Pages

Wednesday, 24 February 2016

முதலிடம் பிரிட்டிஷ் ஏர்வேஸ்கே

2016ஆம் ஆண்டுக்கான  சிறந்த  பிராண்டுகளின் தரவரிசை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. இதில் நுகர்வு, வணிகம் இரண்டு பிரிவுகளின் சிறந்த பிராண்டுகள் பட்டியல் இடம்பெற்றுள்ளன. 2500 பேரிடம் நடத்தப்பட்ட ஆய்வின்  அடிப்படையில் தர வரிசை வெளியிடப்பட்டது.1600 போட்டியாளர்களின் நடுவே பிரிட்டிஷ் ஏர்வேஸ் முதல் இடத்தை பிடித்துள்ளது. கடந்த மூன்று வருடங்களாக பிரிட்டிஷ் ஏர்வேஸ் தான் முதல் இடத்தை பிடித்து வருகிறது. நுகர்வு, வணிகம் இரண்டிலும் இது தான் முதலிடம்.


இதனைத்தொடர்ந்து ரொலெக்ஸ் வாட்ச் நிறுவனம் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. லோகோ மூன்றாவது இடத்தையும், டைசன் நான்காவது இடத்தையும் பிடித்துள்ளது. ஆப்பிள் நிறுவனம் 7ஆவது இடத்திலும் கூகுள் 16ஆவது இடத்திலும் அமேசான் 19ஆவது இடத்திலும் உள்ளது. முதல்முறையாக BBC முதல் 20 இடத்தை தாண்டி வெளியே உள்ளது. கடந்த வருடத்தில் நான்காவது இடத்தில் இருந்த மைக்ரோசாப்ட் பின்னுக்கு தள்ளப்பட்டது.

Want to Share This News With Friends?

Quick Search