் படத்தில் மீதமுள்ள பாடிப் பறந்த கிளி உள்ளிட்ட எல்லாப் பாடல்களையும் சேர்த்து கிழக்கு வாசல் படத்தின் பாடல்கள் தங்கக் கிரீடம் சூட்டவேண்டிய தராதரம்.


"வந்ததே குங்குமம்" பாடலை இன்னொரு ஸ்பெஷல் பதிவுக்காக மனதில் ஒதுக்கி வைத்திருக்கிறேன். அதிலும் குறிப்பாக "பச்சமலப்பூவு நீ உச்சி மலைத் தேரு" பாடலை பாடல் ஒலி நாடாவில் இரண்டு பக்கமும் ஒலிப்பதிவு செய்து நடிகர் திலகம் சிவாஜி கணேசன் கேட்டு ரசித்ததாக அன்றைய காலகட்டத்தில் அறிவிப்பாளர் அப்துல் ஹமீட் ஒரு மேடை நிகழ்ச்சியில் சொல்லியிருந்தது ஞாபகத்து வருகின்றது. கிழக்கு வாசல் பாடல்களில் எதை இங்கே கொடுப்பது என்று வரும் போது ஓரவஞ்சனையுடன் "பச்சமலைப் பூவு" தான் வந்து விழுகிறது. 

இளையராஜா - ஆர்.வி. உதய குமார் கூட்டணியின் வெற்றி படங்கள்

எண்பதுகளின் தமிழ் சினிமாவின் அறிமுக இயக்குனர்களின் பெருங்கனவாக இருந்தது இசைஞானி இளையராஜாவோடு சேர்ந்து படம் பண்ணவேண்டும் என்பது தான். தமிழ் சினிமாவின் முன்னணி ஏழு நட்சத்திரங்களில் இருவர் பிரபு, கார்த்திக் ஆகியோரை வைத்து ஆர்.வி.உதயகுமார் கொடுத்த படம் "உரிமை கீதம்" அந்தப் படத்துக்கு ஆபாவாணன் வழியில் இசையமைப்பாளர்கள் மனோஜ் கியானை இசைக்க வைத்தார். தொடர்ந்து "புதிய வானம்" படத்தில் சிவாஜி,சத்யராஜை இயக்கிய போதும் அவர் தேர்ந்தெடுத்தது இசையமைப்பாளர் ஹம்சலேகாவை. ஒரு படம் இடைவேளைக்குப் பின் மீண்டும் தன் வழக்கமான இரட்டை நாயகர்கள் செண்டிமெண்டில் வந்த படம் "உறுதிமொழி"


இதில் சிவகுமார், பிரபு முக்கிய நாயகர்கள். ஆர்.வி.உதயகுமாரோடு திரைப்படக் கல்லூரி மாணவராக இருந்து வெளியே வந்து ஒளிப்பதிவாளராக இயங்கிய ரவி யாதவ், இவரின் தயாரிப்பில் வந்த படமே உறுதிமொழி. இப்போது ரவி யாதவ் முழுமையாகத் தமிழ் சினிமாவில் இருந்து ஒதுங்கி மும்பை சென்று விட்டார். கிழக்கு வாசல் கொடுத்த பெருங்கவனிப்போடு ஒப்பிடுகையில் உறுதிமொழி திரைப்படம் பெரிதாக எடுபடவில்லை. ஆனால் இந்தப் படத்தில் வந்த "அதிகாலை நிலவே அலங்காரச் சிலையே புதுராகம் நான் பாடவா" பாடல் அந்த நாளில் சென்னை வானொலியில் திரைகானத்திலும், நேயர் விருப்பத்திலும் ஒலித்துத் தன் இருப்பைக் காட்டியது இன்னும் இந்த ஜெயச்சந்திரன், எஸ்.ஜானகி கொடுத்த இந்த ஜோடிப்பாட்டை நேசிப்பவர்கள் நெஞ்சாங்கூட்டில் வைத்திருப்பர். 

Thursday, 3 March 2016

அரசியல்வாதியாக நடிக்கும் திரிஷா

தனுஷ் இரண்டு வேடங்களில் நடித்து வரும் ‘கொடி’ படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் நாயகன் தனுஷ் அரசியல்வாதியாக நடித்து வருகிறார். இந்நிலையில் இந்த படத்தின் நாயகி த்ரிஷாவும் அரசியல்வாதியாக நடித்து வருவதாகவும், இந்த படத்தில் அவருடைய கேரக்டர் பெயர் ‘ருத்ரா’ என்றும் தற்போது தெரியவந்துள்ளது. இப்படத்தில் தனுஷுடன் போட்டி போட்டுக்கொண்டு திரிஷா நடித்திருக்கிறார்.


