Pages

Friday 26 February 2016

அணு வெடிப்பு சோதனை-இந்தியா (சிரிக்கும் புத்தர்)

சிரிக்கும் புத்தர் என்பது இந்திய ராணுவத்தில் இன்றும் பிரபலமான வார்த்தைகள். 1974 ஆம் ஆண்டு மே மாதம் 18ஆம் நாள் அகிலத்தையே நமது இந்தியா ஆச்சர்யத்திற்கு உள்ளாக்கிய நாள், ஆம் ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையில் நிரந்தர உறுப்பினராக அங்கம் வகித்த வல்லரசுகள் மட்டுமே செயல்படுத்தக் கூடிய அணுக்கரு வெடிப்பு சோதனையை நிகழ்த்தி உலகத்தையே தமது பக்கம் திருப்பியது இந்தியா. ராஜஸ்தான் மாநிலத்தில் உள்ள பொக்ரான் என்ற இடத்தில் கனடாவின் உதவியுடன் இந்த சோதனையை இந்தியா நிகழ்த்தி அதற்கு "சிரிக்கும் புத்தர்" என பெயரிட்டது. அப்போதைய இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி 1972 ஆம் ஆண்டில் செப்டம்பர் 7 அன்று பாபா அணு ஆராய்ச்சி மையத்தில் பணி புரியும் இந்திய அணு சக்தி வல்லுனர்களிடம் அவர்கள் வடிவமைத்த ஒரு அணுக்கரு வெடிப்பு சோதனைக் கருவியைத் தயாரித்து பரிசோதனை செய்ய அனுமதி வழங்கினார்.


தனது அணுமின் திட்டத்திற்கு ஆதரவளித்த அமெரிக்கா,கனடா போன்ற நாடுகளின் நிபந்தனையை மீறி இந்தியா இதனை நிகழ்த்தினாலும் இந்த சோதனையை "அமைதியான அணுக்கரு வெடிப்பு "எனக் கூறி அவர்களது நிபந்தனையை மீறவில்லை என விளக்கம் அளித்தது இந்தியா. சுற்றிலும் சீனா, பாகிஸ்தான் போன்ற எதிரிகளை எச்சரிக்கும் வகையிலேயே இந்த அணு வெடிப்பு நடத்தப்பட்டது என்று மேலை நாடுகள் கூறியது. எனினும் இந்தியா இந்த திட்டத்தை மிக ரகசியமாக மேற்கொண்டு வெற்றிகரமாக நடத்தியது. இதன் மூலம் ராணுவ பலத்தில் நாங்கள் யாருக்கும் குறைந்தவர்கள் இல்லை என்றும் காட்டியது. ராஜா ராமண்ணாவின் தலைமயிலான மொத்தமே 75 பேரைக் கொண்ட குழு இந்த சிரிக்கும் புத்தர் என்னும் அணு வெடிப்பு சோதனை ஆயத்தங்களில் ஈடுபட்டது.


இதில் முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர் அப்துல் கலாமும் ஒருவர் ஆவார். புத்தரின் பிறந்தநாளான புத்த பூர்ணிமாவில் செய்யப்பட்ட இந்த சோதனையால் உலக நாடுகள் இந்தியாவிடம் சிறிது அச்சம் கொண்டது என்பது மறுக்க முடியாத உண்மை,மேலும் இதனை எதிர்த்து கனடா அரசு இந்தியாவுடனான உறவை முறித்துக் கொண்டது. அமைதியான அணுக்கரு வெடிப்பு’ என்று பெயரிட்டதன் மூலம் இந்த நிபந்தனையை மீறவில்லை என்று இந்திய அரசு அறிவித்தது. புத்தர் சிரித்தார் என்னும் அடையாள சொல்லுடன் இந்தியாவில் முதன் முதலாக அணு வெடிப்பு சோதனை நிகழ்ந்த தினம் May 18.

No comments:

Post a Comment

Want to Share This News With Friends?

Quick Search