Pages

Monday, 29 February 2016

அப்துல் கலாம் விருது பெற்ற தமிழ் மாணவன்

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, பசுமை கார் கண்டுபிடித்த, அண்ணா பல்கலை மாணவருக்கு, அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா பல்கலையில் உள்ள, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லுாரியில், 'அப்ளைட் சயின்ஸ்' மற்றும் தொழில்நுட்ப பிரிவில், எம்.டெக்., முதலாம் ஆண்டு படிப்பவர், எஸ்.பாலு.


காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை சேர்ந்த இவர், சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள் இல்லத்தில், 15 ஆண்டுகளாக தங்கி படித்து வருகிறார். டில்லியில், ஸ்ரீதர்ஷின் கலைக்கூடம் சார்பில், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு ஞானச்சுடர் போட்டி நடந்தது. நாட்டின் பல மாநிலங்களை சேர்ந்த இன்ஜி., கல்லுாரிகள், பல்கலை மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளுடன் பங்கேற்றனர்.இதில், மாணவர் பாலு உருவாக்கிய பசுமை காருக்கு, தேசிய அளவில், 10ம் இடமும், தமிழக அளவில் முதலிடமும் கிடைத்தது.


இந்த கண்டுபிடிப்பை பாராட்டி, பாலுவுக்கு அப்துல் கலாம் நினைவு ஞானச்சுடர் விருது வழங்கப்பட்டு உள்ளது. விருது பெற்ற மாணவரை, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் மற்றும் பதிவாளர் கணேசனும் வாழ்த்தினர். பசுமை காரில் ஒருவர் மட்டும் அமர்ந்து ஓட்டலாம். இதை உள் அரங்க போட்டிகளுக்கு பயன்படுத்த முடியும். இதுகுறித்து, மாணவர் பாலு கூறியதாவது:
பெட்ரோலிய வாகனங்களை விட, 78 சதவீதம் மாசு குறைந்த இந்த காரை, ரயில், பேருந்து நிலையங்கள், உயிரியல் பூங்காக்கள், சிறுவர் பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்த முடியும். அதற்காக, குறைந்த செலவில், 20 பேர் அமரும் வகையிலான காரை, விரைவில் தயாரிக்க உள்ளோம் என்று அவர் கூறினார்.

மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

இரத்தம் குடிக்கும் காதல் ஜோடி

அமெரிக்காவைச் சேர்ந்த ஒரு காதல் ஜோடி, வாரத்திற்கு ஒருமுறை தங்களது இரத்தத்தை தங்கள் ஜோடிகளுடன் பரிமாறிக்கொள்வதை ஒரு வழக்கமாகக் கொண்டுள்ளனர். அமெரிகாவைச் சேர்ந்த அரோ டிராவின், சமூக வலைதளத்தின் மூலமாக லியா பெனின்காப்  என்ற பெண்ணை சந்தித்தார். இவர்களுடைய நட்பு காதலாக மாறி திருமணமும் செய்து கொண்டனர். வாரம் ஒருமுறை இருவரும் மாறி மாறி இரத்தம் குடித்து வருகின்றனர்.


இது குறித்து அரோ - லியா கூறுகையில், வாரத்திற்கு 4 தடவை இதுபோன்று இரத்தம் குடித்து வருகிறோம். உடல் பலவீனமானது போன்ற உணர்வு ஏற்ப்பட்டவுடன் ஒருவர் இரத்தத்தை மற்றவர் மாற்றி குடிப்பதாகக் கூறுகின்றனர்.

மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

போக்கிரி ராஜாவில் பப்ளி ஹன்சிகா

பி.டி.செல்வகுமார் தயாரிப்பில், ராம்பிரகாஷ் ராயப்பா இயக்கியுள்ள ‘போக்கிரிராஜா’படத்தில், ஜீவா–ஹன்சிகா ஜோடியாக நடித்து இருக்கிறார்கள்.  படத்தில், கவிஞர் விவேக் எழுதிய ‘‘பப்ளி...பப்ளி...’’ என்ற பாடல் இடம்பெறுகிறது.


இந்த பாடல் காட்சியை படமாக்கியதில் இருந்து ஹன்சிகாவை படப்பிடிப்பு குழுவினர் அனைவரும் ‘‘பப்ளி...பப்ளி...’’ என்று செல்லமாக அழைக்கிறார்களாம்!

மேலும் பல செய்திகளுக்கு இங்கே கிளிக் செய்யவும்

Saturday, 27 February 2016

மெகா ஃபிக்ஸில்ஸ் என்றால் என்ன ?