Wednesday, 2 March 2016

சந்தானம் படத்தில் புதுமையான பாடல் காட்சிகள்

வல்லவனுக்கு புல்லும் ஆயுதம், இனிமே இப்படித்தான் படங்களைத் தொடர்ந்து தில்லுக்கு துட்டு, சர்வர் சுந்தரம் ஆகிய படங்களில் நாயகனாக நடித்து வருகிறார் சந்தானம். தில்லுக்கு துட்டு படத்தில் நடிகை ஆஷனா சவேரியுடன் அவர் நடித்த பாடல் ஒன்று சென்னை மீனம்பாக்கம் தரமணியில் 40 லட்ச ரூபாய் செலவில் பிரம்மாண்டமாக செட் அமைத்து படமாக்கி உள்ளனர்.


இந்த பாசல் காட்சி முழுக்க  சந்தானம்-ஆஷனா சவேரி இருவரும் பறந்து கொண்டே பாடுவது போல படமாக்கப்பட்டுள்ளது. தான் நடித்த படத்தில் ஏதேனும் புதுமை இருக்க வேண்டும் என யோசித்ததன் காரணமாக இப்படியொரு பாடலை படமாக்கியுள்ளார் சந்தானம். அதோடு தனது உடற்கட்டை முன்னனி இளவட்ட நடிகர்களைப் போல மாற்றியதோடு அதிரடி நடனமும் ஆடியுள்ளார்.


மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Tuesday, 1 March 2016

சூர்யாவுக்கு பயப்படும் தெலுங்கு நடிகர்கள்

தொடர் வெற்றிகளால் தமிழ் சினிமாவின் வசூல் ஹீரோக்களில் ஒருவராக திகழும் சூர்யாவின் படங்கள் தமிழ் மட்டும் இன்றி, ஆந்திர மாநிலத்திலும், வசூல் ரீதியாக பெரும் வெற்றி பெற்று வருகிறது. இதனால் சூர்யா, நடிக்கும் அனைத்து படங்களும் தெலுங்கில் டப் செய்யப்பட்டு வெளியிடப்படுகிறது.

இந்த நிலையில், சூர்யா படங்கள் ஆந்திராவில் வெளியாகிறது, என்றால், அங்குள்ள முன்னணி ஹீரோக்கள் கூட தங்களது படங்களை வெளியிட பயந்து தள்ளிவைப்பார்கள், என்று கூறியுள்ள நடிகர் நாகர்ஜுனா, ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய இடங்களில் சூர்யா படங்களுக்கு தனி மார்கெட் இருக்கிறது, என்றும் தெரிவித்தார்.


இது குறித்து மேலும் பேசிய அவர், ”நான் சென்னையில் பிறந்தவன்.எனவே நானும் சென்னைக்காரன் தான். இந்தப் படத்தில் நடித்தது சிறப்பான அனுபவம். கார்த்தியும் நானும் மனதளவில் இந்தப் படத்துக்குப் பிறகு மிகவும் நெருங்கி விட்டோம். படத்தில் நான் முழுக்க சக்கர நாற்காலியிலேயே உட்கார்ந்து இருக்கும் கேரக்டர். என்னை உட்கார வைத்து விட்டு கார்த்தியும் தமன்னாவும் நிறைய டான்ஸ் ஆடி இருக்கிறார்கள். அப்போது எனக்கும்  எழுந்து ஆட வேண்டும் போல இருக்கும்.


இன்னொரு விஷயம் உங்களுக்கு தெரியுமா? சூர்யாவுக்கு ஆந்திராவில் ஏகப்பட்ட ரசிகர்கள் உண்டு. குறிப்பாக தெலுங்கானாவில் இருக்கும் ரசிகர் படை அவரது தமிழ்நாட்டு ரசிகர்களுக்கு கொஞ்சமும் சளைத்தது அல்ல. சூர்யாவின் படம் தெலுங்கில்  டப்பிங் ஆகி வருகிறது என்றால் தெலுங்கு ஹீரோக்கள் பயந்து போய் தங்கள் படத்தின் ரிலீசை தள்ளி வைப்பார்கள். அவ்வளவு பெரிய மாஸ் அவர். அவரது அடுத்த படம் 24- என்னுடைய வாழ்த்துகள்” என்றார்.

மேலும் பல தகவல்களுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Want to Share This News With Friends?

Quick Search