Pages

Monday 29 February 2016

அப்துல் கலாம் விருது பெற்ற தமிழ் மாணவன்

சுற்றுச்சூழலை மாசுபடுத்தாத, பசுமை கார் கண்டுபிடித்த, அண்ணா பல்கலை மாணவருக்கு, அப்துல் கலாம் பெயரில் விருது வழங்கப்பட்டு உள்ளது. சென்னை அண்ணா பல்கலையில் உள்ள, அழகப்பா செட்டியார் தொழில்நுட்பக் கல்லுாரியில், 'அப்ளைட் சயின்ஸ்' மற்றும் தொழில்நுட்ப பிரிவில், எம்.டெக்., முதலாம் ஆண்டு படிப்பவர், எஸ்.பாலு.


காஞ்சிபுரம் மாவட்டம், உத்திரமேரூரை சேர்ந்த இவர், சென்னையில் உள்ள ராமகிருஷ்ணா மிஷன் மாணவர்கள் இல்லத்தில், 15 ஆண்டுகளாக தங்கி படித்து வருகிறார். டில்லியில், ஸ்ரீதர்ஷின் கலைக்கூடம் சார்பில், டாக்டர் ஏ.பி.ஜே.அப்துல் கலாம் நினைவு ஞானச்சுடர் போட்டி நடந்தது. நாட்டின் பல மாநிலங்களை சேர்ந்த இன்ஜி., கல்லுாரிகள், பல்கலை மாணவர்கள் புதிய கண்டுபிடிப்புகளுடன் பங்கேற்றனர்.இதில், மாணவர் பாலு உருவாக்கிய பசுமை காருக்கு, தேசிய அளவில், 10ம் இடமும், தமிழக அளவில் முதலிடமும் கிடைத்தது.


இந்த கண்டுபிடிப்பை பாராட்டி, பாலுவுக்கு அப்துல் கலாம் நினைவு ஞானச்சுடர் விருது வழங்கப்பட்டு உள்ளது. விருது பெற்ற மாணவரை, அண்ணா பல்கலை துணைவேந்தர் ராஜாராம் மற்றும் பதிவாளர் கணேசனும் வாழ்த்தினர். பசுமை காரில் ஒருவர் மட்டும் அமர்ந்து ஓட்டலாம். இதை உள் அரங்க போட்டிகளுக்கு பயன்படுத்த முடியும். இதுகுறித்து, மாணவர் பாலு கூறியதாவது:
பெட்ரோலிய வாகனங்களை விட, 78 சதவீதம் மாசு குறைந்த இந்த காரை, ரயில், பேருந்து நிலையங்கள், உயிரியல் பூங்காக்கள், சிறுவர் பூங்காக்கள் மற்றும் வணிக வளாகங்களில் பயன்படுத்த முடியும். அதற்காக, குறைந்த செலவில், 20 பேர் அமரும் வகையிலான காரை, விரைவில் தயாரிக்க உள்ளோம் என்று அவர் கூறினார்.

மேலும் தெரிந்துகொள்ள இங்கே கிளிக் செய்யவும்

No comments:

Post a Comment

Want to Share This News With Friends?

Quick Search