ஒரு பிக்சல் என்பது  கணினி மானிட்டர் அல்லது  (டிஜிட்டல் ஸ்க்ரீனில்) காட்சித்திரையில் தெரியும்  காட்சியில்  ஒரு சிறிய சதுர  புள்ளி ஆகும். இவ்வகை திரைகளை ஒரு உருப்பெருக்கி கண்ணாடி மூலம் நோக்கினால் அப்புள்ளிகளை நாம் எளிதாக காணலாம். ஸ்க்ரீனில் புள்ளிகள் அதிக நெருக்கமாக அமைக்கப்பட்டிருந்தால்  காட்சி அல்லது படம் மிக தெளிவாக தெரியும்.


இதை நாம் உபயோகிக்கும் செல் போன்களில் தெளிவாக பார்க்கலாம். அதாவது விலை குறைந்த செல்போன் ஸ்க்ரீனில் இந்த கட்டங்கள்  சாதாரண கண்களுக்கே தெளிவாக தெரியும். அதே வேளையில் மிக விலை உயர்ந்த போன்களின் டிஸ்ப்ளேக்களில் இந்த புள்ளிகள் சாதாரண் கண்களுக்கு புலப்படாது. ஆனால் ஒரு உருப்பெருக்கி கண்ணாடியை வைத்து பார்த்தீர்களானால் பிக்சல் எனப்படும் புள்ளிகளை காணலாம். அதாவது ஃபிக்ஸில் எனப்படும் அப்புள்ளிகள் அதிகரிக்க அதிகரிக்க காட்சி அல்லது படம் பளிச்சென்றும் அதிக கவர்ச்சியுடனும் தெரிய ஆரம்பிக்கிறது.

எனவே நாம் வாங்கும் டிஜிட்டல் கேமராக்களில் ஃபிக்ஸில்கள் அதிகமாக இருப்பின் படங்கள் தெளிவாக இருக்கும். ஒரு மில்லியன்  ஃபிக்ஸில்கள்  ஒரு மெகா ஃபிக்ஸில் என்று அழைக்கப்படுகிறது.  உதாரணத்திற்கு 3.1 மெகா ஃபிக்ஸில் கேமராவில்  2048 x 1536 புள்ளிகள் கொண்ட போட்டோவை எடுக்கலாம். அதன் மொத்த புள்ளிகள் 3,145,728 ஃபிக்ஸில் ஆகும். இந்த அளவே 3.1 மெகா ஃபிக்ஸில் என்று அழைக்கபடுகிறது.


தொழில் நுட்பம் வளர வளர அதிக மெகா ஃபிக்ஸில்கள் கொண்ட கேமரா உருவாக்கப்பட்டுக் கொண்டே வருகின்றன. தற்போதைய நிலவரப்படி சாதாரண பயன்பாட்டிற்க்காக  அதிகபட்சமாக 120 MP கேமரா மார்க்கட்டில் கிடைக்கிறது.  இதன் விலை சுமார் 37,000 அமெரிக்க டாலர்களாகும். ஆனால் ஆராய்ச்சிக்காக உருவாக்கப்பட்ட 570 மெகா ஃபிக்ஸில் கொண்ட   Fermilab’s digital camera தான் உலகின் மிக அதிக அளவு மெகா ஃபிக்ஸில் கேமராவாகும்.

மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

Friday, 26 February 2016

தல 57 ல் மீண்டும் கூட்டணி சேரும் அஜித் - சிறுத்தை சிவா

அஜித் தற்போது ஆபரேஷன் செய்துவிட்டு முழு நேர ஓய்வில் இருக்கிறார். தனது குடும்பத்தினருடன் வெளிநாடு சென்று விடுமுறையை கழித்து வரும் அஜித், அடுத்தாவதாக சிறுத்தை சிவா இயக்கத்தில் நடிக்க ஒப்பந்தம் ஆகியுள்ளார். ‘வீரம்’, ‘வேதாளம்’ ஆகிய படங்களுக்கு பிறகு சிறுத்தை சிவாவுடன் மீண்டும் அஜித் இணையவிருக்கிறார். இது அஜித் நடிக்கும் 57-வது படமாகும்.


இந்த படம் எப்போது தொடங்கும் என எதிர்பார்ப்பு நிலவி வந்த நிலையில், வருகிற மே மாதம் 1-ந் தேதி அஜித் பிறந்தநாளில் படத்தை தொடங்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. தொடர்ந்து 3 மாதங்களில் படத்தை முடித்துவிட்டு, அடுத்ததாக விஷ்ணுவர்தன் இயக்கும் சரித்திர பின்னணியில் உள்ள படத்தில் இணையவிருக்கிறார். இப்படம் ஆகஸ்ட் மாதம் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிலையில், அஜித்தின் 57-வது படத்தில் நடிக்கும் நடிகர், நடிகையர் மற்றும் தொழில்நுட்ப கலைஞர்கள் தேர்வு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. விரைவில் இப்படம் குறித்த அதிகாரப்பூர்வ தகவல்களை அறிவிப்பார்கள் என தெரிகிறது. இப்படத்தை சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது.

