Pages

Wednesday 24 February 2016

நாற்காலியில் ஒய்யாரமாய் அமர்ந்திருக்கும் பல்லிகள்

நமக்கு பல்லிகளை பார்த்தாலே பயமாகவும் அறுவறுப்பாகவும் இருக்கும். ஆனால் அமெரிக்காவை சேர்ந்த ஹென்ரி என்பவர் பல்லி மீது அதிகளவு அன்பு, ஆர்வம் கொண்டவர். பல்லியின் மீது இருந்த அன்பினால் தன் பெயரோடு லிஸார்ட் என்று சேர்த்து கொண்டார். அவர் ஹில்ஸ் கஃபே என்ற ஹோட்டல் ஒன்று நடத்தி வருகிறார். அங்கு வித விதமான பச்சை பல்லிகள் வளர்க்கிறார்.


அந்த பல்லிகள் குட்டி சோபாவில் படுத்துக்கொண்டு அனைவரையும் பார்த்துக்கொண்டிருக்கும். யார் என்ன செய்தாலும் அது ஒன்றுமே செய்யாதாம். 50 விதமான பல்லிகளை வீட்டில் வளர்க்கிறார். அதை போட்டோ எடுத்துக்கொண்டு அதனுடன் விளையாடுகிறார். பல்லி மாதிரி ஒரு அமைதியான அற்புதமான பிராணி இருக்க முடியாது என்று கூறுகிறார். இதை பார்த்து அனைவரும் ஆச்சரியப்படுகிறார்கள். பல்லிகள் அற்புதமானவை என்பதைக் காட்டுவதே என் நோக்கம்’’ என்கிறார் ஹென்றி.

No comments:

Post a Comment

Want to Share This News With Friends?

Quick Search