மேலும் தெரிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

செல்போன் கதிர்வீச்சினால் ஏற்படும் பாதிப்பு

ஆண்களிடையே மலட்டுத்தன்மையும் அதிகரித்துவருவது தொடர்பாக நடத்தப்பட்ட ஆய்வில் கைபேசிகளில் இருந்து வெளியாகும் கதிர்வீச்சு மற்றும் உஷ்ணசக்தியானது ஆண்களின் விந்தணுக்களை பாதித்து, அவற்றை செயலிழக்க செய்துவிடுவதாக கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. திருமணமாகி புதிய வாரிசை எதிர்நோக்கி காத்திருக்கும் இளைஞர்கள் தங்களது பேண்ட் பாக்கெட்களில் கைபேசிகளை வைக்காமல் இருப்பதும், பேட்டரி ரீசார்ஜ் செய்யும் வேளைகளில் செல்போன்களை அணைத்து வைத்திருப்பதும் பாதுகாப்பானது என இந்த ஆராய்ச்சி தொடர்பான ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


இதய நோய் வராமல் தடுக்க என்ன செய்யலாம்??

இதய நோய் உள்ளவர்கள் சில அறிகுறிகள் மூலம் அதை புரிந்து கொள்ள முடியும். மூச்சுத் திணறல், தோள்பட்டை வலியுடன் கூடிய மார்பு வலி, நடக்கும்போது, ஓடும்போது, உயரமான பகுதிகளில் ஏறும்போது மார்பு வலி ஏற்படுதல் போன்றவை மாரடைப்புக்கான அறிகுறிகள். ஒருவருக்கு தொடர்ந்து 20 நிமிடங்களுக்கு மேல் படபடப்புடன் மார்பு வலி ஏற்பட்டால், உடனே அருகில் உள்ள மருத்துவமனைக்குச் சென்று பரிசோதித்துக் கொள்வது அவசியம். இதயத்துக்கு செல்லும் ரத்தக் குழாயில் கொழுப்புச் சத்துக்கள் அதிகமாகி ரத்த ஓட்டத்தை தடுப்பதால்தான் மாரடைப்பு ஏற்படுகிறது. பொதுவாக இதய நோய் உள்ளிட்ட, எந்த நோயும் நம்மை தாக்காமல் இருக்க தினமும் அரைமணி நேரம் சீரான உடற்பயிற்சி செய்வது நல்லது.


இதய நோயை தவிர்க்க நினைப்பவர்கள் முதலில் புகை பிடிப்பதையும், மது அருந்துவதையும் நிறுத்த வேண்டும். இது தவிர இறைச்சி, எண்ணெய் பலகாரங்கள், கொழுப்புச் சத்து நிறைந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும். சமச்சீர் சத்துணவு, போதிய உடற்பயிற்சி, தினமும் நல்ல தூக்கம், ரத்த அழுத்தத்தை சீராக வைத்திருத்தல், வருடத்திற்கு ஒரு முறை உடல் பரிசோதனை செய்து, சர்க்கரை, கொழுப்பு, ரத்த அழுத்தம் கூடியிருந்தால், அதற்குரிய மருந்துகளை மருத்துவர் ஆலோசனையுடன் தவறாமல் உட்கொள்வது ஆகியவற்றை கவனத்தில் கொள்ளவேண்டும்.


அதேநேரம், எந்த சூழலிலும் மன அழுத்தத்துக்கு ஆளாகாமல் இருப்பது அவசியம். ஒரே நேரத்தில் பலவகையான சிந்தனைகளில் ஈடுபடுவதால் மன அழுத்தம் ஏற்படுகிறது. நாம் எப்போதும் நேர்மறையான எண்ணத்துடன் இருந்தால்தான் நமக்கு நேர்மறையான முடிவுகள் கிடைக்கும். அதேநேரம், சுத்த சைவ உணவு உண்பவர்கள், புகையிலை, மதுப் பழக்கம் இல்லாதவர்களுக்கும் இதய நோய் வரலாம். எனவே, மனதை லேசாக வைத்திருக்க வேண்டும். மன உளைச்சல் இதய நோய்க்கு வழிவகுத்துக் கொடுக்கும் என்கிறார்கள். அதே நேரத்தில் இதய வால்வு நோய்கள் வந்தால் அதற்கு அறுவை சிகிச்சைதான் ஒரே வழி.

Want to Share This News With Friends?

Quick Search